Friday, May 21, 2010

நான் உனக்கு எதில் குறை வைத்தேன்!

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
 சிராஜ் அப்துல்லாஹ் ஆல்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?


அன்பார்ந்த சகோதர, சகோதரரிகளே இந்த கேள்வி கேட்கப்டாத குடும்பங்கள் உள்ளதா?  உங்கள் அன்பிற்கினியவர்கள் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேட்டுவிட்டால் எப்படி இருக்கும் என்பதை ஒரு கணம் யோசித்துப்பாருங்கள்.

இந்த கேள்வியை கேட்டுவிட்டால்  ஆத்திரப்படாதவர்கள் எவரேனும் இருப்பார்களா? என்னைப் பார்த்து இக்கேள்வியை கேட்கிறாயே உனக்கு அவ்வளவு துணிச்சலா? என்று பதில் வரும் உடனே என் இஷ்டம் எனக்கு என்ன பிடிக்குதோ அதைத்தான் செய்வேன் என்று சாக்கு போக்கு கூறி பிரச்சினையிலிருந்து தப்பித்து இடத்தை காலி செய்துவிடுவார்கள்.

சரி இந்த கேள்வியை இவர்கள் கேட்டால் எப்படி இருக்கும்! சுயபரிசோதனை செய்துப் பார்ப்போமா?
உங்களை பெற்ற தாய் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறாள்
தாய்
ஏன்டா! மகனே நான் 10 மாதம் உன்னை வயிற்றில் சுமந்து பாலுட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்தேனே தனிக்குடுத்தம் போன நீ வாரம் ஒரு முறை கூட வந்து என்னை பார்ப்பதில்லையே ஏன்டா? தாய் ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லடா என் மகனே?
மகன்
சரி விடும்மா? ஏதோ ஊர் உலகத்துல எவனும் செய்யததா நான் செய்துட்டேனா? இதைப் போய் பெரிசு பண்ணி பேசுறியே உனக்கு அறிவு இருக்கா? எனக்கு பிசினஸ்-ல ஆயிரத்து எட்டு பிரச்சினை சரியா கவனிக்க முடியல அதனால உன்னை வாரம் ஒரு முறை கூட வந்து பார்க்க முடியல? இப்ப என்னாங்கறா? உன்னை பார்க்காதது ஒரு குத்தமா? அப்போ என்னை உன் பிள்ளை இல்லைன்னு சொல்லிடுவியா? என்ன!
உங்களுடைய வாதத்திறமையால் உங்களை பெற்ற தாயின் வாயை அடைத்துவிட்டீர்கள்! அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்! 

உங்கள் தந்தை இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறார்!
தந்தை
ஏன்டா! மகனே உன்னுடைய 5 வயசுல உனக்கு பொம்மை கார் வாங்கி கொடுத்தேன், 10 வயசுல உனக்கு சின்ன சைக்கிள் வாங்கி கொடுத்தேன்! 20 வயசுல உனக்கு மோட்டார் பைக் வாங்கி கொடுத்தேன்! 25 வயசுல உனக்கு கல்யாணம் பண்ணி அழகு பார்த்தேன் ஆனா நீ சம்பாதித்தவுடன் ஒரு சல்லி காசு கூட கிழவனான எனக்கு கொடுப்பதில்லையே! தந்தை ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லடா என் மகனே? இந்த வயசான காலத்துல நான் யாருக்கிட்ட டா போய் கை ஏந்துவேன்! ஏன்னிடம் மருந்துவாங்க காசு இல்லை ஒரு 100 ரூபாய் இருந்தா கொடுடா?
மகன்
என்னப்பா? உனக்கு அறிவு இருக்கா! சின்ன வயசுல நான் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்ததை போய் இப்ப சொல்லிக் காட்டுறியே? நீ எல்லாம் ஒரு அப்பனா? இது உனக்கு நல்லா இருக்கா? வயசாகி போனதால புத்தி கெட்டுப்போச்சா! இப்ப என்ன உனக்கு காசுதான வேணும் இந்த 5 ரூபாயை வெச்சுகிட்டு டீ, பன்னு சாப்பிடு இதுக்கப்பறம் காசு கீசுன்னு எங்கிட்ட வந்துடாத! மருந்துவாங்க காசு வேணும்னா உன்னுடைய இன்னொரு மகனிடம் போய் கேள்! என்ன தொல்லை பண்ணாத!
உங்களுடைய வாதத்திறமையால் உங்கள் தந்தையாரை வாயடைக்க செய்தீர்கள்! நீங்களோ அவரை சமாளித்துவிட்டீர்கள்! அந்த இடத்தில் வெற்றி பெற்றுவிட்டீர்கள்!

உங்கள் மனைவி இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறார்!
மனைவி
என்னங்க! நமக்கு திருமணம் ஆகி 10 வருடங்களாகி விட்டது! அழகான 2 குழந்தைகளும் 2 பிளாட்டு நிலமும், கை நிறைய வருமானம் அபரிமிதமாக இருக்கு! இத்தனை காலம் என்னோடு அழகா வாழ்ந்து குடும்பம் நடத்திய நீங்கள் இப்போது என்ன பிடிக்கவில்லை என்று கூறுகிறீர்களே மனைவி ஸ்தானத்திலிருந்து நான் உங்களுக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லுங்கள்? ஏன் இன்னொரு கல்யாணம் செய்ய ஆசைப்படுறீங்க நானும் என் குழந்தைகளும் உங்களை விட்டா எங்க போவோம்?
   
கணவன்
என்ன ரொம்பத்தான் ஓவரா பேசுரே! பொம்பளைன்னு பார்க்கறேன் இல்லன்னா நடக்கறதே வேற? கணவன் என்கிற மரியாதை போயிடுச்சா? இந்த பேச்சே போதுமே உன்ன உங்க அம்மா வீட்டுக்கு அனுப்ப!
 எனக்கு வயசு இருக்கு, வருமானமும் இருக்கு இன்னொரு கல்யாணம் என்ன 4 கல்யாணம் கூட செய்ய தெம்பு இருக்கு உனக்கு விருப்ப மிருந்தா……………………………………????(சண்டை விபரீதமாக சென்றுக்கொண்டே இருக்கும்)

உங்களுடைய வாதத்திறமையால் உங்கள் அருமை மனைவியின் வாயை அடைத்துவிட்டீர்கள்!! அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்!

மஹ்ஷரில் உங்கள் இறைவன் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறான் என்று வைத்துக்கொள்வோம்!
அல்லாஹ் ஆதமின் சந்ததியைச் சேர்ந்தவனே! என் அடிமையே! நான் உனக்கு
  • நல்ல பெற்றோரை கொடுத்தேன்!
  •  நல்ல மனைவி மக்களை கொடுத்தேன்! 
  • அறிவுத் திறமையும் செல்வத்தையும் கொடுத்தேன்! 
  • சொத்துக்கள், சுகங்களை கொடுத்தேன்! 
  • கவுரவமான வாழக்கையை கொடுத்தேன்! 
  • உயிர்வாழ அனைத்தும் இலவசமாக கொடுத்தேன்! 
  • நேர்வழிக்கு அருள்மறை குர்ஆனையும் கண்ணியமாக வாழ்க்கை முறைக்காக நபிமார்களையும்  அணுப்பினேன்
 முஸ்லிமாக வாழந்து, 5 வேளை தொழுகைகளை பேணி, ஜகாத் கொடுத்து, ஹஜ் செய்து உலகில் வாழந்து வந்ந நீ எதற்காக எனக்கு இணை வைத்தாய்?

படைத்த இறைவனாகிய நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?

நீங்கள்

?        ?      ?


அன்புச் சகோதர, சகோதரிகளே வாழந்து விட்டால் போதுமா? நாலு காசு சம்பாதித்தால் போதுமா? சொத்து சுகங்களை ஆண்டு அனுபவித்துவிட்டால் போதுமா?

இந்த உலகில் வாழும்போது நம் குடும்பத்தினரை நிம்மதியிழக்கச் செய்து நம் சுகத்தை காண்கிறோம். அதே நேரம் நம் படைத்த இறைவனுக்கு இணைவைத்துவிட்டு மறுமையில் நாம் நரகத்தை தங்குமிடமாக எண்ணி நிம்மதியிழந்து தவிப்போமே இந்த கைசேதம் தேவையா? சகோதர சகோதரிகளே

நம்முடைய அராஜக குணத்தால்
  • பெற்ற தாயின் வாயை அடைத்துவிடலாம்,
  • வளர்த்த தந்தையின் வாயை அடைத்துவிடலாம்
  • கட்டிய மனைவியின் வாயை அடைத்துவிடலாம்
  • ஊர் உலகத்தின் வாய்களை அடைத்துவிடலாம்

மேற்கண்ட இவர்களின் வாய்களை அடைத்துவிட்டு அவர்களிடம் வெற்றி கொள்ளும் நீங்கள் அல்லாஹ்விடம் வெற்றி கொள்ள முடியுமா?

வாழ்க்கை ஒரு முறைதான் எனவே அந்த வாழ்க்கை முறையை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய விதத்தில் இருந்தால் நமக்கு இலாபமா? நட்டமா?

