Tuesday, February 28, 2017

*உங்கள் பக்கத்தில் இருப்பவர் யார்....?*




நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!

 டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

“சார் பின்னாடி போய் உட்காருங்க.

நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து,
விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.

தோல்விகளைக் கொண்டாடு


ஒரு வெற்றி என்பது
பல தோல்விகளால் ஆனது
நண்பா
தோல்விகளின் சுமைகளைத்
தூக்கித் தூக்கி
தோள்வலிமை உயர்த்தி உயர்த்தி
ஒரு நாள் நீ உன்
வெற்றியை ஏந்தி நிற்பாய்
ஒவ்வொரு தோல்வியிலும்
வெற்றி கிடைக்கவில்லை
என்று நீ புலம்புவது அறிவீனம்
ஒவ்வொரு தோல்வியிலும்
வெற்றியின் ஒரு பகுதி

Monday, February 27, 2017

பயணங்கள் பல விதம் ...

கருவறையில் சங்கமிக்கும்
உயிரணுக்களை தசைகளாக்க
கருக்களின் பயணங்கள் ...
வாழ்க்கை களமதில்
உழைத்து உயர்ந்திட
மனிதர்களின் பயணங்கள் ...
சுவாசப் பைகளில்
மூச்சை நிறைத்திட
காற்றின் பயணங்கள் ...
பூமிதனை வெப்பமூட்ட
ஒளியினை சிந்திடும்
ஆதவனின் பயணங்கள் ...

Saturday, February 25, 2017

யாதும் 02 Yaadhum 02

மனித உள்ளங்களை வெல்வதே நல்லிணக்கம்:

பிற மதத்தவர்களின் உள்ளங்களை காயப்படுத்தாமல், அவர்களுடன் உறவாடி, அவர்களின் உள்ளங்களை குளிர்படுத்தி வெல்வதே சமூக நல்லிணக்கம்:
ஒருவர் தமது மதத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவர்களுக்கு உரிய உரிமைகளை அளித்து சமூக நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாப்பது ஒரு முஸ்லிமின் கடமை என இஸ்லாம் மார்க்கம் அன்பு உத்தரவு போடுகிறது.
இஸ்லாம் வகுத்தளித்துள்ள கடமைகளில், பல் சமய நல்லிணக்கமும் ஒன்று. இதை பயபக்தியுடன் கடைப்பிடித்தாக வேண்டிய கடமை உணர்வு அனைத்து முஸ்லிம்களுக்கும் உண்டு. பல்சமய நல்லிணக்கத்தை, மனிதநேயக் கோட்பாடாகவும், மார்க்கக் கோட்பாடாகவும் இஸ்லாம் விதித்துள்ளது.
உலகில் இஸ்லாம் வழங்கிய மதஉரிமைகள், மதச்சுதந்திரங்கள் மற்றும் மதச்சகிப்புதன்மை போன்றவை அதிகமாகும். பல்சமய நல்லிணக்கத்தை, மற்ற மதங்களைவிட மிக அதிகமாக இஸ்லாம் பேணிப் பாதுகாத்து வருகிறது.
இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக பின்பற்றும் ஒரு முஸ்லிம் மற்ற மதங்களையோ, அந்த மதங்களின் கடவுளையோ, அந்த மதங்களின் வழிபாட்டு தலங்களையோ இழிவாக பேசுவதையும், கேவலமாக நினைப்பதையும் இஸ்லாம் தடை செய்கிறது. மேலும் அந்த செயலை வன்மையாகவும் கண்டிக்கிறது.

முன்பதிவு செய்யப்படாத என் முதல் ரயில் பயணம்.! #நிஷாமன்சூர்

இறுக்கம்
களையவில்லை இன்னும்
எதிர்படும் வீதிகளில் என்வீதி என்வீடு
எதுவென்று தெரியவில்லை
கடந்துபோகும் சிற்றூர்களில்
எனக்குத் தெரிந்தவர்கள்
யாராவது இருக்கலாம்
அந்த வீட்டின் வாசலிலிருந்து
வெறிப்பவளின் மேலுதட்டில்
ஒரு மச்சம்
அவள் வீடும்
அருள் பாலிக்கப்பட்டுள்ளதாதெரியவில்லை

Friday, February 24, 2017

கடலில் மிதக்கும் கச்சா எண்ணெய்யை பிரித்தெடுக்கும் மிதவை இயந்திரம்: மதுரை எலெக்ட்ரீசியன் கண்டுபிடிப்பு

என்.சன்னாசி
கப்பல்கள் மோதிக்கொள்ளும் விபத்து போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் நடுக்கடலில் கொட்டும் கச்சா எண்ணெய்யை எளிதில் பிரித்தெடுக்க உதவும் நவீன மின் மிதவை இயந்திர மாதிரியை, மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் எம்.அப்துல்ரசாக் என்பவர் உருவாக்கி உள்ளார். இந்தக் கருவிக்கான காப்புரிமை கோரி அவர் விண்ணப்பித்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் நடுக்கடலில் 2 கப்பல் மோதிக் கொண்டதால் கச்சா எண்ணெய் கடலில் கொட்டி சுற்றுச்சூழல் மாசடைந்தது. கடலில் கச்சா எண்ணெய் பரவியால் ஏராளமான மீன்கள், ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் மடிந்தன. இதுபோன்ற சூழலில் எண்ணெய் கடலில் கலக்கும்போது, கப்பலில் இருந்தபடியே குறிப்பிட்ட தூரத்தில் உள்ள எண்ணெய் படலத்தை ‘ரிமோட்’ மூலம் பிரித்தெடுக்கும் மிதவை இயந்திரத்தை, மதுரை பிபி.குளத்தைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் எம்.அப்துல் ரசாக்(48) உருவாக்கி உள்ளார்.
45 வகையான கண்டுபிடிப்பு
மேலும் படிக்க
நன்றி http://tamil.thehindu.com


Tuesday, February 21, 2017

அழகும் அழிவும் ....!

வானத்தில் மிதக்கும்போது மேகம் அழகு
மோதிக்கொண்டால் இடியும் மின்னலும்
வனத்தில் இருக்குபோது விலங்குகள் அழகு
பிடிபட்டுவிட்டால் கூண்டிலடைப்பு
கரைதொட்டு செல்லும்போது கடலலை அழகு
கரைதாண்டி வந்துவிட்டால் பேரழிவு
விளக்கில் ஒளிரும் தீபம் அழகு
பற்றிப்பிடித்து பரவிவிட்டால் சர்வநாசம்
உழைத்து வாழ்வது மானுடர்க்கு அழகு
பிறர் உழைப்பில் வாழ்வது சாபக்கேடு
பசிக்கு புசித்தால் ஆரோக்கியம் அழகு
கண்டதையும் உண்டால் பிணிமயம்

Monday, February 20, 2017

ஏ தாழ்ந்த தமிழகமே!

ஏ தாழ்ந்த தமிழகமே!
இந்த வார்த்தைகளை அண்ணா உதிர்த்ததாக ஞாபகம்.கண்ணதாசன் ஒருபடி மேலே போய்,
'யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியல்லே...அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே' என்று கவிதை நடையில் அவர் காலத்து அரசியல் நிகழ்வை திரைப்பட பாடலாக்கி தமிழனை நெகிழ வைத்தார்.
காலங்கள் பல உருண்டோடி விட்டன.
தமிழ் நாட்டில் இப்போது ஜனநாயகம் பங்கு சந்தை வர்த்தகம் போல் ஆகிவிட்டது.இந்த சந்தையில் அதிகம் உறுப்பினர்களை கொண்ட கார்பரேட் நிறுவனம் கட்சி என்ற பெயரில் அரசியல் அங்கீகாரம் பெற்று விடுகிறது.
சட்டசபையை தங்கள் உறுப்பினர்களால் நிரப் பி விட்டால் தமிழ்நாட்டு நிர்வாகத்தை ஐந்து வருடங்களுக்கு எளிதாக குத்தகைக்கு எடுத்து விடலாம்.
ஆட்சி அமைக்கும் கட்சியின் தலைவரே நிரந் தர தலைவர் அல்லது பொதுச் செயலாளர் என்ற பதவியை பெற்று விடுவதால் கட்சியும் ஆட்சியும் ஒருவரின் கைப்பிடிக்குள் முழுமையாக அடங்கி விடுகிறது.தன்னிகரில் லா அதிகாரம் தனிமனித ஆளுமையின் கீழ் வந்து விடுவதால் சர்வாதிகாரம் தழைத்தோ ங்க ஜனநாயகமே தோள் கொடுக்கிறது.
ஜனநாயக ஏழை நாட்டில் கல்வி அறிவு இல் லாதவரே அதிகம் வாக்களிப்பதால் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பாமர மக்களை வேடிக்கை காட்டி அவர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பது என்பது ஹைடெக் அரசியல் கட்சிக ளுக்கு மிகவும் சாதாரண விசயம் தான்.

படித்தவர்களும், அரசியலும்!

அடிக்கடி இல்லாவிட்டாலும், தேர்தல் நேரங்களில் மட்டுமாவது இந்த கோஷம் சற்று ஓங்கி ஒலிப்பதை கவனிக்க முடிகிறது. “படித்தவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும்”. எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான் கணக்காக இதென்ன அபத்தம் என்று குழம்பிப் போகிறோம். இப்போது என்னவோ அரசியலில் இருப்பவர்கள் அத்தனை பேரும் கைநாட்டுகள் என்பதுபோல ஒரு பொதுப்புத்தி மக்கள் மனதில் வலுக்கட்டாயமாக so called படித்தவர்களாலும் ஊடகங்களாலும் திணிக்கப்படுவது சர்வநிச்சயமாக ஜனநாயகத்தின் பண்புக்கு எதிரானது.

மக்கள் நல அரசு ???

இந்த தலைப்பு கேள்வி பட்ட வார்த்தைகளாய் தெரியுது இல்லையா ? ஆம் நமது மத்திய மாநில அரசுகள் மக்கள் நல அரசாக இந்திய அரசியல் அமைப்பு படி செயல் பட வேண்டும் ஆனால் உண்மையில் அப்படி செயல் படுகின்றனவா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். இன்றைய அரசுகள் எல்லாமே ஒரு லாப நோக்கோடு செயல்படும் தொழில் நிறுவனம் போலவே செயல்படுகின்றன. மக்கள் நலம் என்ற வார்த்தையை அதன் பொருளை மறந்து தம் நலம் தம் மக்கள் நலம் என்ற நோக்கிலேயே செயல்படுகின்றன. மக்களின் தேவைக்கு மட்டுமே அரசு நிர்வாகம் என்ற நிலை மாறி அரசின் நலத்திற்கும் வசதிக்குமே மக்கள் வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுத்தப் படுகிறார்கள். உதாரணம் சொல்ல வேண்டுமானால் மின்கட்டண உயர்வு பேருந்து கட்டண உயர்வு இவற்றை குறிப்பிடலாம்.

கரங்கள் வலுப்பெறட்டும்..

தான், தனக்கு என்பதைத் தாண்டி நாம் நம் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. நமக்கு முன் இருந்தவர்கள் சமூக உணர்வோடு செயல்படாமல் போயிருந்தால் இன்று நாம் அனுபவிக்கும் பலவும் நமக்கு கிடைக்காமலேயே போயிருக்கும். இன்று நமது பயன்பாட்டில் உள்ள தொழில் நுட்பம், கல்வி, புத்தகங்கள் என சகலமும் யாரோ ஒருவரின் உழைப்பின், சமூகப் பணியின் பலனாகக் கிடைத்தவையே. நாமும் நம் பங்கிற்கு ஏதாவது சமூகப் பணி செய்து நிறைவான வாழ்க்கை வாழ முற்படுவதே அர்த்தமுடையதாக இருக்கும்.
அன்னை ராபியா அறக்கட்டளையைத் தொடங்கி நான் சில நற்காரியங்களை முன்னெடுத்து வரும் வேளையில், என்னுடன் MCA படித்த கல்லூரி நண்பர்கள் சிலரும் சமூக உணர்வோடு செயலாற்றி வருவது மிகுந்த மகிழ்வைத் தருகின்றது.

Friday, February 17, 2017

புதுக் கவிஞன் ....!

பழம்பெரும் மொழியின்
புதுமுகம் அழகாய்
புன்னகை பூக்க
பதமாய் ஆரத்தழுவினேன்
அழகிய நடையினில்
இயல்புடன் இனிமையாய்
அமிழ்தெனும் தமிழினை
ஆர்வமாய் பழகினேன்
தாயின் தாலாட்டினில்

நெஞ்ஜோடு சேர்ந்து .(காணொளி )

Nenjodu Cherthu X Cold Water (Mashup) - Hanan and Hanna

என்னோடு நீ இருந்தால்

தூக்கத்திலும் எனை நுகர்ந்துப்பார்த்தவள்;..

