Vavar F Habibullah
கேரளாவை சார்ந்த ஒரு பெரிய பிஸினஸ் மேன், உம்ரா மற்றும் ஹஜ் விசாவில் மக்கா வந்தார். சாதாரண மெடிக்கல் செக்கப்புக்காக என்னை பார்க்க மருத்துவமனை வந்தார். அவர் சொன்னார்...,"டாக்டர் சார்... நான் ஒரு டயபடிஸ் பேஷியண்ட், ஆனால் அதிசயம் பாருங்கோ, மக்காவில் கால் வைத்ததுமே டயபடிஸ் இருந்த இடம் தெரியாம மறைந்து போய் விடுகிறது."
பேசிக் கொண்டிருந்தவர், திடீரென்று வயிற் றை பிடித்துக் கொண்டு அலறினார். அது ஒரு 'அக்யூட் அப்டாமன்' கேஸ் போல் தோன்றவே உடனடியாக ICU வில் அட்மிட் பண்ணி, தேவையான சிகிச்சையைத் தொடர்ந்தோம்.
சற்று 'ஸ்டபிலைஸ்' ஆன பிறகு அல்- நூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தேன்.
அவருடன் தங்கி இருந்து, அவரை கவனிக்க எவரும் இல்லை. வந்தவர்கள் அவர்கள் பணிகளை கவனிக்க சென்று விட்டனர். அவர் தந்த தகவலின் பேரில், அவருக்கு தெரிந்த உறவினர் ஒருவரை, ரியாதில் இருந்து வரவ ழைக்க ஏற்பாடு செய்தோம். இரவில் வெகு நேரம் கழித்து வந்த அவரை, மருத்துவமனை யில் நோயாளியுடன் இருந்து, அவரை கவனிக்க ஏற்பாடுகள் செய்து கொடுத்தோம்.

