Thursday, March 31, 2011

பொறுப்புணர்ச்சி தான் தலைமைத்துவத்தின் அடையாளம்!

by நீடூர் SA மன்சூர் அலி M.A., B.Ed.,
தலைமைத்துவம் (Leadership) என்பதை சுருக்கமாக விளக்கி விட விரும்பினால் அதனை “பொறுப்பு” (Responsibility) என்ற ஒரே சொல்லில் வைத்து விளக்கி விடலாம்! .
ஆமாம், தலைமைத்துவத்தையும் பொறுப்பினையும் நாம் பிரிக்கவே முடியாது!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப் படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் தம் குடி மக்கள் குறித்து விசாரிக்கப் படுவார். குடும்பத்தலைவன் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப் படுவான்.
மனைவி தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளி ஆவாள். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவாள். பணியாள் – தன் எஜமானனின் செல்வத்திற்குப் பொறுப்பாளி ஆவான். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவான். அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள்.(நபி மொழி ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
அபூ பக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் கலீஃபாவாக தேர்ந்து எடுக்கப் பட்ட போது, மதீனாவே மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால் அந்த மகிழ்ச்சியில் இரு சிறுமிகள் மட்டும் பங்கு பெறவில்லை. காரணம், அபூ பக்ர் அவர்கள், தம் வீட்டின் அருகே வாழ்ந்த அந்த சிறுமிகளுக்கு, அவர்களது ஆடுகளிலிருந்து பால் கறந்து கொடுப்பது வழக்கம். அபூ பக்ர் அவர்கள் கலீஃபாவாக தேர்ந்து எடுக்கப் பட்ட போது, அந்த சிறுமிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது அபூ பக்ர் அவர்கள் வழக்கம் போல தங்களுக்குப் பால் கறந்து தருவார்களா – என்பது தான் அந்த சந்தேகம்.
இந்தத் தகவல் அபூ பக்ர் சித்தீக் அவர்களின் காதுகளில் விழுந்தது. உடனே அவர் அந்த சிறுமிகள் இருக்கும் இடம் தேடிச் சென்று சொன்னார்: இறைவன் அருளால் என் பதவி எனது வழக்கமான வேலைகளை மாற்றி விடாது என்று நம்புகிறேன். நான் நிச்சயமாக உங்களது ஆடுகளில் இருந்து பால் கறந்து கொடுக்கும் பணியை தொடருவேன்! அதன் பின்னர் அந்த வழியாக அவர் செல்லும் போதெல்லாம், “உங்கள் ஆடுகளில் பால் கறக்க வேண்டுமா?” என்று கேட்பது வழக்கம்.
இதனைத் தான் நாம் பொறுப்பு என்கிறோம். இந்தப் பொறுப்புணர்ச்சி தான் தலைமைத்துவத்தின் அடையாளம் என்கிறோம்.

ஜப்பானிடமிருந்து நாம் அறிந்து கொள்ளவேண்டியது.

 ஜப்பானிடமிருந்து நாம் அறிந்து கொள்ளவேண்டியது.
அமைதிக் காத்தல்,பொறுப்பு,நிதானம்,மற்றவருக்கு உதவுதல், அலட்டிக்கொள்ளாமை, மன உறுதி, உண்மையான உழைப்பு. மற்றவருக்கு பாதிப்பு ஏற்படாமல் அதே நேரத்தில் அவர்களுக்கு உதவுவது இன்னும் எத்தனையோ இருந்தாலும் அதனை ஜப்பானில் தற்பொழுது எற்பட்ட பாதிப்பில் நாம் அனைவரும் பார்த்து அதிசியத்தோம்
ஜப்பான் பூமி அதிர்ச்சி  / சுனாமி /நூக்லியர்  ரியக்டோர்ஸ்  பாதிப்பு    ஏற்பட்டபோது அவர்களிடமிருந்த அமைதி அதிசியமானது .
 அவர்கள் யாரும் தனது மார்பில் அடித்துக்கொண்டு கதறவில்லை.
தண்ணீர் கிடைக்காதபோதும் தண்ணீர் வேண்டி அவர்கள் முறையாக வரிசையில் நின்று அமைதி காத்தனர்.
அவர்கள் கட்டிய கட்டடங்கள் மிகவும் பாதிப்பு ஏற்படாமல் உறுதியாக நின்றன
தேவைக்கு மட்டும் அவர்கள் வேண்டி நின்றனர், அதிகப்படியாக அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