இதோ அருள்மறை குர்ஆன் மற்றும் நபிமொழிகள்!
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்” (அல்குர்ஆன் 4:116)

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்(திருக்குர்ஆன், 5:72)

நபிமொழி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
இறைவனுக்கு இணை கற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், ‘பொய் கூறுவதும்’ அல்லது ‘பொய்ச் சாட்சியம் சொல்வதும்’ பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்.  இதன் அறிவிப்பாளரான அனஸ்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் ‘பெரும் பாவங்கள்’ என்று வந்துள்ளது.(புகாரி 6871)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகிறவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகிறவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகிறவன்.  என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி 6882)

அன்புச் சகோதர சகோதரிகளே! மனிதன் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிப்பதில்லை! இணைவைப்பதை அல்லாஹ் மன்னிப்பதில்லை!

சிந்திப்பீர்!   செயல்படுவீர்!


அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

குறிப்பு
இந்த கட்டுரையில் நீங்கள் என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தம் கொள்ள வேண்டாம். உள்ளத்தால் ஒவ்வொருவரும் இந்த நிகழ்வுகளை உணர வேண்டும் என்பதற்காகவே நீங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன். (தவறாக தென்பட்டால் மன்னிக்கவும்)


நான் உனக்கு எதில் குறை வைத்தேன்!

 http://islamicparadise.wordpress.com/2010/04/23/669/

Thursday, May 20, 2010

மில்லியன் டாலர் வெப்சைட்!


அலெக்ஸ் ட்யூ என்றொரு இருபத்தோரு வயது இளைஞன் இங்கிலாந்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தான். தனது கல்வித்தேவைகளுக்காக கொஞ்சம் பணம் சம்பாதிக்க அவன் விரும்பினான். அவனிடம் ஒரே ஒரு வெப்சைட் மட்டுமே இருந்தது. ஒரு மில்லியன் டாலரை இந்த வெப்சைட்டை வைத்து சம்பாதிக்க முடியுமா? என்று திட்டம் தீட்டினான்.

என்னுடைய வெப்சைட்டில் இருக்கும் ஒவ்வொரு பிக்ஸெலையும் (அளவை குறிக்கும் கணினி தொடர்பான சொல்) விற்கப்போகிறேன். என்னிடம் பத்து லட்சம் பிக்ஸல் இருக்கிறது. ஒவ்வொரு பிக்ஸலும் ஒரு டாலர் என்று அறிவித்தான். குறைந்தபட்சமாக ஒருவர் 10 x 10 பிக்ஸல் அளவே வாங்கமுடியும் என்றும் அறிவித்தான். இந்த 10 x 10 பிக்ஸெல் அளவுக்கு ஒரு நிறுவனம் 100 டாலரை செலுத்தினால் அவனது வெப்சைட்டில் நிறுவனம் தங்கள் விளம்பரத்தை வெளியிட்டுக் கொள்ளலாம். அவ்விளம்பரம் ஐந்து ஆண்டுகளுக்கு வெப்சைட்டில் இடம்பெற்றிருக்கும். அவ்விளம்பரத்தின் மூலமாக நிச்சயமாக விளம்பரம் செய்த நிறுவனத்தின் இணையத்தளத்துக்கு நிறைய பார்வையாளர்கள் வருவார்கள் என்று வாக்குறுதி கொடுத்தான்.

பொதுவாக பார்க்கப் போனால் இப்படி ஒரு திட்டமே பைத்தியக்காரத்தனமான திட்டம் என்று நாம் சொல்லிவிடுவோம். அலெக்ஸின் நண்பர்கள் பலரும் கூட அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் எல்லோரின் எதிர்பார்ப்பும் தவிடுபொடியானது. ஒரு ஆண்டுக்குள்ளாகவே தன் வெப்சைட்டில் (http://www.milliondollarhomepage.com) இருந்த பத்து லட்சம் பிக்ஸல்களையும் அலெக்ஸால் விற்றுவிட முடிந்தது. அலெக்ஸின் தளத்தில் விளம்பரம் செய்தவர்கள் அத்தனை பேருமே ஒட்டுமொத்த குரலில் எங்களுக்கு இது உபயோகமான முதலீடு என்றார்கள்.

அலெக்ஸின் தளத்தில் டி.எஸ். லேபரட்டரீஸ் என்ற நிறுவனம் 800 பிக்ஸல்களை வாங்கியிருந்தது. “அலெக்ஸின் தளத்தில் எங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்தியவுடனே எங்களது இணையத்தளத்துக்கு பல லட்சம் பார்வையாளர்கள் வந்தவண்ணம் இருந்தார்கள். எங்கள் நிறுவனத்தின் விற்பனை ஒருவாரத்துக்குள்ளாகவே நாற்பது முதல் ஐம்பது சதவிகிதம் வரை உயர்ந்தது. இன்றளவுக்கும் அதே விற்பனையை நாங்கள் தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம். இன்றும் கூட பலபேர் அலெக்ஸின் தளம் மூலமாக எங்கள் இணையத்தளத்துக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள்” என்று அந்த நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் கேலோ சொன்னார்.

அவரிடம் விளம்பரம் செய்தவர்கள் மட்டுமல்ல, உலகளவில் இருக்கும் பல மீடியாக்களும் அலெக்ஸின் இந்த புதுமையான முயற்சியை பாராட்டினார்கள். பல விளம்பர ஜாம்பவான்கள் எப்படி இந்த திட்டம் வெற்றியடைந்தது? உட்கார்ந்த இடத்திலிருந்தே பத்து லட்சம் டாலரை அந்த பையன் எப்படி சம்பாதித்தான்? என்று மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். விளம்பரம் குறித்த எந்த பொதுவான நுணுக்கங்களும் தெரியாத அலெக்ஸ் ஜெயித்துக் காட்டியது இன்றைக்கும் கூட புதிராகவே இருக்கிறது.

அலெக்ஸ் செய்ததைப் போலவே, கிட்டத்தட்ட அதே முயற்சி ஒன்று தமிழ் வலைப்பதிவர்களுக்காக பிரத்யேககமாக நடந்து வருகிறது. கலையழகன் என்ற நண்பர் நடத்தும் http://minmini.com/ இணையத்தளம். ஒரு வகையில் இது ஒரு வித்தியாசமான தமிழ் வலைப்பதிவு திரட்டியாகவும் செயல்படும். 1111 பதிவர்களின் பதிவுகளை திரட்டும் முயற்சியில் மின்மினி களமிறங்கி இருப்பதாக தெரிகிறது. முதற்கட்டமாக 50 பிரபல(எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை) பதிவர்களின் பதிவுகள் இப்போதைக்கு அவர்களை கேட்காமலேயே இலவச அடிப்படையில் திரட்டப்படுகிறது. இன்னும் 51 பேர் தங்களுடைய புகைப்படமும் இடம்பெற இலவசமாக விண்ணப்பிக்கலாம் என்று நினைக்கிறேன். பின்னர் பத்துக்கு பத்து என்ற அடிப்படையில் 100 பிக்ஸல் அடங்கிய ஒரு பெட்டிக்கு ஒரு டாலர் என்று வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மின்மினியில் ஏன் இணைய வேண்டும் என்ற கேள்விக்கு என்னிடம் தெளிவான பதில் ஏதுமில்லை. கேபிள் சங்கர் போல குறுகிய காலத்தில் பத்து லட்சம் ஹிட்ஸ்களை விரைவில் பெற விரும்பும் வலைப்பதிவர்களுக்கு இத்தளத்தை பரிந்துரைக்கிறேன். இதனால் வலைப்பதிவர்களுக்கு ஹிட்ஸ் தவிர்த்து வேறு எந்த பெரிய பலனையும் எதிர்ப்பார்த்து விட முடியாது என்று நினைக்கிறேன். வணிக நிறுவனங்கள் ஏதேனும் வலைப்பதிவு நடத்தினால் மின்மினி மூலமாக வணிகத்தை ஓரளவு வளரவைக்கலாம். எனினும் தமிழில் வலைப்பதிவர்களை வைத்து வித்தியாசமான விளையாட்டு ஆட வந்திருக்கும் நண்பர் கலையழகன் அவர்களை பாராட்டுகிறேன்.

மேலதிக தகவல்களைப் பெற http://minminicom.wordpress.com/ என்ற தளத்தை பாவிக்கலாம்.

Wednesday, May 19, 2010

இந்தியாவிற்கு இலவசமாக தொலைபேச...[#496]

இந்தியாவிற்கு இலவசமாக தொலைபேச...[#496]


ஏற்கனவே VoIP குறித்து எழுதிய கட்டுரைகள்
இங்கே...
http://mayavarathaan.blogspot.com/2008/04/voip-phone-calls-part-1-415.html

இந்தப் பதிவில் இலவசமாக இந்தியாவிற்கு
தொலைபேச ஒரு வழி கற்றுத் தருகிறேன். பலருக்கும் இது தெரிந்திருக்கலாம்.
தெரியாதவர்களுக்கான பதிவு இது. அதனால, தெரிஞ்சவங்க 'அதான் எனக்கு
தெரியுமே' என்கிறா 'முத்துலட்சுமி' டைப் வஜனத்தை பேசாமல் ஜகா வாங்கிக்
கொள்ளவும். VoIPன்னா என்னன்னு தெரிஞ்சிருக்கும். தெரியலைன்னாலும்
பரவாயில்லை.

