இன்றென்று ஒன்றில்லாத
என்றென்றும் ஒருபோலுள
நிதர்சன நித்தியதில்
நிரந்தரமாக வேண்டும்
வலிக்கும் வலிகளும்
வாட்டும் வடுக்களும்
காணாமல் போய்விட
நிர்மால்யநிலை வேண்டும்
ஐம்பூத அணைப்பில்
ஐம்புலனும் தொலைத்து
ஐய்யமில்லா நிலைப்பாட்டில்
நிலைக்க வேண்டும்
இருளும் அடைதலும்
இல்லாத ஒளியினில்
அகமே அலங்காரமாய்
மிளிர வேண்டும்
புறம்தனை துறந்து
பொருட்பற்று அற்றிட
அருட்பெரும் பேரினை
பெற்றிட வேண்டும்
பேதங்கள் தவிர்த்து
ஓரணியில் நின்று
ஓரிறையில் ஒன்றி
தெளிதல் வேண்டும்
My Tamil Poem
from: Abdul Kader

No comments:
Post a Comment