Showing posts with label உலகம் video. Show all posts
Showing posts with label உலகம் video. Show all posts

Thursday, September 30, 2010

அன்பு மனைவியே ! உன்னை யாரும் இடிக்க விடுவேனா ! மனம் மகிழுங்கள்

பூங்காவில் உலாவ சென்ற காதல் ஜோடிகள்.

கணவன் மனைவியிடம் பாசம் காட்டிய விதம்.....!

மனம் மகிழுங்கள்

கொஞ்சம் சிரிங்க....!




Wednesday, September 29, 2010

நான் ஆண் ஜாதி ..டும் ..டும்


திருமணத்திற்கு முன் உன்னை மிகவும் நேசித்தேன்  உணக்காக எதுவும் செய்ய காத்திருப்பதாக சொன்னேன் .உணக்காக என் உயிரைக் கூட தறுவேன் உன் மடியில் உயிர் விடுவதாகவும்  சொன்னேன் . அப்பொழுது நமக்குள் கருப்பு  சிகப்பு தெரியவில்லை.
ஏன்! பணம் பற்றியும் யோசிக்கவில்லை
திருமணத்திற்கு பின் உன்னை நான் நேசம் கொள்ளவில்லை,  நேசம்,நாசம் ஆனது .ஏன்?  நீ நினைப்பது
ஆண்கள்  அனைவரும் மோசமானவர்கள் என்று. ஆனால் உன் தவறு என்ன என்பதனை சிறிதாவது சிந்தித்தாயா!
அது உன்னால் முடியாது . உன் தாய் மற்றும் நம் காதல் திருமணத்தினை விரும்பாதவர்கள் அதற்கு உன்னை சிந்திக்க
விட்டு விடுவார்களா !
நீ நினைப்பது நான் உன்னை அடிமையாக்கி  விட்டேன் என்று.உண்மையில் நீ என்னை அடிமையாக்கி நான் என் அன்புத்  தாய்  மீது வைத்திருக்கும் பாசத்தினை கெடுத்து என்னை பாவியாக்கினாய். சரி விடு. உனக்கும் உன் குடும்பத்தாருக்கும்  ஒரு டாட்டா !
யானைக்கும் அடி சருக்கும் என்பது மொழி. எனக்கு அப்படி  அல்ல.
எனக்கு இளம் வயது .
   புதிய இளம் பெண் கிடைக்கும். புதிய மனைவியுடன் அருமையாக இல்லம் நடத்துவேன்
பாவம் . நீ கை பட்ட ரோஜா .உன்னை மணக்க யார் வருவார் ?
நான் ஆண் ஜாதி கவலை இல்லை .நான் கல்யாண மாப்பிள்ளையாக்கும்
ஆகா ..ஆகா  டும் ..டும்..

(நான் ஆண் ஜாதி கவலை இல்லை .நான் கல்யாண மாப்பிள்ளையாக்கும்
ஆகா ..ஆகா  டும் ..டும்..
(humorously)வேடிக்கையாக ஆணின்  வாடிக்கையான திமிரை ஆணவத்தை ஒழிக்க காட்ட போடப்பட்டது)


''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 291

Monday, September 27, 2010

அக மகிழ்ந்து ஆனந்தம் அடைய .முல்லா நஸ்ருதீன்

 முல்லா நஸ்ருதீன்
அவசரமான உலகில் சிறிது இளைப்பாறி அக மகிழ்ந்து   ஆனந்தம் அடைய .முல்லா நஸ்ருதீன்  கதை நமக்கு உதவும் .
கள்ளமற்ற சிரிப்பு என்பது வித்தியாசமானதொரு அனுபவம். அது களைப்பாற்றும் எந்திரவியல் மட்டும் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. நாமும் முல்லா மாதிரியே ஏதோவொரு தருனத்தில் உணர்ந்திருக்கிறோம். செயல்பட்டிருக்கிறோம்.
முல்லா நஸ்ருதீன் சூஃபி ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம். உள்ளத்தை ஆராய்வது சூஃபித்துவத்தின் அடிப்படை.முல்லா நஸ்ருதீன் என்னும் நகைச்சுவை ஞானியை துருக்கியர்களும் கிரேக்கர்களும் ஹோஜா நஸ்ருதீன் என்றழைக்கின்றனர்.முல்லாவின் கதைகள் எல்லாக் காலத்திற்குமானவை.வாழ்க்கையின் எல்லா நிலைகளிலுமுள்ள மனிதர்களும் முல்லாவின் கதைகளில் இடம்பெறுகிறார்கள்.ஓஷோ, முல்லாவின் கதைகளில் சிறந்தவற்றைத் தொகுத்து ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறார்.