இப்போ இந்தியாவிற்கு இலவசமாக தொலைபேச
தேவையான பொருட்கள்.
* 2-port or 4-port Modem builtin ADSL Adapter (DLINK is the
cheapest & good quality one) 
* LINKSYS PAP2T
Voice Adapter (VoIP Adapter)
* Normal telephone
* Hispeed internet connection in India
(DLink Router சுமார் 40 US$. LinkSys VOIP
Adapter சுமார் 60 US$.) சரி..எல்லாத்தையும் ரெடி பண்ணிக்கிட்டீங்களா?
நூற்று இருபத்தைந்து ரூபாயிலிருந்து இந்தியாவில் அதிவேக இண்டர்நெட்
இணைப்புகள் கிடைக்கின்றன. அதுவே போதும். வேகம் அதிகரிக்க அதிகரிக்க
தொலைபேச்சு நன்றாக இருக்கும்.
ஆரம்பத்தில் செட்-அப் செய்வதற்கு மட்டுமே
கம்ப்யூட்டர் தேவை, அதன் பிறகு இந்தியாவில் உங்கள் வீட்டில் கம்ப்யூட்டர்
தேவையில்லை.

இப்போது www.tpad.com இணைய தளத்திற்கு
சென்று புதிதாக கணக்கு துவங்கிக் கொள்ளுங்கள். குறைந்த பட்சம் 1
டாலருக்காவது அங்கே உங்கள் கணக்கில் காசு இருக்கிற மாதிரி பார்த்துக்
கொள்ளவும். (பயப்பட வேண்டாம்... நம்பத் தகுந்த இணைய தளம் தான். கிரெடிட்
கார்டு, PAYPAL கணக்குகள் மூலம் தைரியமாக வாங்கலாம்)

உங்களுக்கு ஆறு இலக்க கணக்கு எண் இங்கே
வழங்கப்படும். இப்போது இணைய தள தொடர்பில் உள்ள ரவுட்டரி(Dlink)ன் பின்
புறம் உள்ள போர்ட்டிலிருந்து LinkSys VOIP Adapterக்கு தொடர்பு
ஏற்படுத்தவும். அப்படியே ஒரு சாதாரண தொலைபேசியை LinkSys உடன் இணைக்கவும்.
இப்போது LinkSysல் இரண்டு விளக்குகள் பச்சையில் ஒளிரும். தொலைபேசியை
எடுத்து ****110# என்று அழுத்தவும். 192.168.*.* என்று ஒரு எண் சொல்லும்.
அதை குறித்துக் கொள்ளவும். இப்போது Internet Explorer (அல்லது வேறு எதாவது
ஒன்றை) திறந்து அங்கே http://192.168.*.* என்று டைப் செய்யவும் (* என்ற
இடத்தில் தொலைபேசியில் கேட்ட எண்ணை நிரப்ப வேண்டும்)
இப்போது LinkSys Admin menu திறக்கும்.
வலது புறம் Admin Login என்று இருக்கும். அதை க்ளிக்கவும்.
ளினெ 1 என்பதை க்ளிக்கவும். கீழ் கண்ட
செட்டிங்கை அதில் டைப்பவும்.

Line Enable : Yes
SIP Port : 5060
Proxy : sip.tpad.com
Register : Yes
Register Expires : 3060
Display Name : your name
User ID : your 6 digits tpad account
number
password
: your tpad password
Use
Auth ID : No
Auth
ID : your 6 digits tpad account number

மத்தவற்றை அப்படியே விட்டு விட்டு ஆகக் கீழே
வரவும்.

Preferred Codec : G711u

Now

SAVE SETTINGS

ஓரிரு விநாடிகளில்
LinkSys-ல் மூன்றாவது விளக்கும் எரியும். இப்போது LinkSys-ல்
இணைக்கப்பட்டுள்ள தொலைபேசியை எடுத்தால் அதில் டயல் டோன் கேட்கும்.
00-Country
code-City Code-Phone number # என்ற format-ல் இதில் உலகின் எந்த
எண்ணுக்கும் ஜப்தி ரேட்டில் தொலைபேசலாம். எந்த எந்த ஊருக்கு என்ன காசு
என்று இங்கே பார்க்கவும்.

http://www.tpad.com/Tpad-Ultra-Cheap-Worldwide-Calling-Rates.php
வெயிட்.. வெயிட்... ஏதோ இலவசம்ன்னு சொன்னியே.. இப்போ காசு போவும்ன்னு
சொல்றியேன்னு கேட்குறீங்களா? இதோ வந்திட்டேன் அந்த மேட்டருக்கு... இப்போ
என்ன செய்யுறீங்க.. இந்த Dlink Router, LinkSys VoIP adapter எல்லாத்தையும்
ஊரிலே உங்க வீட்டிலே வாங்கி வெச்சிட்டு Hi Speed Internet Connection
கொடுத்திட்டு வந்திடுங்க.

இந்த பக்கத்திலே
நீங்க எங்க இருக்கீங்கன்னு பாருங்க...


உதாரணத்துக்கு லாஸ்
ஏஞ்சலீசிலே இருக்கீங்கன்னா.. இந்த பக்கத்திலே இருக்கிற (323) 879 7002 நம்பரை உங்க
கைப்பேசி, அல்லது வீட்டு தொலைபேசில இருந்து கூப்பிடுங்க.

உள்ளூர் நம்பர்
கூப்பிடும் செலவு உங்க கைப்பேசி, அல்லது வீட்டு தொலைபேசி நிறுவனத்தைச்
சேர்ந்தது. இந்த நம்பருக்கு டயல் பண்ணின உடனே சாதாரண தொலைபேசி நம்பரை
கூப்பிடனுமா இல்லைன்னா Tpad நம்பரை கூப்பிடனுமான்னு கேட்கும். 1-ம் நம்பரை
அழுத்தினா Tpad நம்பர் அப்படீங்கும். 1-ம் நம்பரை அடிங்க. Tpad நம்பரை
அடிங்கன்னு சொல்லும். உங்களோட 6-டிஜிட் Tpad நம்பரை அடிங்க.. ஊரிலே உங்க
வீட்டிலே LinkSysல கனெக்ட் ஆகியிருக்கிற போன் டிரிங்கும். அவங்க எடுத்து
பேசலாம். இது இலவசம். ட்ரை பண்ணிட்டு எப்படி இருக்குதுன்னு சொல்லுங்க.
மாதக் கட்டணம் எல்லாம் எதுவும் கிடையாது. சூப்பர் இல்ல?!
 
http://mayavarathaan.blogspot.com/2008/11/496.html

Tuesday, May 18, 2010

கணவனின் கொடுமைகளை எதிர்கொள்வது எப்படி?

கணவனின் கொடுமைகளை எதிர்கொள்வது எப்படி?

