அலைபோல் ஆர்ப்பரிக்கும்
மனம் கொண்டேன்
கடல் கண்டேன்
கடல் ஆழம் போல்
சிந்தனை கொண்டேன்
கடல் கண்டேன்
வருவதை உள்வாங்கும்
திறன் கொண்டேன்
கடல் கண்டேன்
ஒவ்வாததை வெளியேற்றும்
வழி கண்டேன்
கடல் கண்டேன்
பரந்து விரியும்
பார்வை பெற்றேன்
கடல் கண்டேன்
வானத்தை பிரதிபலிக்க
கற்றுக் கொண்டேன்
கடல் கண்டேன்
பிரிவன இணையக்
கண்டேன்
கடல் கண்டேன்
வரையறுத்த எல்கைக்குள்
கட்டுப்பட்டேன்
கடல் கண்டேன்
கடலைப் படைத்த
மகா பெரியோனைக் கண்டேன்
கவிதை யாத்தவர் Abdul Kader Sangam


ரசித்தேன்...
ReplyDeleteAbdul Kader Sangam அவர்களுக்கு வாழ்த்துக்கள்...