பாதிப்பு உண்டானவுடன் தனது தேவைக்கு கடைகளில் புகுந்து கொள்ளை அடிக்கவில்லை
கடைகளில் மிகவும் விலை
யினை குறைத்து விற்றனர்.
மீடியாக்கள் அற்பத்தனமான செய்திகளை வெளியிடவில்லை. மக்களை பாதுகாப்பதற்கான செய்திகளுடன் அவர்களுக்கு மன அமைதிக்கான வழிகளை செய்துக் கொண்டிருந்தன .

Tuesday, March 29, 2011

என்ன கொடுமை - இது கவிஞர் இரா .இரவி



கிரிக்கெட் காண அனுமதிச் சீட்டு தாருங்கள்
கிட்னி தருகிறேன் என்கிறார்     ரசிகர்
உயிர் காக்கும் உன்னதத்தை
கேளிக்கைக்காக தருகிறேன் எனும் அவலம்
கிட்னியைத்   தேவைப்படும் நண்பனுக்கு
குடும்ப உறுப்பினர்க்குக் கொடுக்கலாம்
கிட்டினியை இட்லிக்கு வைக்கும்
சட்னியைப் போல தருகிறேன்  என்கிறார்
ஊடகங்கள் போட்டிப் போட்டு
ஊதி ஊதிபெருசாக்கி விட்டனர் கிரிக்கெட்டை
கால்ப்பந்துக்கு ஈடாகுமா ?  கிரிக்கெட்
கபடிக்கு    ஈடாகுமா ?  கிரிக்கெட்
குளிர்ப் பிரதேசத்து ஆடையை
வெப்பப்பூமியில்   அணியும் மடமை
ஆவலுடன் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்
அனைவரையும் முட்டாள் ஆக்குகின்றனர்
முந்தைய விளையாட்டுகளில் நடந்த
சூதாட்டங்கள் அம்பலமாகி விட்டது
ஒழுக்கம் என்றால் என்னவென்று அறியாத
ஒழுக்கம் கெட்ட கிரிக்கெட் வீரர்கள்
விளையாட்டை விளையாட்டாகப் பாருங்கள்
விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள்
இந்தியா பாகிஸ்தான்  கிரிக்கெட் விளையாட்டை
இந்தியா பாகிஸ்தான் போராகப் பார்க்காதீர்கள்
பிரதமர்களும் முதல்வர்களும்  கிரிக்கெட்டைப்
பார்க்க நேரில் செல்வதை நிறுத்துங்கள்
விளையாட்டை வெறியாக மாற்றாதீர்கள்
விரயம் செய்யாதீர்கள் பொன்னான நேரத்தை
–
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Source : http://eraeravi.wordpress.comஎன்ன கொடுமை இது கவிஞர் இரா .இரவி

Saturday, March 26, 2011

எம்மாகிட்ட கை கூலி எத்தா வாங்கினாரு! - காசுக்கு என்னை விக்காதீங்க என்று சொல்லிபார்தேன்! !

அங்கே இங்கே  தேடவேணாம்    தானா வருது காசு 

எம்மாகிட்ட கை கூலி எத்தா வாங்கினாரு
எம்மா கொடுத்த  பணத்திலே என்னை பெத்து வளர்த்தாரு,
இப்போவந்து என் வரவை எதிர் பாக்கிறாரு.