ஜ மனைவியைக் கொடுமைப்படுத்துவது என்கிற சமூகத் தீமைக்கு இன்னதுதான் காரணம் என்று சுட்டிக்காட்ட முடியாது. சமூகம் வன்முறையை சகித்துக்கொள்வதற்கு பதிலாக அதை முறியடிப்பதில் இறங்கினால்தான் இந்தத் தீமையை ஒழிக்க முடியும். எந்த காரணத்திற்காகவும் யாரையும் சித்திரவதை செய்ய யாருக்கும் உரிமை இல்லை.
பெண்கள் கணவர்களால் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சகித்துக்கொண்டால் அது குழந்தைகளை பாதிக்கும் என்பதை மறக்கக் கூடாது. இல்லையென்றால் அது இன்னொரு தலைமுறைக்கும் தொற்றிக்கொள்ளும்இ தொடரும். கோபத்தைக் கையாள்வது எப்படி என்று ஒரு தாய் தன் மகனுக்கும் கற்றுக்கொடுக்க இது ஒரு வாய்ப்பு. கொடுமையைத் தாங்கிக்கொண்டால் பிறகு ஒரு நாள் மகனும் தந்தையைப் போல்தான் நடந்துகொள்வான்.
வரதட்சிணைக் கொடுமை என்றால் கூட போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க வைக்கலாம். ஒரு கணவன் தன் மனைவியைக் கொடுமைப்படுத்த எத்தனையோ காரணங்கள் இருக்கும். ஆனால் வரதட்சிணைக் கொடுமைக்குத்தான் போலீஸ் முக்கியத்துவம் கொடுக்கிறது. ‘சாதா’ கொடுமைகளை குடும்ப விவகாரம்இ அவர்களே பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டிய விஷயம் என்று அலட்சியப்படுத்துகிறது.
ஒரு பெண் முதலில் தான் ஒரு தனிநபர்இ பிறகுதான் ஒரு மனைவிஇ தாய் என்பதை மறந்துவிடக் கூடாது. கணவன் கொடுமைப் படுத்துகிறான் என்றால் அதை எப்படிக் கையாளுவது என்பது பற்றி அவள்தான் முடிவு செய்ய வேண்டும். சித்திரவதை செய்யப்படும் பெண்கள் தன்னைப் பற்றி உயர்வான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்.ஸ
ஆணாதிக்கம் குறைந்துவரும் இந்தக் கால கட்டத்தில் கூடஇ பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறையவில்லையே! கொட்டிக்கொடுத்துப் பெண்ணைக் கட்டிக்கொடுத்த பின்னும் பிணந்தின்னிக் கழுகுகளாய் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தும் ‘உத்தம’க் கணவர்கள் நாளும் பெருகிக்கொண்டுதானே இருக்கிறார்கள். பிறந்தது பெண்ணாக இருந்துவிட்டால் இறந்துதான் தீர வேண்டும் எனக் கள்ளிப் பாலும் கையுமாக அலையும் கயமை நெஞ்சங்கள் தாம் எத்தனை எத்தனை! இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்இ
வரதட்சிணைஇ கள்ளக் காதல் என்று பல விதமான காரணங்கள் காட்டி பெண்கள் உயிரோடு எரிக்கப்படுவதை கிட்டத்தட்ட தினமுமே செய்தித் தாள்களில் படிக்கிறோம். ஸ்டவ் வெடித்து’ பலியாகும்இ அல்லது மிக சீரியஸாக தீக்காயம் அடையும் பெண்களைப் பற்றியும் கேள்விப்படுகிறோம்.
ஆனால் கணவர்கள் மனைவியைச் சித்திரவதை செய்வது நாம் நினைப்பதை விட அதிகமாவே நடக்கிறது. பல பெண்கள் தாங்கள் உடல்ரீதியாகவும்இ மனரீதியாகவும் படும் வேதனைகளை வருடக்கணக்கில் வெளியே சொல்லாமலே குமைவதுதான் சோகம்.
ஒரு கணவன் தன் மனைவியிடம் வன்முறையைக் காட்ட ஆரம்பித்துவிட்டால் பிறகு அதற்கு முடிவே இல்லாமல் போகிறது. அதன் உக்கிரம் தீவிரமடைகிறதே தவிர குறைவதில்லை. குடிகாரக்கணவனிடம் மாட்டிக்கொண்டால் அந்த பெண்ணின் வாழ்வு அவ்வளவுதான். அடி உதைக்கு பஞ்சமிருக்காது.
தினசரி வாழ்க்கையில் பெரும்பாலான வீடுகளில் தங்கள் மனைவியின் உடல்நல முடிவுகளைக்கூட ஆண்களே எடுக்கின்றனர். தெற்காசிய நாடுகளில் 61மூ ஆண்கள் முடிவின் படிதான் குடும்பத்தாரின் உடல்நல சிகிச்சைகள் கூட தெரிவு செய்யப்படுகின்றன.
நீண்ட காலமாக கணவனால் கொடுமைப்படுத்தப்படும் பெண்கள் மனதை பயம்தான் பிடித்து ஆட்டுகிறது. அந்த பயம் தன்னைப் பற்றி மட்டுமில்லாமல் தன் குழந்தைகளுக்கும் கணவனால் ஆபத்து ஏற்படுமோ என்ற பயமாகவும் மாறுகிறது. எழை – பணக்காரர்கள்இ ஜாதி – மதம் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லா சமூகங்களைச் சேர்ந்த பெண்களும் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்
ஒரு பெண் ஏன் இத்தனை அநியாயங்களை சகித்துக்கொள்ளவேண்டும்? அதற்குப் பல காரணங்கள் உண்டு. இன்று எத்தனையோ விஷயங்கள் மாறிவிட்டாலும் ”மனைவி கணவனை விடத் தாழ்ந்தவள்” என்கிற கண்ணோட்டம் இன்னும் மாறவில்லை. வாழாவெட்டி என்ற ‘கான்செப்ட்’டை இப்போதும் பத்திரமாகப் பேணிக்காத்து வருகிறார்கள்.
மகள் என்ன அவதிப்பட்டாலும் பெற்றோர் தரும் அட்வைஸ் இதுதான்: “நீதான் அனுசரித்துப் போகவேண்டும்.” கணவன் ஒரு பொறுக்கியாக இருந்தாலும் அவனைப் பிரிந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் மனைவி நினைப்பதும் இந்த சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது. வரதட்சிணைக் கொடுமை என்றால் கூட போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க வைக்கலாம்.
ஒரு கணவன் தன் மனைவியைக் கொடுமைப்படுத்த எத்தனையோ காரணங்கள் இருக்கும். ஆனால் வரதட்சிணைக் கொடுமைக்குத்தான் போலீஸ் முக்கியத்துவம் கொடுக்கிறது. ‘சாதா’ கொடுமைகளை குடும்ப விவகாரம்இ அவர்களே பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டிய விஷயம் என்று அலட்சியப்படுத்துகிறது.
தொடர்ந்து அடிபட்டுஇ அடிபட்டு ஓய்ந்து போன மனைவிகளுக்கு அதுதான் வாழ்க்கை என்று ஆகிவிடுகிறது. தாழ்வு மனப்பான்மைஇ விரக்தி எல்லாம் உருவாகி அவர்கள் அடங்கிப் போகிறார்கள். இவர்களில் சிலர்தான் உயிரோடு எரிந்து சாகிறார்கள்.
கணவர்கள் எதற்காகத் தங்கள் மனைவிகளைக் கொடுமைப்படுத்துகிறார்கள்? கணவர்களே தங்கள் சிறு வயதில் பெற்றோரால் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம்இ அவர்கள் தாய் அவர்கள் கண்முன் அடித்து உதைக்கப்பட்டிருக்கலாம்இ அவர்கள் அலுவலகத்தில் மேலதிகாரியிடம் திட்டு வாங்கியிருக்கலாம்இ அல்லது தாழ்வு மனப்பான்மை இருக்கலாம்.
ஒரு கணவனால் வீட்டில் மட்டும்தான் எந்த ஆபத்தும் இல்லாமல் தன் உள்மன வன்முறையை வெளியே காட்ட முடிகிறது. மனைவியை அடித்தால் அவள் திருப்பி அடிக்கவா போகிறாள்? அப்புறம் மன்னிப்பு கேட்டால் போயிற்று! மனதில் இருக்கும் அத்தனை கோபங்களையும் காட்ட மனைவிதான் சரியான இலக்கு.
பொதுவாக மனைவியைச் சித்திரவதை செய்வது மூன்று கட்டங்களில் நடக்கிறது :
முதலில் சின்னச் சின்ன சண்டைகள்இ பிறகு அடி உதைஇ பிறகு குற்ற உணர்வு ஏற்பட்டு மனைவியிடம் மன்னிப்பு கேட்டுக் கொஞ்சுகிறார்கள். மன்னிப்பு கேட்பது கூட சில தம்பதிகள் விஷயத்தில்தான் நடக்கிறது.
பிரச்னை எப்படி வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். கணவனிடம் பணம் கேட்பது (பெரும்பாலும் வீட்டு செலவுக்காகத்தான் இருக்கும்; நகைஇ புடவை வாங்குவதற்கு கணவனை நச்சரிக்கும் பெண்கள் கை எப்போதும் ஓங்கியிருக்கும்)இ கணவனிடம் வீட்டு வேலை செய்ய உதவி கேட்பதுஇ அவள் சமையல் கணவனுக்குப் பிடிக்காமல் போவதுஇ ‘மூட்’ இல்லாததால் மனைவி உடலுறவு கொள்ள மறுப்பது – இப்படி எதிலும் தொடங்கும்.
இதற்கு அடுத்துஇ அவளுக்குப் பல விதமான ‘தண்டனை’கள் கிடைக்கின்றன. பல கணவர்கள் தங்கள் மனைவிகளை அடிக்கிறார்கள்இ கழுத்தை நெரிக்கிறார்கள்இ எட்டி உதைக்கிறார்கள்இ கத்தியால் கீறுகிறார்கள்இ சுவற்றில் மோதுகிறார்கள்இ தள்ளுகிறார்கள்இ அவள் நடத்தையைப் பற்றி சம்பந்தமில்லாமல்இ மிக மோசமாகஇ இன்னும் சொல்லப்போனால் காது கூசும் அளவுக்குக்கூட திட்டுகிறார்கள்.
அடுத்தது மன்னிப்பு கேட்கும் படலம். அடித்த பிறகு கணவனுக்குக் குற்ற உணர்வு ஏற்படுகிறதாஇ நிஜமாகவே மன்னிப்பு கேட்கிறானாஇ அல்லது அவனுக்குத் தன் மனைவி மேல் உண்மையான காதல் இருக்கிறதா என்பதெல்லாம் முக்கியமில்லை. தன் மீது எந்த விதமான வன்முறையிலும் ஈடுபட அவனுக்கு உரிமை இல்லை என்பதை மனைவி அவனுக்குப் புரிய வைக்க வேண்டும். அதற்கு சில நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
மனைவி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
ஒரு பெண் தன் பாதுகாப்புக்குப் பல முன்னேற்பாடுகளை செய்துகொள்ள முடியும். இவை மிகவும் சுலபம். கொஞ்சம் பணம்இ பட்டச் சான்றிதழ்கள் மற்றும் இதர சர்ட்டிஃபிகேட்கள் போன்ற ஆவணங்கள்இ கார் ஃ பைக் சாவிஇ இதையெல்லாம் சட்டென்று கிடைக்கும் ரகசியமான இடத்தில் ஒளித்து வைக்கவேண்டும். அவசரம் என்றால் எடுத்துக்கொண்டு கிளம்ப வசதியாக இருக்கும்.
போலீஸ் மற்றும் நண்பர்களின் ஃபோன் நம்பர்களை கைக்குக் கிடைக்கும் இடத்தில் வைத்திருப்பது நல்லது. எப்போது வீட்டை விட்டு வெளியேறினாலும் (குழந்தை இருந்தால் குழந்தையுடன்) உடனே தங்குவதற்கு ஒரு இடத்தைத் தயார் செய்துகொள்வது ரொம்ப முக்கியம் – உதாரணமாகஇ ஒரு தோழியின் ஃ தோழரின் ஃ உறவினரின் வீடுஇ அல்லது ஏதாவது மகளிர் சேவை நிறுவன அலுவலகம்.
ஒரு விதத்தில் பார்த்தால் கணவன் அடிக்க வரும்போதுஇ அதை வாங்கிக்கொண்டு சும்மா இருப்பதில்தான் பிரச்னை ஆரம்பிக்கிறது. கணவன் அடிக்க முயற்சி செய்தால் மனைவி தன்னால் முடிந்த வரை தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். கணவனை அடக்க முடியவில்லை என்றால் உடனே போலீசுக்கு ஃபோன் செய்யவேண்டும். உடனே தன் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.
அருகில் இருக்கும் மருத்துவமனையில் மருத்துவ உதவி பெறுவதும் அவசியம். எந்த இடங்களில் எந்த மாதிரி அடிபட்டதுஇ எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது போன்ற மருத்துவ ரெக்கார்டுகளும்இ தேவைப்பட்டால் அடிபட்ட இடங்களின் புகைப்படங்களும் கண்டிப்பாகத் தேவை. கணவன் மேல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும்போது இவை மிகவும் உதவும்.
இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் உதவுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது. நண்பர்கள் மட்டுமல்லஇ பெண்களின் நலனுக்காகவே இயங்கும் ஆயிரத்தெட்டு தனியார் அமைப்புகள் உதவிக்கு வரத் தயார் நிலையில் இருக்கும். இவர்கள் ஒரு புது வாழ்க்கை தொடங்கவும் ஆலோசனை தருவார்கள்.
பெண்களுக்கான அவசர அடைக்கல மையங்கள்இ உடனடி தொலைபேசி உதவி சேவைகள்இ சமூக சேவை நிறுவன நிறுவனங்கள்இ மருத்துவமனைகளின் எமர்ஜென்சி ரூம்கள் என்று உதவி பெற இடத்திற்குப் பஞ்சமில்லை.
மற்றவர்கள் உதவுவது இருக்கட்டும். ஒரு பெண் முதலில் தான் ஒரு தனிநபர்இ பிறகுதான் ஒரு மனைவிஇ தாய் என்பதை மறந்துவிடக் கூடாது. கணவன் கொடுமைப்படுத்துகிறான் என்றால் அதை எப்படிக் கையாளுவது என்பது பற்றி அவள்தான் முடிவு செய்ய வேண்டும். சித்திரவதை செய்யப்படும் பெண்கள் தன்னைப் பற்றி உயர்வான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
ஜனிஃபர் பேக்கர் ஃப்ளெமிங் என்ற எழுத்தாளர் ‘ளுவழிpiபெ றுகைந யுடிரளந’ ‘ என்ற புத்தகத்தில் சில பயனுள்ள அட்வைஸ்களைத் தருகிறார். கணவனால் கொடுமைப்படுத்தப்படும் ஒரு பெண் கீழ்க்கண்ட விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும் என்கிறார் அவர் :
நான் அடித்து சித்திரவதை செய்யப்பட்டால் அதற்கு நான் காரணம் இல்லை. இன்னொருவனின் வன்முறையான நடத்தைக்கு நான் காரணம் ஆக முடியாது.
இந்த வன்முறை எனக்குப் பிடிக்கவில்லை. இதை நான் நிச்சயம் எதிர்ப்பேன். நான் இதை சகித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
நான் ஒரு முக்கியமான மனுஷி. நான் யாருக்கும் குறைந்தவள் இல்லை.
நான் மற்றவர்களின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் தகுதியானவள். என்னை மதிப்பவர்களைத்தான் நானும் மதிப்பேன்.
என் வாழ்க்கை என் கையில்தான் இருக்கிறது. என் கையில்தான் இருக்க முடியும்.
என் உரிமைகளைப் பயன்படுத்தி என்னை நான் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
எனக்கு எது நல்லது என்று நானே முடிவு செய்ய முடியும்.
என் வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று நான் விரும்பினால் அதை நான் நிச்சயம் செய்ய முடியும்.
நான் நிராதரவானவள் இல்லை. எனக்கு யாரும் அபலைப் பட்டம் கட்ட முடியாது. எனக்கு மற்றவர்களின் உதவி சுலபமாகக் கிடைக்கும்.
என் வாழ்க்கையை பாதுகாப்பாகஇ சந்தோஷமாக வைத்துக்கொள்ள எனக்கு உரிமை உண்டு.
மனைவியைக் கொடுமைப்படுத்துவது என்கிற சமூகத் தீமைக்கு இன்னதுதான் காரணம் என்று சுட்டிக்காட்ட முடியாது. சமூகம் வன்முறையை சகித்துக்கொள்வதற்கு பதிலாக அதை முறியடிப்பதில் இறங்கினால்தான் இந்தத் தீமையை ஒழிக்க முடியும். எந்த காரணத்திற்காகவும் யாரையும் சித்திரவதை செய்ய யாருக்கும் உரிமை இல்லை. அதே போல சமூகமும் பெண்களைப் பற்றி வைத்திருக்கும் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
பெண்கள் கணவர்களால் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சகித்துக்கொண்டால் அது குழந்தைகளை பாதிக்கும் என்பதை மறக்கக் கூடாது. இல்லையென்றால் அது இன்னொரு தலைமுறைக்கும் தொற்றிக்கொள்ளும்இ தொடரும். கோபத்தைக் கையாள்வது எப்படி என்று ஒரு தாய் தன் மகனுக்கும் கற்றுக்கொடுக்க இது ஒரு வாய்ப்பு. கொடுமையைத் தாங்கிக்கொண்டால் பிறகு ஒரு நாள் மகனும் தந்தையைப் போல்தான் நடந்துகொள்வான்.
அடக்கம்இ பணிவுஇ விட்டுக் கொடுத்துப் போற குணம் எல்லாமே பெண்களுக்கு வேணும்தான். ஆனாஇ எதுக்குமே ஒரு எல்லை இருக்கு. விட்டுக்கொடுத்துப் போகணுமேங்கிறதுக்காக நம்மளோட சுயமரியாதையையும் மனதிருப்தியையும் இழக்கவேண்டிய அவசியமில்லை. மீறினாஇ அது மனநோய்லதான் கொண்டுபோய் விடும்
http://nidur.info

