Wednesday, November 4, 2009

பெண்கல்வியும் ஜமால் முஹம்மது கல்லூரியும்


.வி.எம். ஜாஃபர்தீன்
[ கடந்த 58 ஆண்டுகளில் இக்கல்லூரி பெற்ற வளர்ச்சி அளவிட முடியாதது. இன்று இக்கல்லூரியில் 8528 மாணவ மாணவிகள் கல்வி கற்று வருகிறார்கள. 1999ஆம் ஆண்டு 70 மாணவிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் (ஷிஃப்ட்) பிரிவில் இப்போது 2420 மாணவிகள் உள்ளனர். இவர்களில் 55 சதவீதம் பேர் முஸ்லிம் மாணவிகள் என்பது நமக்குப் பெருமை அளிக்கும் விஷயமாகும். கேரளப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அப்துர் ரஹ்மான் கல்லூரிக்கு வந்தபோது, வெகுவிரைவில் இக்கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கையைவிட மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும் என்றார். அது விரைவில் உண்மையாகிவிடும் என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிகிறது.]
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி 1951ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் இணைந்த கல்லூரியாக துவக்கப்பட்டது. இது ஒரு மதச் சிறுபான்மையினரின் கல்விக் கூடமாக அங்கீகரிக்கப்பட்டது. 87 ஏக்கர்  நிலப்பரப்பைக் கொண்ட இக்கல்லூரி, அன்றைய முதல்வர் குமாரசாமி ராஜா அவர்களால் சென்னை ஆளுநர் பவநகர் மஹாராஜா தலைமையில் துவக்கப்பட்டது.
ஆரம்பத்தில், பட்டப்பிடிப்பில் 250 மாணவர்களையும் 12 ஆசிரியர்களையம் கொண்டு துவங்கிய இக்கல்லூரியில் 1963இல் பல உயர் பட்டப் படிப்புகளையும் தொடங்க பல்கலைகழகம் அனுமதி அளித்தது.
''Jazaakallaahu khairan'' சமநிலை சமுதாயம்
source : nidur.info


நாம் யார் ?

வளமையான
வாழ்விற்காக
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள் !
வறுமை என்ற
சுனாமியால்
அரபிக்கடலோரம்
கரை ஒதுங்கிய
அடையாளம் தெரிந்த
நடை பிணங்கள் !
சுதந்திரமாக
சுற்றி திரிந்தபோது
வறுமை எனும்
சூறாவளியில் சிக்கிய
திசை மாறிய பறவைகள் !
நிஜத்தை தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு
முத்தம் கொடுக்கும்
அபாக்கிய சாலிகள் !
தொலைதூரத்தில்
இருந்து கொண்டே
தொலைபேசியிலே
குடும்பம் நடத்தும்
தொடர் கதைகள் !
கடிதத்தை பிரித்தவுடன்
கண்ணீர் துளிகளால்
கானல் நீராகிப் போகும்
மனைவி எழுதிய
எழுத்துக்கள்!
ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம் நடத்தும்
கம்ப்யூட்டர் வாதிகள் !
நலம் நலமறிய
ஆவல் என்றால்
பணம் பணமறிய
ஆவல் என கேட்கும்
. டி . எம் . மெஷின்கள் !
பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறி கொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள் !
. சி .. காற்றில்
இருந்துக் கொண்டே
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும் துறந்தவர்கள் !
வளரும் பருவத்திலே
வாரிசுகளை
வாரியணைத்து
கொஞ்சமுடியாத
கல் நெஞ்சக்காரர்கள் !
தனிமையிலே
உறங்கும் முன்
தன்னையறியாமலே
தாரை தாரையாக
வழிந்தோடும்
கண்ணீர் துளிகள் !
அபஷி என்ற அரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின் மூலம்
அர்த்தமானவர்கள் !
உழைப்பு என்ற
உள்ளார்ந்த அர்த்தத்தை
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!
முடியும் வரை
உழைத்து விட்டு
முடிந்தவுடன்
ஊர் செல்லும்
நோயாளிகள் !
கொளுத்தும் வெயிலிலும்
குத்தும் குளிரிலும்
பறக்கும் தூசிகளுக்கும்
இடையில் பழகிப்போன
ஜந்துகள்!
பெற்ற தாய்க்கும்
வளர்த்த தந்தைக்கும்
கட்டிய மனைவிக்கும்
பெற்றெடுத்த குழந்தைக்கும்
உற்ற குடும்பத்திற்கும்
இடைவிடாது உழைக்கும்
தியாகிகள் ! 
from : Faizur Hadi

Tuesday, November 3, 2009

எது உண்மைக்காதல்



காதல் எனும்
வார்த்தையையே
களங்கப்படுத்திய
காதலர்தின இளவல்களே!
உங்கள் காதல்
உண்மைக் காதலன்று.

