#நற்செயலே_சிறந்த_உபதேசம்.....
அதிகாலைத்
தொழுகையை அண்ணல் நபி (ஸல்)
அவர்களுக்குப் பின்னால் நின்று கூட்டாகத் தொழுவதை
வழமையாக் கொண்டவர் அபூதுஜானா (ரலி) அவர்கள்..
ஆயினும்
அதில் சின்ன சிக்கல் என்னவென்றால்…
தொழுகை முடிந்த உடனேயே பள்ளிவாசலை
விட்டு வேகமாக வெளியேறிவிடுவார்...
இதனை நபி (ஸல்) அவர்களும்
கவனித்தார்கள்... !
ஒருநாள்
அவ்வாறு வெளியேறும்போது அபூதுஜானாவை நிறுத்தி நபிகளார் கேட்டார்கள்...
"அபூதுஜானா…
உமக்கு அல்லாஹ்விடம் கேட்பதற்கு எதுவுமே இல்லையா?”
அபூதுஜானா
(ரலி): "ஏன் இல்லை, அவனிடம்
கேட்பதற்கு நிறைய இருக்கிறது அல்லாஹ்வின்
தூதரே! ஒரு கண நேரம்கூட
அவனுடைய உதவியின்றி என்னால் வாழ முடியாது...”.