எத்தாபேரு    ஆண்பிள்ளை 

எங்க அம்மா பெயர் பொம்பளை,
இப்போ...என்   பெயர் மாப்பிள்ளை ,

 மாப்பிள்ளை நான் ஆனதாலே மதிப்பு  ஏறி  போச்சு,
முக்கியம்மா நாலுபேரு மதிப்பு போடலாச்சி.....
அரபு நாடு போய் வந்துட்டேன் அதுவும் பெரிய  பேச்சு,
அங்கே இங்கே தேட வேண்டாம் தானா வருது காசு

காசுக்கு என்னை விக்காதீங்க என்று சொல்லிபார்தேன்
காலமெல்லாம்  கெட்டப்பெயர் நல்லா சொல்லிபார்த்தேன்
உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு எம்மா சொல்லுறாங்க
இந்த ஒன்னும்  தெரியா  மாப்பிள்ளைக்கா  இவ்வளவு ரேட்டு

எம்மே(M.A) படிச்ச மாப்பிலேன்னு எத்தா  சொல்லுறாரு
எம்மாம்! பெரிய படிப்புன்னு ரேட்டை ஏத்துறாரு
படிச்ச நானு பணம் பறிச்சா புத்திசாலி யாரு
பின்பு  வரும் கண்ணீரை துடைப்பது யாரு

பெண்ணுக்கு மஹர் கொடுக்க சொல்லி மார்க்கம் சொல்லுது
ஆண் எனக்கு  மஹர் கொடுக்க யார் சொன்னது
மண்ணுக்கு நீங்க பாரமாக வந்தா சேர்ந்தீங்க
பெண் இனத்தை கொஞ்சமாச்சும் வாழ விடுங்க .


பாடியவர் தேரிழந்தூர்  தாஜுதீன்


"இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!" என நபியவர்கள் கூறினார்கள்.
Prophet Muhammad (s) said: “Among my followers the best of men are those who are best to their wives, and the best of women are those who are best to their husbands. To each of such women is set down a reward equivalent to the reward of a thousand martyrs. Among my followers, again, the best of women are those who assist their husbands in their work, and love them dearly for everything, save what is a transgression of God’s laws.”

Friday, March 25, 2011

மனம் மகிழுங்கள் - 41 : குறையற்ற மனம் - அளவற்ற மகிழ்வு

மனம் மகிழுங்கள்!
41 - குறையற்ற மனம் - அளவற்ற மகிழ்வு
- நூருத்தீன்

நாம் என்ன செய்தாலும் அதில் மகிழ்வடைகிறோமா; மனம் மகிழ்வடைகிறதா என்பது முக்கியம். அந்தச் செயல் தப்புச் செயலாய் இருக்கக்கூடாது என்பது அதைவிட முக்கியம். “ஜட்ஜய்யா! கொலை செய்வது மகிழ்வளித்தது; அதனால் கழுத்தை அறுத்தேன்” என்றால் நீதிபதி கழுத்திற்குத் தீர்ப்பு எழுதி விடுவார்.

ஒருவர் உத்தியோகம் செய்கிறார்; ஆனால் அதில் அவருக்கு அறவே விருப்பமில்லை; அவருக்குச் சம்பந்தமில்லாத வேலை. இன்னொருவர் - அவரது தகுதிக்கேற்ற ஊதியமில்லை; விருப்பத்திற்கேற்ப ஓய்வோ விடுமுறையோ கிடைப்பதில்லை. மனம் லயிக்கும் கலை, விளையாட்டு எதையும் கற்க இயலவில்லை; மனதிற்குப் பிடித்த காரியம் எதுவும் செய்ய முடியவில்லை; இல்லை... முடியவில்லை... என்று ஏகப்பட்ட ‘லை’ களுடன் ஒவ்வொருவருக்கும் தனிமை; மன அழுத்தம்; விரக்தி.