வண்டுகள்
மலர்களை ஏமாற்றித்
தேனைப் பருகிவிட்டு
அம்மலர்களைக்
கைவிட்டுவிடுவதைப்போல்

நீங்கள்
உங்களின் மோகத்தால்
நங்கையரின்
தேகசுகத்தை
அனுபவித்துவிட்டுப்
பேதையரின் தேகத்தைக்
கைவிட்டுவிடுகின்றீர்!

ஆம்!
நீங்கள்
தேகத்தைக் காதலிக்கும்
மோகப்பருவத்தில்
மூழ்கிக்கிடக்கின்றீர்!

இல்லையென்றால்
மணமுடித்த
சில மாதங்களிலேயே
மனக்கசப்பும்
மணமுறிவும்
ஏற்படுவதேன்?

மணாளியோ
மணவிலக்குக்கோரி
நீதிமன்றம் செல்வதேன்?

இளைஞனும் இளைஞியும்
தம்பதியராகி
இல்லறத்தில் காதலிப்பதே
இயல்பான காதல்
அதுவே
உண்மைக்காதல்!
மிக்க நன்றி : http://hadibaquaviar.blogspot.com/

கல்வி முறை மாற்றம் தேவையா…

நண்பர்களே…

எனது மனதை நெடுங்காலமாக உருத்தி வரும் விஷயம் இது. உங்கள் கருத்துக்களை
முன்மொழியுங்கள் என்னுடைய சந்தேகத்திற்கு… என்னுடைய சந்தேகம் இதுதான்… நமது
மக்கள் நிறைவான அறிவைப் பெற எவ்வகையான கல்வி முறை அவசியம்…

நமது இதிகாசங்களில் குறிப்பிட்டுள்ள குருகுலக்கல்வி முறை தற்போதைய சூழ்நிலைக்கு
சற்றும் ஒத்துவராது. அதை புறக்கனித்து விடலாம்…

இப்போது உள்ள கல்வி முறைக்கு என்ன குறை என்று கேட்பீர்கள்… நான் குறையாக
காண்பவை இவைகள்தான். இக்கருத்துக்கள் பெரும்பான்மை நிலவரத்தை குறிப்பவை.

·         தற்போதைய சூழ்நிலையில் படிக்கும் மாணவன் மதிப்பெண்ணிற்காக மட்டுமே
படிப்பது முதல் குறை.

·         பெற்றோர்களின் நினைப்பை நிறைய மதிப்பெண் நமது மகன் (மகள்) வாங்க
வேண்டும், அப்பொழுதுதான் அவனது (அவளது) வாழ்க்கை நன்றாய் இருக்கும் என
மாற்றியது இரண்டாவது குறை.

·         மதிப்பெண்ணை மட்டுமே மனதில் கொண்டு படிக்கும் மாணவன் தன்னைத்
தேர்ச்சிப் பெற்றவனாக காட்ட வேண்டும் என்பதற்காக சிறுதாள்களில் பாடங்களை
திருட்டுத்தனமாக எழுதி எடுத்துச் சென்று பரீட்சை எழுத தூண்டி மறைமுகமாக
திருட்டை போதிப்பது மூன்றாம் குறை.

·         பொறியியலோ மருத்துவமோ படிக்க மதிப்பெண்ணை மட்டுமே மையமாக வைத்து,
அறிவை சோதிக்காமல் கற்க அனுமதி தருவது நான்காவது குறை.

இப்பொழுது மதிப்பெண் இல்லாவிட்டாலும் பணம் கொடுத்து படிப்பது வாடிக்கையாகி
விட்டது. இது நமது மடலை திசைதிருப்பக் கூடியதாய் அமையும் அதனால் இதை விட்டு
விடுவோம்.

இவ்வாறு பல குறைகளை கொண்டு அறிவை வளர்க்க கல்வி என்ற நிலை மாறி மதிப்பெண் பெற
கல்வி என்ற நிலையை அடைந்திட்ட கல்வியை அறிவை வளர்க்ககூடியதாக மாற்ற என்ன
வழி்?..

  source  http//groups.google.com
  நன்றி:அன்புடன்

புதுக்கவிதையாய்!

என் எழுத்துகள் அழகாயிருக்கிறதா?என்றேன்
நீங்கள்எழுதுவதெல்லாம் அழகாய்த்தானே
இருக்கும் என்றாய். அதை மறுத்து  நான் சொன்னேன்
உன்னை பற்றி எழுதுவதால் அவை
அழகாய் தொனிக்கின்றனஎன்றேன்.
வெட்கத்துடன் ஏற்றுக்கொண்டாய் புதுக்கவிதையாய்!

நன்றி உங்களுக்கு : கயல் இயல்  : கயல்மகிழ்நன் -

Monday, November 2, 2009

நாவைப் பேணுக!