Monday, May 17, 2010

காதலில்லாத கடமை என்பது வெறுமையேயன்றி வேறில்லை

வெறும் கடமை தருவது வெறுமையான இயந்திர வாழ்க்கை.

ஒரு நகலெடுக்கும் (Photo Copy) இயந்திரம் தன் கடமையைச் செய்வதற்கும் மனிதருக்கும் என்ன வித்தியாசம்? மனிதர்கள் ரோபாட்டுகள் அல்ல

காதல் மிகச் சாதாரணமானவனைக்கூட சாதிக்கும் சக்தியாய உயர்த்தும். எதற்குமே லாயக்கற்றவனைக்கூட கடமை வீரனாக்குவது அவன் கொண்ட காதல்தான்.

வறுமையாலும், உறவுகள் கீறிவிடுவதாலும், தோல்விகளாலும் தற்கொலைகள் உண்டு. காதலில் தற்கொலை செய்துகொள்பவர்கள் காதலித்துவிட்டோம் எனவே தற்கொலை செய்துகொள்கிறோம் என்று தற்கொலை செய்வதில்லை.

காதல் என்றால் என்னவென்றே தெரியாத காட்டுமிராண்டிகள் அவர்களை வாழவே விடாமல் முழு சக்தியையும் பயன்படுத்தி சாகடிப்பதால்தான் சாகிறார்கள். ஆனாலும் தற்கொலை கூடாது. அதற்குப்பதில் சாகும் வரை அவர்களை எதிர்த்துப் போராடலாம்.

காதல் என்றதும் முகம் சுளிப்பவர்கள் ஆழ்ந்து சிந்திக்காதவர்கள், ஏனெனில் இந்தப் பிரபஞ்சமே காதலில்தான் இயங்குகிறது. ஆகாயத்திலும் எல்லாமே ஈர்ப்புதான். அந்த ஈர்ப்புகள் அழிந்துவிட்டால் ஒன்றுமே இல்லை.

ஒரு வாழ்க்கை வெற்றிகரமாய் அமைவதற்கு காதலும் கடமையும் மிக முக்கியம்.

ஓர் உயிர் மண்ணில் வந்து விழுகிறது என்றால் அது காதலின் பரிசாகத்தான்.

கடமை என்பது காரியம் செய்வது. காதல் என்பது ஈடுபாடு கொள்வது. ஈடுபாடு இல்லாத காரியம் நரகத்துக்குச் சமம்.

ஊரில் செக்குமாடுகளை உருவாக்குவார்கள். வாழவேண்டிய காளைகளைக் காயடித்து, செக்கில் கட்டி நாளெல்லாம் அதை சுற்றிச் சுற்றி நடக்க வைத்து அதன் கடமையைச் செய்ய வைப்பார்கள். அதைவிட ஒரு உயிர் வதை இருக்க முடியுமா? அதுதான் காதல் இல்லாமல் கடமையைச் செய்ய வைக்கும் கொடுமை.

காதல் வேண்டாம் கடமைதான் வேண்டும் என்பவர்கள் கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழ வேண்டும். அன்னைத் தெரிசாவைப்போல் நேரடியாய் சேவைக்கு வந்துவிடவேண்டும். திருமணம் என்று செய்துகொண்டு தன் துணையிடம் காதல் காட்டாமல் துணையைக் கொடுமைப்படுத்தி சாகடிக்கக் கூடாது.