ஒருவர் இத்தகைய பரிதாபகர நிலைக்கு ஆட்பட்டுவிடுவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.

பட்டியல்!

அவர் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் பட்டியல்!
சென்ற அத்தியாயம் கேளுங்கள் ராசாவே பற்றி பின்னூட்டமும் நண்பர்களின் மின்னஞ்சலும் ஆச்சரியம் பகிர்ந்து கொண்டன. சில விளக்கங்கள் பார்ப்போம் -

முதலாவது ‘கேட்பதும்’ ‘கொடுப்பதுவும்’ ‘மறுப்பதுவும்’ நமது மனங்களில் தவறான பரிமாணத்தில் பதிந்துள்ளன. அதனாலேயே  கேட்கும்போதும் சரி; மறுக்கும்போதும் சரி - பெரும்பாலும் நாம் முற்கூட்டியே மனதில் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு preconceived notion-டனேயே உரையாடிக் கொள்கிறோம். இது தவறு. Preconception என்பதே தனியொரு நீளமான டாபிக். அது இங்கு வேண்டாம்.

அடுத்தது, கேட்பதிலும் கொடுப்பதிலும் மறுப்பதிலும் உண்மையும் நேர்மையும் வேண்டும். உள்நோக்கம் தவறு. நியாயமான ‘கேட்டல்’ தாட்சண்யமின்றி மறுக்கப்பட்டால், அது கேட்டவரின் குற்றமல்ல. கேட்டவர் கூச்சப்பட ஒன்றுமில்லை. கௌரவத்திற்கும் இழுக்கில்லை. மறுத்தவரின் கீழ்மையைப் பார்த்து அவர்தான் பரிதாபப்பட வேண்டும்.

மாறாய், மறுப்பவர் நியாயமான காரணத்துடன் மறுத்து அதைக் கேட்பவர் உள்நோக்கம் கற்பித்துக் கொண்டால் அது மறுப்பவரின் குற்றமாகாது. கேட்டவரின் கீழ்மை.

இவை இவ்வாறிருக்க எதை யாரிடம் கேட்பது என்பது இயல்பாய் நம் மனங்களில் பதிந்திருக்கும் பொது அறிவு. ‘மக்களின் தேவை எங்களின் சேவை’ என்று வங்கியொன்று விளம்பரம் செய்கிறது என்பதற்காக அதன் கிளையொன்றில் நுழைந்து, “செலவிற்குப் பணமில்லை. இரண்டாயிரத்து நூற்றி இருபத்தஞ்சு ரூபாய் கொடுங்கள்” என்று யாரும் கேட்கப்போவதில்லை. மேலாளர் போலீஸிற்கோ கீழ்ப்பாக்கத்திற்கோ போன் செய்வார்.

கணக்குத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போது ஆசிரியரிடம் சந்தேகம் கேட்கக் கூடாது. அவர் குட்டினால் வலிக்கும். அது மிகச் சரி. ஆனால் வகுப்பறையில்? “போடா மண்டு. எத்தனைமுறை சொன்னாலும் உனக்குப் புரியாது” என்று அவர் மாணவனின் மண்டையில் தட்டினால் அனேகமாய் மாலையில் அவர் தனி வகுப்பு நடத்தி சம்பாதித்துக் கொண்டிருக்கும் சாத்தியம் அதிகம்.

தொழில், திருமணம், கார் போன்றவை எல்லாம் வெற்றிகரமாய் அமைவதற்கும் கேட்பதற்கும் என்ன சம்பந்தம்?

குளிப்பதற்கு சோப்பு வேண்டும் என்றால் நேராய்க் கடைக்குச் சென்று வாங்கி வந்துவிடலாம். எந்தப் பிரச்சினையும் இல்லை. கார் வாங்க வேண்டுமென்றால்? அதற்கான ஆலோசனைகளை விபரங்களை கடன் உதவிகளை யார் யாரிடமெல்லாம் கேட்பீர்கள் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்; புரியலாம்.