உண்மை பேசுக!
அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119
நேர்மையாக பேசுக!
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
அழகானதைப் பேசுக!
பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83
கனிவாகப் பேசுக!
உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8
நியாயமாகப் பேசுக!
நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152
அன்பாகப் பேசுக!
அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36
வீண் பேச்சை தவிர்த்துடுக!
நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68
பொய் பேசாதீர்!
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116
புறம் பேசாதீர்!
உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12
ஆதாரமின்றி பேசாதீர்!
யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35
அவதூறு பேசாதீர்!
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23
From : faizur Hadi
  நன்றி

Sunday, November 1, 2009

இருட்டு பேசுகிறது



நான் இருட்டு
கொஞ்சம் ஊடுருவிப் பாருங்கள்
நானே நிஜம்
வெளிச்சம் விருந்தாளி
நானே நிரந்தரம்

புலன்கள் ஐந்து
அவற்றுள் ஒற்றைப்புலனே
வெளிச்சத்தின் அடிமை
அந்த விழிகளும் என்னில் மட்டுமே
கனவுகள் காண்கின்றன

கனவுகளே உங்களின்
சத்தியப் பண்புகளைச் சொல்கின்றன
உங்களின் சரியான முகவரி
உங்கள் கனவுகளில்தான்
பொறிக்கப் பட்டிருக்கிறது

வெளிச்சம் உங்களைப்
பொய்யுடன் பிணைத்துக் கட்டுகிறது
வெளிச்சம் பொய்களின் கூடாரம்
இருட்டே உண்மையின் தீர்மானத் தளம்

என்றாவது உங்களை
வெளிச்சத்தில் பார்த்திருக்கிறீர்களா
இருட்டில்தானே நீங்கள் தெரிவீர்கள்

வெளிச்சத்தில் உங்களுக்கு தினம் ஒரு முகம்
இருட்டில் உங்களுக்கு ஒரே முகம்

வெளிச்சத்தில் நாளும் நிறம்மாறுகிறீர்கள்
இருட்டில்தான் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்

வெளிச்சம் பொய் இருட்டே நிஜம்

வெளிச்சம் துயரம்
இருட்டே சந்தோஷம்
வெளிச்சம் அரக்கன்
இருட்டே உங்கள் தாய்

நிறைய அழுகை மனிதனுக்குச் சொந்தம்
அவை அனைத்தும் வெளிச்சம்
உங்களுக்குத் தந்த விசங்கள்

அத்தனைக் கண்ணீரையும் கொட்டித்தீர்க்க
இருட்டே உங்களுக்கு மடி வார்க்கிறது

கரு எங்கே உதிக்கிறது
விதை எங்கே முளைக்கிறது
உயிர்கள் அத்தனைக்கும் மூலம் இருட்டுதானே

வெளிச்சம் வேசம்
வெளிச்சத்தில் சொல்லப்பட்ட கதைகள்தாம்
இருட்டை பயமென்று பிதற்றுகிறது

கருப்பையில் பயந்தீரா வெளிவந்து அழுதீரா
இருட்டா உங்களுக்குப் பயம் சொல்லித்தந்தது

வெளிச்சம் கவலைகளின் தொழிற்சாலை
இருட்டு உங்களின் சத்தியமான வாழ்க்கை
புறக்கண் என்றேனும் எவரின் நிஜத்தையும்
உங்களுக்குக் காட்டி இருக்கிறதா

சொல்லுங்களேன்
பாசமென்பது பெத்தவளின் முகமா
அவள் அரவணைப்பா
காதல் தந்தது காதலியின் வெளியழகா
அவள் உள்ளழகா
நிம்மதிச் சொத்து
உருவங்களாலா உள்ளங்களாலா

யோசித்துப் பாருங்கள்
இருட்டையே நீங்கள் காதலிக்கிறீர்கள்
வெளிச்சத்தை வெறுக்கிறீர்கள்
வெளிச்சம் இதயத்தை மதிப்பதில்லை
இருட்டு உருவத்தை மதிப்பதில்லை

தினம் தினம் வெளிச்சம்
உங்களை ஏமாற்றுகிறது

தவறாக எண்ணாதீர்கள்
இருட்டு வெளிச்சத்தைக் கண்டு
ஓடி ஒளிவதில்லை
வெளிச்சத்துக்கும் வாழ்க்கை தருகிறது
வெளிச்சம் இல்லாமல் இருட்டு இருக்கும்
இருட்டே இல்லாமல்
வெளிச்சம் எங்கே இருக்கும்

பூமி இருட்டு
நிலா இருட்டு
கோள்களெல்லாம் இருட்டு
பிரபஞ்சமே இருட்டு
உயிர்கள் அத்தனையும் இருட்டின் துகள்கள்
இருட்டே நிஜம் வெளிச்சம் பொய்


  source:buhari.google pages .com
  நன்றி:அன்புடன் புகாரி