கடமை கடமை என்று சொல்லும்போது முதல் கடமையே தன் துணையைக் காதலிப்பதுதான் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

அன்னை தெரிசா கூட தான் செய்யும் சேவையைக் காதலித்தார். உலகில் உள்ள அத்தனை உயிர்களையும் காதலித்தார். அவர் போன்றவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே. அவரைச் சான்றாக கொண்டுவருவது அடிப்படையே இல்லாத செயல்.

எந்த ஒரு விசயத்துக்கும் முன்னுதாரணம் எடுக்க வேண்டும் என்றால் அதை பெரும்பாலானவர்களின் வாழ்க்கையிலிருந்து எடுக்க வேண்டும். ஆறு கால்களோடு ஒரு ஆடு பிறந்திருக்கிறதே எனவே ஆட்டுக்கு ஆறு கால் என்று சொல்லக்கூடாது.

ஒருவன் சட்டைப்போடாமல் அலுவலகம் வருகிறான். கேட்டால் எங்கள் தேசப்பிதாவே சட்டை போடவில்லை என்று அவன் சொன்னால் அவன் பைத்தியக்காரன்.

காதலே வேண்டாம் கடமை மட்டும் போதும் என்று சொல்பவர்களைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. ஆனால் காதல் வேண்டும் என்று சொல்லும் யாருமே காதல் மட்டும்தான் வேண்டும் கடமை வேண்டாம் என்று சொல்வதே இல்லை. இதிலிருந்தே தவறு எங்கிருக்கிறது என்பது தெளிவு.

வாழ்க்கை என்பது இருவர் இணைவது என்பதிலிருந்துதான் உருவாகிறது. அந்த இருவரைக்கொண்டுதான் பின் பல்லாயிரம் உறவுகள், உரிமைகள், வாழ்க்கைகள்.

தாய் என்பவள் காதலின் காரணமாகத்தான் பிள்ளை பெற்றுக்கொள்கிறாள். ஒரு சாதாரண பெண்ணை தாயாய் உயர்த்துவதும் காதல்தான்.

எனக்குக் காதல் வேண்டாம், மருத்துவமனையில் போய் ஒரு ஊசி போட்டுக்கொண்டு பிள்ளை பெற்றுக்கொள்கிறேன். ஏனெனில் பிள்ளைகளுக்கு நான் என் கடமையைச் செய்ய விரும்புகிறேன். கணவனும் வேண்டாம் காதலும் வேண்டாம் என்று கூறும் பெண்கள் இருக்கலாம் தான். ஆனால் அவர்களைப் பெண்கள் என்று எப்படி ஏற்றுக்கொள்வது?

முதலில் கடமை கடமை என்று பேசுபவர்கள் காதலை மிகவும் தவறாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். காதல் என்றால் ஏதோ கனவுலகில் மிதந்துகொண்டிருப்பதுபோலவும், வேறு எந்த வேலையுமே செய்யாமல் கடலோரங்களில் பாட்டுப்பாடிக்கொண்டு திரிவுபோலவும் கற்பனை செய்துகொள்கிறார்கள்.

காதல் என்று ஒன்று வந்துவிட்டாலே பொறுப்புணர்ச்சிகள் அதிகமாக வந்துவிடும்.

ஒரு குடும்பத்தலைவன் தன் மனைவியைக் காதலிக்காவிட்டால், ஏன் நான் உழைத்துக்கொட்டணும் என்று கடமையைச் செய்யாமல் அப்படியே இமயமலையை நோக்கிப் போய்விடுவான். திரும்பி வரவே மாட்டான்.

பாசம் அன்பு நேசம் நட்பு என்பதெல்லாமே ஒரு வகையான காதல்கள்தான். உள்ளங்களுக்கு இடையில் உருவாகும் ஈடுபாடுதான் காதல்.

உனக்காக நான் எதையும் செய்வேன் என்று ஒரு பெண் ஏன் கூறப்போகிறாள்? அதைச் சொல்வதற்கான தேவை என்ன என்று பார்க்க வேண்டும். அவளுக்குப் பிடித்திருக்கிறது. இந்தப் பிடித்திருக்கிறது என்ற சமாச்சாரம்தான் காதல்.

ஈடுபாடு இல்லாமல் எதைத்தான் ஒருவரால் தொடர்ந்து செய்யமுடியும்?

வேக வைத்த கறியை அப்படியே உண்பதற்கும். ருசியோடு சமைத்து உண்பதற்கும் வித்தியாசமில்லையா? இரண்டிலும் உடலுக்குத் தேவையான சத்து கிடைக்கத்தான் போகிறது. ஆனால் எதை ஒருவன் விரும்புவான் சொல்லுங்கள். காதல் என்பது ருசியோடு பார்த்துப் பார்த்துச் சமைப்பது போன்றது.

உடனே வம்படியாய், ஹோட்டலில் சரக்குமாஸ்டர் ருசியோடு சமைத்துத் தருகிறானே அது காதலா என்று கேட்கக் கூடாது. அந்த சரக்குமாஸ்டர் அங்கே தன் கடமையைச் செய்வதற்குப் பின்னால் சரக்குமாஸ்டரின் காதல் குடும்பம் இருக்கிறது.

காதல் என்பது அன்பு, பாசம், நேசம், நட்பு, உறவு, ஈர்ப்பு, பிடித்தம், விருப்பம், சுவாரசியம், கலை, இலக்கியம், நிம்மதி, பாதுகாத்தல், அக்கறை என்பவை போன்றவற்றால் ஆனது

கடமை என்பது சேவை, பொருள் ஈட்டுதல், செய்ய வேண்டுவன, கொடுக்க வேண்டியன என்பவற்றைச் செயல் படுத்துவ்து.

இந்த இரண்டும் சேர்ந்தால்தானே வாழ்க்கை. அட இதைத்தவிர நான் எப்படிச் சொல்வதென்றே விளங்கவில்லை.

இன்னொன்று காதல் என்றால் அது என்னவோ வாலிப்பப்பருவத்தில் குத்துப்பாட்டு போட்டு ஆடுவது என்பதுபோல் நினைத்திருக்கிறார்கள் சிலர். ஒரு தொண்ணூறு வயது தம்பதியருக்கு இடையில் இருக்கும் காதலைப் பார்க்க வேண்டும். அதை எல்லாம் அனுபவைக்க ஆயுள் வேண்டும். பார்க்கும் போதே பரவசப்படும் காதல் அது.

காதல் இல்லாவிட்டால் ஏன் இன்னொரு உயிரையும் சுமையாக கட்டிக்கொண்டு சாகும்வரை அலையவேண்டும்?
http://anbudanbuhari.blogspot.com/

Sunday, May 16, 2010

நோய் எதிர்ப்பு சக்தி ((Immunity) என்றால் என்ன?


நோய் எதிர்ப்பு சக்தி ((Immunity) என்றால் என்ன?
நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன. ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.
எதிர்ப்பு சக்தி வகைகள்:நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity), தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity),

உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity)

என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இந்த மூன்று எதிர்ப்பு சக்திகள் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.

இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity)

இந்த எதிர்ப்பு சக்தி, பிறக்கும்போதே ஒருவரது உடலில் அமைவது. மனித உடலுக்கு தோல், (Skin) எப்படி ஒரு மிகப்பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக் கவசம் போல் செயல் படுகின்றன. இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக்கூடியவை.
அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக் கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் (Neutrophils, Bosophils, Eosinophils) தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும்.
தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்த (Adaptive Immunity)இரண்டாவது வகையான தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, தாக்கும் நோய்களுக்குக் காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்குத் தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது Lymphocytesஎன்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்.
உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity)மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும்போது, இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல். உதாரணமாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாக கிடைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டானஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும்.
எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது?நோய்க் கிருமிகள் நுழையும்போது, அதனை எதிர்த்து போரிடுவதற்கான நுட்பமான கட்டமைப்பு நமது உடலில் செயல்படுகிறது. இந்த செயல்பாட்டின்போது உயிரணுக்கள், திசுக்கள், நுண்ணுயிரிகள் அனைத்தும் பரஸ்பர ஒத்துழைப்போடு விரைந்து செயல்படுகின்றன. நாளமில்லா சுரப்பிகள், மண்ணீரல், எலும்புகளின் அடியில் உள்ள மஜ்ஜை ஆகிய உறுப்புகள் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றன. வெவ்வேறு வகையான வேதிப் பொருள்களும், சுரப்பிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உறுதுணையாக இருக்கின்றன. இவை ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக பயணித்து, நோய்க்குக் காரணமான கிருமிகளை அழிக்கின்றன.
நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதன் பெரும்பாலான செயல்பாடுகள் நம்மை அறியாமலே நிகழ்கின்றன. சில நேரங்களில் நோய்க்கிருமிகளை எதிர்க்க முடியாமல், எதிர்ப்பு சக்தி தோல்வியடையும் போதுதான் அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியத் தொடங்குகின்றன. காய்ச்சல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் இவையெல்லாம் நோயை எதிர்த்து நம் உடல் போராடுகிறது என்பதற்கான அடையாளங்களே ஆகும். அப்போது ஏற்படும் அதிகபட்ச வெப்பநிலைதான் காய்ச்சலாக உணரப்படுகிறது. சளியின் வழியாக கிருமிகள் அப்போது வெளியேற்றப் படுகின்றன.
புண், கட்டி, ரணம் போன்றவை ஏற்படும்போது அந்தப் பகுதியில் நோயை எதிர்ப்பதற்கான செல்கள் அதிக அளவில் வந்து குவிகின்றன. இவை, அந்த புண்ணின் வழியாக கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கின்றன.
வெள்ளை அணுக்களில் (Neutrophils, Bosophils, Eosinophils ), ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுகின்றன.

நோய்  எப்போது ஏற்படுகிறது?உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டச்சத்துக் குறைவினாலும் நோய் ஏற்படுகின்றன.
நம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் சில:1. பலகீனமான உடலமைப்பு 2. மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள் 3. அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது 4. மது, போதைப்பொருள் பழக்கம்,  5. புகைப்பழக்கம், 6. தூக்கமின்மை,7. சர்க்கரை நோய் , இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது.
நோய் தொற்றைத் தவிர்க்கசாக்கடை, கழிவு நீர் தேங்குதல், சாலையோரத்தில் கொட்டப்படும் காய்கறி மற்றும் வீட்டு உபயோகக் கழிவுகள் ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய்க் கிருமிகள் உருவாகி நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம் தங்குமிடத்தை சுகாதாரமாக வைத்திருந்து நோய்த் தொற்றைத் தவிர்க்க வேண்டும்.
கை குலுக்குதல், தொலைபேசி உபயோகித்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. இந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்குப் பின்னரும் கைகளை சோப்பு அல்லது வெந்நீர் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும்.
கையுறைகள் போன்றவற்றை அணியும்முன் அவை முறையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
புகை பிடிக்கும் பழக்ம் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும். அது உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும்.
மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். நெகிழ்வாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்க பழக வேண்டும். தவறாமல் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்பட்டுஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
நோயற்ற வாழ்வுக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியமான ஒன்று. ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் போது நம் உடலில் உள்ள இறுக்கங்கள் மாறி நோய் எதிர்ப்புத் திறன் செயல்பட ஏதுவாகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கபால், தயிர், நெய், சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, மீன் இவற்றை வாரத்தில் மூன்று முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும்.
அனைத்து பழங்களும், காய்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. இவற்றில் Anti oxidants ் அதிகமாக உள்ளது. கடலை, சூரியகாந்தி விதைகள் போன்றவை துத்தநாகம் கால்சியம் போன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான சத்துக்களை அதிகரிக்க உதவும்.
வேதிப்பொருள்கள் (Chemicals), பூச்சி மருந்துகள் (Pesticidies) போன்றவை படிந்த பொருட்கள், மற்றும் வண்ணம் பூசப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப்பட்ட டின் பொருட்கள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.எண்ணெயில் வறுத்த உணவுப்பண்டங்களை உண்ணக் கூடாது. அவை உடலில் நச்சுத் தன்மையை (Free radicals) உண்டாக்குகிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சர்க்கரையின் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்திற்கு குறைத்துவிடுகிறது.
காபி, டீ இவற்றை அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் ஏற்படத் தொடங்கினால் மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.
நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு (Balance diet) உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு (Healthy life style) வாழ்வதே.



source: http://senthilvayal.wordpress.com

http://nidur.info/

வணங்காமுடி பதில்கள் (11-05-2010)

ஏமாற்றுபவர்கள் அரசியல்வாதிகளாகிறார்களா? அரசியல்வாதிகள் ஆன பிறகு ஏமாற்றுவாதிகளாகிறார்களா? - சிராஜ்

"எங்களிடம் பணம் முதலீடு செய்தால் இரு மடங்கு திருப்பித் தருகிறோம்; வீட்டுமனை தருகிறோம்; விடுமுறைக்காலச் சுற்றுலா அழைத்துச் செல்கிறோம்" என்று ஏமாற்றுபவர்களும் பிறரது சொத்தைப் போலி ஆவணங்களின் மூலம் மற்றவர்களுக்கு விற்று இருவரையும் ஏமாற்றுபவர்களும் சிட்ஃபண்ட் நடத்திப் பண மோசடிசெய்பவர்களும் அரசியல்வாதிகளானதாகக் கேள்விப்பட்டதில்லை.
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனாறும் பாலாறும் ஓடும்" என்று சொன்னவர்களும் "தட்டினால் தங்கம் வரும்; வெட்டினால் வெள்ளி வரும்; முட்டினால் முத்து வரும்; இடித்தால் இரும்பு வரும்" என்றும் "மூன்றுபடி லட்சியம்; ஒரு படி நிச்சயம்" என்றும் அடுக்குமொழி பேசிய தமிழ்க் காவலர்களும் "நானோ என் குடும்பத்தினரோ அரசுப் பதவிகளைப் பெறமாட்டோம்" என்று கூறிய தமிழ்க்குடிதாங்கிகளும் நல்ல பண்பாடுள்ளவர்களாகத்தான் அரசியலில் நுழைந்தார்கள்.
அரசியலால் வரும் பதவி, அது தரும் அதிகாரம், அதன் மூலம் வளரும் செல்வாக்கு,இவற்றால் கொழிக்கும் பணம் என அனைத்தையும் கண்டபிறகு பொய்யான வாக்குறுதிகள அள்ளி வீசி ஏமாற்றத் தொடங்கினர்.
நாமும் தேர்தல்தோறும் விரல் நுனியில் கறுப்பு மை வாங்கி முகத்தில் கரியைப் பூசிக் கொள்கிறோம்.


இரு கட்சி ஆட்சி முறைதானே இந்தியாவுக்கு சிறந்தது? - நாயகம்

இல்லை. அது சர்வாதிகாரத்துக்கே வழி வகுக்கும்.
ஒரு கட்சி ஆளும் என்றால் மற்ற கட்சி எதிர்க்கட்சி.
பல்வேறு மதம்,சாதி, இனம்,மொழி, பண்பாடு மற்றும் வாழ்க்கை முறைகளின் கலவையால் ஒன்றுபட்ட இந்தியாவிற்குள் இந்தியக் குடிமகன் யாரும் அரசியல் கட்சி உருவாக்கலாம் என்ற ஜனநாயக உரிமை இருப்பதால், பலகட்சி முறையே சிறந்தது.
இப்போது மத்தியிலும் பல மாநிலங்களிலும் பல கட்சி ஆட்சிதானே நடந்து வருகிறது.


நதிநீர் பங்கீட்டு முறை சாத்தியமா? - ரஜினி

வினாவில் தெளிவில்லை. நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசுடனான நதிநீர்ப் பங்கீடா அல்லது இந்தியாவிற்குள் மாநிலங்களுக்கிடையே உள்ள நதிநீர்ப் பங்கீடா?
அண்டை நாடுகளுடன் முறையான ஒப்பந்தம் மூலம் இது சாத்தியமாகலாம். மாநிலங்களுக்கிடையில் மத்திய அரசு நதிநீர்ப் பங்கீடு செய்யலாம்.
ஆனால் குறுகிய அரசியல் மற்றும் மாநில வெறிகள் தூண்டப்பட்டு குழப்பம் ஏற்படலாம்.
எனவே உச்சநீதிமன்றம் போன்ற தனித்த உரிமைகளுடன் ஒரு நதிநீர்ப் பங்கீட்டு ஆணையம் --தேர்தல் ஆணையம்போல-- அமைத்தால் இது சாத்தியமே!


சிறு வயதில் தந்தையை விரும்பும் சிறுவன் வளர்ந்த பிறகு எதிரியைப் போல் பார்ப்பது ஏன்? - ஆறுமுகம்

இது பொது விதி இல்லை. வீடு சிறைச்சாலையாகவும் தந்தை சிறைக்காவலனாகவும் இருக்கும் வீடுகளில் இது நடக்கும்.
கட்டுப்பாட்டுடன் வளர்ப்பதாக எண்ணிக் கொண்டு கழற்ற முடியாத தளைகளைப் போட்டால் இப்படி நடக்கும் வாய்ப்பு அதிகம்.
மக்களை சுதந்திரமாக வளர அனுமதிக்க வேண்டும்.தந்தை நண்பனாகப் பழக வேண்டும். படி படி என்று சொல்லி அவர்களைப் பயமுறுத்தக் கூடாது. நம் விருப்பங்களை அவர்கள் மீது திணிக்கவும் கூடாது.
நான் உனக்கு இவற்றையெல்லாம் தருகிறேன்..நீ இப்படி வருவதற்காக என்று அவர்களுக்கு ஒரு குறிக்கோளை அடையாளம் காட்டிவிட்டு அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்களிடம் ஏற்படும் தவறுகளை அன்போடு, நட்போடு சுட்டிக் காட்டித் திருத்த வேண்டும்.
நீ இந்தக் குறிக்கோளில் தோற்றுவிட்டால் நான் வருந்துவேன் என்று அவர்களுக்கு உணர்த்திவிட்டால் நாம் வருந்தக்கூடாது என்பது அவர்களின் பொறுப்பாகி விடும். என் மக்கள் என்னை மிக நேசிக்கின்றனர்.


தமிழன் மட்டும் இந்தி படிக்க விரும்புவதில்லையே, ஏன்?- ராஜா

சென்ற தலைமுறையின் தாக்கம் இப்போதும் தொடர்வதால்...
அரசியல் லாபத்துக்காகத் தாய் மொழியைக் குறித்து வெறியேற்றி இந்தி மொழியை எதிரியாகக் காட்டி வெறுப்பை வளர்த்ததன் விளைவு இது.
இந்தி படிக்க வேண்டியது கட்டாயமா என்ன?