அரசாங்கத்தின்மீது குறை; மனைவி மீது குறை; தம் குழந்தைகளின் மீது குறை; நாள் நட்சத்திரத்தின் மீது குறை; முதலாளி மீது குறை; பொருளாதாரம், தம் துரதிருஷ்டம், குறைவான கல்வித் தகுதி, மாமன், மச்சான், மாமனார் என்று குறை... குறை... கூடை நிறையக் குறை.

குறைகளில் நியாயம் இருக்கலாம்; அநியாயத்திற்கு அபத்தக் களஞ்சியமாக இருக்கலாம். அதன் அலசல் இங்கு கருப்பொருளன்று.

இந்தக் குறைகளெல்லாம் சேர்ந்து சேர்ந்து அவரது மனதில் ஒரு தீர்மானம் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம். ‘குறைகள் என் வாழ்க்கையில் வற்றாத ஊற்று என்றாகிவிட்டது. எனவே நான் வாழ்க்கையில் துயருற்றுக் கிடக்க எனக்குப் போதுமான நியாயம் இருக்கிறது...’ என்று விரக்தி! கன்னத்தில் கை!

தப்பு! இது பெரும் தப்பு! நமது எண்ணத்திற்கு ஏற்பவே வாழ்க்கை அமைகிறது. செயலுக்கு ஏற்பவே முடிவு அமைகிறது.

முழ நீளத்திற்கோ, சென்னையின் நூறடி ரோடு அகலத்திற்கோ உங்களிடம் குறைகளின் பட்டியல் இருக்கலாம். அவை வெற்று லிஸ்ட்! இணைய விரும்பும் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் இருக்க, தன்னிஷ்டத்திற்குத் தயாரித்துக் கொள்ளும் வேட்பாளர் பட்டியல் போல் அது உபயோகமற்ற பட்டியல். நீங்கள் விரும்பியவாறு உங்களால் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இயலாவிட்டால், விரும்பிய செயல் புரிய இயலவிலலை என்றால், எத்தகைய சாக்குப்போக்குச் சொல்லியும் பயனில்லை.

ஏன்?

தலையைச் சுற்றிப் பாருங்கள்; அல்லது ஊரைச் சுற்றிப் பாருங்கள். நொடிதோறும் எத்தனை பேர் எத்தனை சவால்களை வென்று கொண்டிருக்கிறார்கள்?

கல்வித் தகுதி இல்லாதவர் கூடச் சாதனையின் விலாசத்தைச் சுமந்து கொண்டு திரிகிறார்.

‘உலகப் பொருளாதாரமே சுணங்கிக் கிடக்கிறதாம்; அதனால் நான் இன்று வேலைக்குப் போக மாட்டேன்’ என்றெல்லாம் மனைவியிடம் வம்பு பண்ணாமல் சிரமப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பவர் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

ஏகப்பட்ட பிள்ளை குட்டிகளுடன் இருப்பவர் உற்சாகமாய் இருக்கிறார்;

மனைவியுடன் சண்டைக் கோழியாய் வாழ்ந்தவர் ஒரு சந்தர்ப்பத்தில் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு அணுதினமும் காதல் என்று இல்லறத்தை மகிழ்வாய் மாற்றிக் கொண்டுவிட்டார்.

தெருவுக்குத் தெரு இப்படி நிறைய உதாரணங்கள் காணலாம்.

மனம் மகிழுங்கள் - 41 : குறையற்ற மனம் - அளவற்ற மகிழ்வு


Tuesday, March 22, 2011

அரசியல் உறுதிப்பாடினால் சிங்கப்பூர் வழிகாட்டுகிறது,

அரசியல் உறுதிப்பாடினால் சிங்கப்பூர் வழிகாட்டுகிறது   பல  இன ஐக்கியத்திற்குப் பாராட்டு.
  சிங்கப்பூர் இப்போதைய தலைமைத்துவத்தின் கீழ் நெடுங்காலம் அரசியல் உறுதிப்பாட்டுடன் விளங்கி வரும்  சிங்கப்பூரில் விரைவான பொருளாதார் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதற்கு வலுவான தலைமைத்துவமும் மக்களின் கடின உழைப்புமே காரணம்.இந்த இரண்டு சிறப்புகளையும் பெற்றிராததால் தான்  வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் பல தலை தூக்க முடியாத நிலைமையில் இன்று  இருந்து  வருகிறது.
   வளச்சி  வரும் ஆசிய நாடுகளுக்கு சிங்கப்பூர் மிகச் சிறந்த முன்னோடியாக திகழ்கிறது. வளச்சி பெற்றுள்ள நாடுகள் கூட சிங்கப்பூரிடமிருந்து  சிலவற்றை எடுத்துக்கொள்ள  இயலும். பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினை தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை தரம் பல்மடங்கு உயர்ந்துள்ளது.
   மலேசியா ,தாய்லாந்து , லாவோஸ் , தென்வியட்னாம்,ஜப்பான், ஹான்காங் ஆகிய தென்கிழக்காசிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வந்த பின்பு அறிந்த உண்மை இது .
சிங்கப்பூரின்  அரசியல் பொருளாதார  சமூகவியல் சிறப்புகள் வாய்த்தது.
இங்கு நிலவும் பல  இன மக்களின் ஒருமைப்பாடு தண்மை  வெகுவாக கவரக்  கூ டியது.  ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களைக் கொண்டு சில நாடுகளில் இன ஐக்கியம்  ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது.
    சிங்கப்பூரில் பல இன மக்கள்  வாழ்ந்துவரினும் அரசியல் சமுதாய நீதி  ஆக்கியவற்றை தலைமைத்துவம் வழுவாது பேணி வருவதால் இங்கு இனவாத பிரச்னைக்கு என்றுமே இடமிருக்காது,  சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் சாசனத்தின் மூலம் உத்தரவாதமளிக்கக் கூடிய முற்போக்குக் குடியரசாக   சிங்கப்பூர் விளங்குகிறது.
  
     நாட்டு நடப்புகளை சிங்கப்பூர் மக்கள் நன்கு உணர்ந்தவர்களாக உள்ளனர் .
உழைத்து முன்னேற   விரும்பும் செயல் வேகம் மக்களிடம் மேலோங்கி நிற்கிறது .இதனால் வெற்று  அரசியல் முழக்கங்களுக்கு  இடமேற்படாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். சிங்கப்பூர் போன்ற செயல் முனைப்பு உள்ள  சமுதாயத்தில் அரசியல் சந்தர்பவாதங்களுக்கும், சுரண்டலுக்கும் என்றைக்குமே இடமிருக்க முடியாது .

    ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக சிங்கப்பூர்தான் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கின்றது .இந்த வளர்ச்சி வேகம் சிங்கப்பூரில் தொடர்ந்து இருந்து வரும் .வெளிநாட்டு மூலதனங்களைக் கவரும் வகையில் சிங்கப்பூரின் பொருளாதாரக்  கொள்கைகள் இருப்பது இதற்கு நல்ல அடிப்படை.

   பயண தொழில் வளர்ச்சியிலும் சிங்கப்பூருக்கு சிறப்பான இடம் எப்பொழுதும் இருக்குமாறு செயல்படுகிறது .சிங்கப்பூருக்கு வரும் பணக்கார பயணிகள் தங்கள் தாயகத்தில் இருப்பது போன்று உணரக்கூடிய  அளவுக்கு பயணத்துறைப் பணிகள் இங்கு சிறப்பாக இருக்கின்றன.

முஹம்மது அலி ஜின்னா, நீடூர்.)

(nidurali" "நீடூர்அலி")