முல்லா நஸ்ருதீன் ஒரு நாள்சோகமாக உட்கார்ந்திருந்தார். முல்லாவைப் பார்க்க வந்திருந்த நெருஙகிய சிநேகிதன்  ஏன் சோகமாக இருக்கிறாய்  என்று கேட்க  முல்லா அழ ஆரம்பித்துவிட்டார். என் மாமா தன் பெயரிலிருந்த சொத்துக்களை என் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு  போன மாசம் இறந்துவிட்டார். அதை நினைத்தேன்... அழுகிறேன்... என்றார் முல்லா.
 உன் மாமாவை எனக்குத் தெரியும். அவருக்கு எண்பது வயதாயிற்றே... மரணம்
 இயற்கையானதுதானே... அதற்கென்ன இத்தனை பெரிய சோகம் உண்மையில் பார்த்தால்/ அவரது திரண்ட சொத்து கிடைத்தற்காக நீ சந்தோஷமாகத்தான் இருக்க வேண்டும் ! என்று முல்லாவுக்கு நண்பன் ஆறுதல் சொல்ல முயன்றான்... முல்லாவோ/ என் சோகம் உனக்குத் தெரியாது நண்பா ! போன வாரம்தான் என் சித்தப்பா/ என் பெயரில் ஒரு லட்ச ரூபாய்
 சொத்துக்களை எழுதி வைத்துவிட்டுச் செத்துப்போனார் என்று சொல்லிவிட்டு/ இன்னும் பெரிதாகச் சத்தம் போட்டு அழத்தொடஙகினார். நண்பனுக்குக் குழப்பம் ! உன சித்தப்பாவையும் எனக்குத் தெரியுமே... அவருக்கு எண்பத்தைந்து வயது... பணம் வந்ததை நினைத்துச் சந்தோஷப்படாமல் முட்டாளைப்போல இப்படி அழுகிறாயே  என்று நண்பன் எரிச்சலுடன் கேட்டான். என் சோகம் இன்னும் அதிகம். எனது நுறு வயது தாத்தா
 இரண்டு லட்ச ரூபாய்க்கு மேலே என் பெயரில் சொத்து எழுதி வைத்துவிட்டு நேற்று இறந்துவிட்டார் ! என்றார் முல்லா.வெறுத்துப்போன நண்பன் எனக்குப்   புரியவில்லை. நீ ஏன்தான் அழுகிறாய்  என்றான்.முல்லா கண்களைத் துடைத்தபடியே சொன்னார். செல்வந்தர்களான என் மாமா/ சித்தப்பா/
 தாத்தா மூவருமே இறந்துவிட்டார்கள். இனிமேல் என் பேரில் சொத்து எழுதி
 வைத்துவிட்டுச் சாக உறவினர்கள் யாருமே இல்லையே !
 மிக முக்கியமான ஒரு கருத்தை உணர்த்துவதற்காகச் சொல்லப்படும் கதைதான் இது. சந்தோஷத்துக்கும் திருப்திக்கும் எல்லை நாம் வரையறுத்துக் கொள்வதில்தான் இருக்கிறது. 

Saturday, September 18, 2010

பணம் - படம் - பார்த்து மகிழ்வோம் .

தேடியவர்கலுக்கு பணம் கிடைக்காமல் போகலாம் .தேடாதவர்கலுக்கு  பணம் கிடைத்துவிடலாம் .
ஆனால்  எல்லாரும் பணத்தினை பார்க்க முடியும் .அழகு பணத்திலேயும் உண்டு .பாருங்கள்.
                                                ஹாங்  காங் ( டாலர்ஸ் )
                                                      பிரெஞ்சு   (பிரான்க்  )
                                         சுவிட்சர்லாந்த்  (பிரான்க்ஸ் )

                                   கொமொரோஸ்  (கோமொரியன்  பிரான்க் )

                                      சோ டோம்  & பிரின்சிப்  (டோப்ராஸ் )பணத் தாள்

                                           நியூ  ஜிலாந்து   டாலர்ஸ் (பண நோட்டு )
                                            குக்  அய்லாந்து    ( டாலர்ஸ் ) 

                                               ய்ஸ்லாந்து  (க்ரோனுர்ஸ் )
  உலகின் முதல் ஜனநாயக நாடு எனும் பெருமையை அய்ஸ்லாந்து பெறுகிறது. அந்நாட்டுச் சட்ட மன்றம்தான் உலகிலேயே பழமையானது

                                பரோ(அரொஎ)   அய்லண்ட்ஸ்  (க்ரோனுர்ஸ் )
                                               
                                                  மாலத் தீவு (ருபியா )

throughmail :from fazalmohamed mohamedshakir
பணம் கிடைக்க எத்தனை வகை சிரிப்பு :  பார்த்து மகிழ்வோம் .