வாரிசு அரசியல் மேலை நாடுகளில் இல்லையே எப்படி? - மகேஷ்

மேலை நாடுகளிலும் இருக்கிறது.
மேலை நாடான க்யூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தம் தம்பியான ராவுல் காஸ்ட்ரோவை அதிபராக்கவில்லையா?
அமெரிக்கா மேலை நாடுதானே?
அங்கே ஜார்ஜ் புஷ் அப்பனும் ஜார்ஜ் வி புஷ் மகனும் அதிபராகவில்லையா?
கிளிண்டனின் மனைவி ஹிலாரி கூட அமெரிக்க அதிபர் பதவிக்குப் போடியிடத் தாயாராகவில்லையா?
ஆப்பிரிக்க நாடான எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கும் லிபியாவில் அதிபர் முஅம்மர் கடாஃபியும் தம் மக்களை அடுத்த வாரிசாக்கப் பயிற்றுவிக்கின்றனர்.
மக்களாட்சி நடக்கும் இந்தியா, அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளில் தேர்தல் மூலம் வாரிசுகள் தேர்ந்தெடுக்கப்படுவதால் நாம் "வாரிசு அரசியல்" எனக் கொச்சைப்படுத்தக்கூடாது.


அணு உலை அத்தியாவசியமா? ஆபத்தா? - விஷால்

'NECESSARY EVIL 'என்று சொல்வார்களே.. கேள்விப்பட்டதில்லையா?
நம் நாட்டின் மின்சாரத் தேவையை நிறைவு செய்ய அணுமின் உலைகள் தேவையே.
எதில் தான் ஆபத்தில்லை.?
நம் நாட்டில் நகரங்களில் சாலையைக் கடப்பது கூட ஆபத்தானதுதான். அதற்காக நாம் சாலையைக் கடக்காமல் இருக்கிறோமா? கடப்பதற்கு முன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்கிறோமல்லவா?
அதுபோல அணு உலைகளிலும் தீயவர்களின் நாசவேலை, ஊழியர்களின் அலட்சியம், எந்திரங்களின் பழுது, மூலப்பொருளில் கலப்படம் போன்றவற்றை அதிக அக்கறையுடன் கண்காணித்துத் தடுத்து வந்தால் 99% ஆபத்து வர வாய்ப்பில்லை.



பல மொழிகள் தோன்றியது எவ்வாறு? - சர்தார்

மொழி எண்ணங்களை வெளிப்படுத்தும் கருவி.
உலகில் மனிதன் குழுவாக வாழத் தொடங்கியபோது தன் எண்ணங்களை ஒலிகள் மூலம் வெளிப்படுத்தி இருப்பான்.
பின்னர் உந்தி, தலை,தொண்டை, நெஞ்சு, பற்கள், உதடுகள், நாவு, அண்ணம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு "வா", "போ", "தா" போன்ற சொற்களை ஒலித்திருப்பான்.
மனிதர்களை,பொருட்களை, மரம். செடி, கொடிகளை, காய், கனிகளை, விலங்குகளை, பறவைகளை இன்னபிறவற்றை அடையாளப்படுத்தவும் வேறுபடுத்திக் காட்டவும் பெயர்களைச் சூட்டியிருப்பான்.
கோர்வையாகப் பேசியதால் சொற்றொடர்கள் உருவாயின. மனித இனம் பெருகப் பெருகத் தமக்கும் கால்நடைகளுக்கும் நீரும் மேய்ச்சல் நிலமும் தேடிப் பல இடங்களுக்கும் பரவத் தொடங்கிய மனிதன் ஆங்காங்கு புதிய புதிய சொற்களை உருவாக்கியிருப்பான்.
இப்படியே பல இடங்களில் மொழிகள் பல உருவாகி இருக்கலாம்.



நித்யானந்தா நான் ஆண் இல்லை என்கிறாரே?? - குமார்

இந்தக் கூற்றை உடனே புறந்தள்ளிவிட்டது காவல் துறை. நித்தி ஆண் இல்லையென்றால் பெண்ணா?
ஆண் எனச் சொல்லி அரசை ஏமாற்றிப் பாஸ்போர்ட் எடுத்தாரா?
தம் பக்தர்களையும் சீடர்களையும் ஏமாற்றினாரா?
எனில் மற்றொரு மோசடி வழக்கும் அவர்மீது பாயுமே?


அரசிடமிருந்து இலவசங்கள் பெறுவதை கௌரவக் குறைவாக யாரும் கருதுவதில்லையே...ஏன்? - ராஜேஷ்

தம் வாக்குரிமையை அரசியல் கட்சிகளுக்கு விற்போர் அரசிடமிருந்து இலவசங்கள் பெறுவதைக் கெளரவக் குறைச்சலாகக் கருதுவதாவது?
நம் வரிப்பணத்தில் அரசு வழங்குவதுதானே என்ற எண்ணம் கூட இதற்குக் காரணம் ஆகலாம்.


காங்கிரஸ் விரும்பினால் மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் கூட்டணி வைப்போம் என பாஜக கூறுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? - அன்ஸாரி

வியப்பில்லை.
வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லா அரசியல்வாதிகள் இதுவும் சொல்வார்கள்; இதற்கு மேலும் செய்வார்கள். வெளிநாடான இதாலியைச் சேர்ந்த சோனியாவை இந்தியாவை ஆளும் கட்சியின் தலைவராக ஏற்க முடியாது என்று கடுமையான குற்றச்சாட்டைக் கூறி, சரத் பவாரும் சங்மாவும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறித் "தேசியவாத காங்கிரஸ்" எனும் கட்சியைத் தொடங்கினர். பின்னர் அவர்களே காங்கிரஸ் கட்சியுடன் அல்லது அவர்களுடன் காங்கிரஸ் கட்சி வெட்கம் கெட்ட கூட்டணி அமைத்து மராட்டிய மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சி அமைத்து அமைச்சர் பதவிகளையும் பங்கிட்டுக் கொண்டனர். சொரணை கெட்டவர்கள்.
ஜெயலலிதா கட்சியுடன் இனிமேல் கூட்டணி வைப்பது பெற்ற தாயைப் புணர்வதற்கு ஒப்பாகும் என்று சொன்ன ராமதாஸ் விரைவிலேயே மீண்டும் கூட்டணி வைத்தார்.
கடந்த காலத்தில், கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளை எதிர்த்தும் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியிலும் தேர்தலைச் சந்தித்த மார்க்ஸிஸ்ட் கட்சியினர் தமிழகக் கேரள எல்லைப் பகுதிகளில் இப்புறம் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளார்களுக்கு ஆதரவாகவும் அப்புறம் எதிராகவும் பிரச்சாரம் செய்தனர்.
மதவாத கட்சி எனக் கூறப்படும் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதாதளம் கர்நாடகத்தில் கூட்டணி வைத்துக்க் கொண்டது.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!


வாசகர் கேள்விக்கு பதில் சொல்வதால் என்ன சாதித்தீர்கள் வணங்காமுடி?? - ஜோஸப்

அறிவைத் தேடும் வாய்ப்புக் கிடைத்தது....


கலைஞரைப்போல் யாருக்கேனும் இந்தளவு பாராட்டு விழா நடந்திருக்கிறதா? - அழகு

கேட்டு வாங்கினால் யாருக்கும் இதுபோல் நடக்கும்.
நான் ஒரு வார இதழில் படித்த செய்தி:--
"சிலநாட்களுக்கு முன்பாக துணை சபாநாயகர் வி.பி.துரைசாமிக்கு முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. 'அட! நம்மையும் முதல்வர் அழைத்துப் பேசுகிறாரே' என்று சந்தோஷப்பட்டுக் கொண்டே கோபாலபுரத்துக்கு ஓடினார் துரைசாமி.
'வாயா! அருந்ததி இனத்துக்கு ஏகப்பட்ட சலுகைகள் செஞ்சிருக்கேன். ஒருத்தரும் பாராட்டு விழா நடத்த முன்வரலையே?' என்று கேட்டார்.'ஏற்பாடு செஞ்சிடுறேன் தலைவரே' என்று ஒரு வரியுடன் திரும்பினார் துரைசாமி. வரும் டிசம்பர் 5ஆம்தேதி அருந்ததியருக்குச் சலுகைகள் வழங்கியதற்காக வள்ளுவர் கோட்டத்தில் விழா நடக்கிறது.
- தமிழக அரசியல் இதழ் 03/12/09
உண்மையான பாராட்டு என்பது பதவியில் இல்லாதபோதும் தரப்படுவதே!

பன்றி காய்ச்சல் என்ன ஆச்சு? - சுந்தரம்

பரபரப்பு அடங்கி விட்டது.
பன்றிக்காய்ச்சல் தொடர்பாக இதற்கு முன் அளித்த விடையையும் பாருங்களேன்.

ஏமாற்றுபவர்கள் பிடிபடும் செய்தி தொடர்ந்து வந்தாலும் மக்கள் ஏமாறிக் கொண்டே இருப்பது வியப்பாக இல்லையா? - ரமேஷ்

இல்லை!
உழைப்பை நம்பாமல் வேறு வழியில் விரைந்து பணக்காரனாக ஆசைப்படுவோரும் போலிச்சாமியார் மூலம் குறுக்கு வழியில்கடவுள் அருளைப் பெற எண்ணுவோரும் இருப்பதுவரை இது தொடர்ந்துகொண்டே இருக்கும்.
 
Source :http://www.inneram.com/201005108256/vanangamudi-answers-11-05-2010