Friday, October 1, 2021

Did You Know virtualexpo.world

 பார்த்து ரசியுங்கள் DUBAI EXPO 2020 !

இங்கு கிளிக் செய்யுங்கள் https://virtualexpo.world



DUBAI EXPO 2020 !

வெத்து பாலைவனம்….. வெறும் மண்ணு…இன்னைக்கு பொன் வெளையற பூமியா மாறிடுச்சி…மேஜிக்காய்யா? ஆமாம் மேஜிக்தான்..ஒரு மனுஷனோட தனிப்பட்ட மூளை செய்த மேஜிக்…..இத்தனைக்கும் அரசாட்சி… எவனும் ஏன் செய்யலைன்னு கேள்வி கேட்க முடியாது… ஆனா இந்த மனிதர் தன் மனசாட்சி கேள்விக்கு பயந்தார்… நாளைக்கு மறுமையில்… மக்களுக்கு என்ன செய்தாய்ங்கற கேள்வி வந்தால்..

உலகமே மூக்குல வெரலை வைக்கறாய்ங்க… எப்படி சாத்தியம்? இதோ கண் முன்னே விடை.. மனமிருந்தால் மார்க்கம் உண்டு… சமீபத்துல துபாய் மன்னர் ஆங்கில பத்திரிக்கைக்கு தந்த ஒரு பேட்டி…

எதுக்கு இவ்வளவு உயரம் உயரமான கட்டிடங்களை கட்றீங்க?

என் நாட்டை உலகம்  தலையை நிமிர்ந்தே பார்க்கணும்….!

ஒங்களுடைய நோக்கம்தான் என்ன?

என் மக்களுக்கான அனைத்து வசதிகளும் ஹெல்த்… கல்வி… அத்தனையும் கிடைக்க செய்யணும்..

வெறும் வாய் வார்த்தை அல்ல…ஒரு சாதனை மனிதனின் சரித்திர வாக்குமூலம்……இன்னைக்கு உலகமே துபாயின் இன்ஃப்ரா ஸ்ட்ரெக்சரை பார்த்து வியக்கிறது!

 வெத்து வாய் சவடால்கள்…..இரு இனங்களை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்தல்….ஆடம்பரங்கள்… நடிப்புகள்… இதையே பார்த்து சோர்ந்து போன கண்களுக்கு இது போன்ற நிஜ தலைவனை பார்க்கறப்ப மனசு பெருமிதம் கொள்கிறது ….!

இவரோட அதீத திறமைக்கு உதாரணமா ஒரு நிகழ்வு… தன் நாட்டுக்கு வர மறுத்த டிஸ்னி லேண்டுக்கு போட்டியா ஆரம்பித்த துபாய்லேண்ட்…நாங்க ஏன் மத்த நாடுகளுக்கு போகணும் எங்களை தேடி நீங்க வாங்க… வரவழைச்சார் உலகத்தையே தன் இருப்பிடத்துக்கு!

ஒருத்தர் கைல மண்ணை தந்துட்டு போனாங்க முன்னோர்கள்….

இவர் அதை பொன்னாக்கிட்டார்

வாழ்த்துக்கள் துபாய் !

Congrats…..!

His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum….!

Mohamed Rafiudeen


No comments: