அறிவின் கனம் இருப்பதாலேயே
தலை கர்வம் கொள்வதை மற்றவர்
களால் ஜீரணிக்க இயலவில்லை.
தலைக் கனத்தை குறைக்க அவை
ஒன்று கூடி ஆலோசித்தன.
எல்லாம் இணைந்து மலக்குடலை
தூண்டி விட்டன.
5 - நாட்கள் தொடர் விடுமுறை எடுக்க
அவை கெஞ்சி கேட்டு கொண்டன.
உற்ற நண்பர்கள் தந்த உற்சாகம்
கரை புரள, பணி நின்று போனதால்
மலச்சிக்கல் கண்டு உடல் நொந்து
போனது. மூளையால் சிந்திக்க
இயலவில்லை. தலைவலி வந்து
தலை தாழ்ந்து போனது.
தலையின் கோலம் கண்டு
சிரித்த நண்பர்கள், தலையை
பார்த்து கேட்ட கேள்வி..
தலைவா!
நம்மில் யார் உயர்ந்தவர் என்பது
இப்போதாவது புரிகிறதா!
உயர்ந்த தலை, அவமானம்
தாங்காமல் மீண்டும் கவிழ்ந்து
கொண்டது.
At times anus is more powerful
than the head
Vavar F Habibullah

No comments:
Post a Comment