செலக்ஷன் தொடரில் ரிஃபைனிங் குறித்து தெரிந்துகொள்ளப்போகிறோம். அதாவது நாம் செலக்ட் செய்யும் படங்களுக்குத் தேவையான அளவில் அதன் Edge ஐ ரிஃபைன் செய்வது எப்படி என்ற பாடமேயாகும்.
படம் 11_0 வைத் திறக்கவும்.
Tool Bar லிருந்து Quick Selection Tool ஐ Default Mode ல் எடுத்துக்கொள்ளவும்.
படத்தில் தெரியும் ஆற்று நீர் மீது Click & Drag செய்து தொடர்ச்சியாக (ஆற்றுநீரை) நிரப்பவும். Drag செய்யும்போது சில சமயங்களில் உங்கள் செலக்ஷன் ஆற்றைக் கடந்து கரையேறினாலும் பயப்படத் தேவை இல்லை. ;-)
படம் 11_1 ஐ பார்வையிடவும். சாதாரணமாக செலக்ட் செய்யும்போது படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதைப் போன்று தேவைக்கு அதிகமான இடங்களும் Selection செய்யப்படலாம். அதனால் ஒன்றும் பிரச்சனை ஏற்படாது. Option Bar லிருந்து Subtract from Selection Tool ஐ தேர்வு செய்து (தேவைக்கு அதிகமாக செலக்ட் ஆகிவிட்ட) பச்சைப் புல் வெளியில் ட்ராக் செய்துவிடவேண்டும்.
இப்போது படம் 11_2 ல் காண்பித்தபடி ஆற்று நீர் மட்டும் தேர்வாகியிருக்கும்.
சரி, செலக்ஷனை எப்படி ரிஃபைன் செய்வது?