Friday, March 23, 2018

தண்ணீர் தேவை

நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமான பெங்களூரு, தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரைப் போல், தண்ணீர் இல்லாத நகரமாக விரைவில் மாறும் என்று அறிவியல் மற்றும் சூழல் மையம் எச்சரித்துள்ளது.
-செய்தி
மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டவன் .களிமண்ணுக்கும் தண்ணீர் தேவை
மனிதன் உடலுக்குள் நீர் இருப்பது அவசியமாகின்றது .மனிதன் உடலில் நீர் குறைந்தால் அவன் உயிர் போய்விடும்
அரசு எதை எதையோ இனாமாக கொடுக்கின்றது .ஆனால் தண்ணீரை நீர் கிடைக்காத காலத்தில் விற்பனை செய்வது கொடுமையிலும் கொடுமை
காவிரி வாரியம் அமைக்க எடுக்கும் முயற்சியில் தோல்வி .நீரைக் கொடுக்க முடியாத அரசு இருப்பதில் மக்களுக்கு பயனளிக்காத அரசுதான் .
அவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்; இன்னும், (உங்களைக் கேள்விகணக்கிற்கு எழுப்புவதற்காகக்) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது; அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்.
ஹதீஸ் 6:2.

உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.
5:6
(நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).
67:30.
தொழுகைக்கு ஓடும் நதியில் உளு செய்தாலும் மூன்று முறை கழுவியதோடு முடித்துக் கொள்ள வேண்டும்
நீரை வீண் செய்யக் கூடாது
உத்மான் (ரலி) அவர்கள் உளு செய்வதற்காக தண்ணீரை எடுத்து தன் முகத்தை மூன்று முறை கழுவிவிட்டு இப்படித்தான் நபி (ஸல்) அவர்களின் உளு இருந்ததாக கூறினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)

No comments: