Friday, December 10, 2021

ஒரு இசை சேகரிப்பாளரின் பயணம் அலிகான் அவர்களுடன் ரஞ்சித் மிலிந்தன் நேர்காணல்

பவளக்கொடியைத் தேடி..

ஒரு இசை சேகரிப்பாளரின் பயணம்

அலிகான் அவர்களுடன் ரஞ்சித் மிலிந்தன் நேர்காணல்

(செப்டம்பர் 2011 ல் வெளிவந்த நேர்காணல்.மீள்பதிவு)

.......................................................................................................................

 



சேகரிப்பாளர் அலிகான திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டை என்ற சிற்றூரில் 1939ல் பிறந்தவர். தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்ட படங்களிலிருந்து இன்று வரைக்குமான சினிமாப்பாடல்களை கால் தேயத் தேய சேகரித்து வைத்திருக்கிறார். ஆரம்பகால சினிமான கிராமஃபோன் இசைத் தட்டுக்களைப் பற்றிய கேள்விகளைத் தொகுத்ததில்,கிடைத்த பேட்டிதான் இது.  இத்தகைய சேகரிப்புகளை பாதுகாக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொள்வதே பொருத்தம் எனக்கூறும் இவர் ஆற்காட்டு ரோட்டில் ராம் தியேட்டர்  அருகே ஓர் ஆய்வு மையம் வைத்துள்ளார் . அங்கே செல்பவர்கள்  தேவையான தமிழ் படப்பாடல்களையும் இந்திப்பட பாடல்களையும் உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். வானொலி, தொலைக்காட்சி அச்சு ஊடகம் எல்லாவற்றிலும் பங்கேற்றிருக்கும் ,பதிவு செய்யப்பட்டிருக்கும் அலிகான் அவர்களை காட்சிப் பிழைக்காக நேர்காணல் செய்தவர் ரஞ்சித் மிலிந்தன்.

....................................................................................

எங்கும் கிடைக்காத பனை ஓலை கறி சோறு : Grace Interview About Karunaa's Rat...