தூக்கத்திலும் எனை
நுகர்ந்துப்பார்த்தவள்;
பசிக்காமலிருக்கும்போதும்
பாலூட்டியவள்;
வீல்ல்ல் என்று கத்தும்போது
பதறித் துடித்தவள்;
இன்றுவரை..
நான் கறுப்பு என்பதையே
சற்றும் ஒத்துக்கொள்ளாதவள்;
மாநிறம்டா என
மகுடம் சூட்டியவள்;
கறுப்பு தங்கமென்று
தமிழில் வர்ணனை செய்தவள்;
என் பிள்ளைப்போல
எவரென சவால்விட்டவள்;

இந்தவாரக் குங்குமம் இதழில் நிஷாமன்சூர் இரண்டு கவிதைகள்

1)
மாட்சிமைமிகு ஜனநாயக சோஷலிசக் குடியரசு..!
மாமன்னரின் அறிவுரைகளை உண்டு
காலை பசியாறினோம்
மாண்புமிகு அமைச்சர்களின் போதனைகளை
மதிய உணவாக்கிப் புசித்தானந்தித்தோம்
மகாகனம் பொருந்திய கனவான்களுக்கு
ஒரு பணிவான விண்ணப்பம்
கடும் பொய்களைத் தாங்கிக் கொள்ளாத
இலகு வயிறுடைய எம் குழந்தைகள்
வயிற்றுப் போக்கால் பேரவதி கொள்கிறார்கள்
இன்றிரவாவது ஆளுக்கொரு
தோசை வழங்கி ஆசிர்வதிக்கக் கூடாதா ?
#நிஷாமன்சூர்

Thursday, February 16, 2017

விடியலில் விழித்த விழிகள்.....!

ஓர் நீண்ட இரவின்
விடியலில் விழித்த
விழிகள் தனக்கேயான
காட்சிகளைக் காண விழைகின்றன!
இரைதேடி பறக்கும்
அதிகாலைப் பட்சிகள்
சென்றடையும் குளங்களும்
குளக்கரைகளும் நீந்தும் சிறுமீன்களும்!

அன்று, கல்லூரியில் படிக்க மறுக்கப்பட்டவர்...

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு திமுக அரசு பொறியியல் சேர்க்கைக்கு ஒற்றைசாளர முறையை கொண்டுவந்தது. இதில் கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் பயனடைந்தனர். அம்மாதிரி அண்ணா பல்கலைக்கழகத்தால் இடம் ஒதுக்கப்பட்டு, மதுரை தியாகராசர் கல்லூரிக்கு கல்வி பயில சென்ற செல்வாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கிருந்த கல்லூரி முதல்வர் இவருக்கு இடம் தர மறுத்தார். “மின்னியல்/மின்னணுவியல் படிக்க போலியோவால் இருகால்களும் செயலிழந்த உங்களால் முடியாது. ஆய்வகத்தில் ஏதேனும் விபத்துகள் உங்களால் ஏற்படும் பட்சத்தில் அது பெரிய பிரச்சினை ஆகிவிடும்” என்று மறுத்தார்.

Tuesday, February 14, 2017

கற்றதினால் ஆயபயன் என்ன?

பொருளும் பொருள் சார்ந்தவை மட்டுமே வாழ்க்கையின் தேடல் என்றாகிப்போன பொருளை ஆதாரமாக கொண்டு செயல்படும் உலகில் கல்வியை கற்பிப்பதும் காசுக்குதான் என்பதில் ஆச்சர்யம் எனக்கு எழவில்லை.
உங்களுக்கு?
மேலும், பொருளீட்டுவது மட்டுமே கல்வி கற்பதன் நோக்காமாக கருதப்படுவதே தற்கால மனிதர்களிடையே காணப்படும் வேற்றுமைகளின் முக்கிய காரணமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

Saturday, February 11, 2017

கர்ம யோகி

Vavar F Habibullah

வாழ்வில் யோகியாக நடிப்பவர் பலர்.
ஆனால் எல்லா பலமும் இருந்தும் அரசியலில் ஒரு யோகியாக வாழ்ந்து காட்டுவது அரிதான விஷயம்.
அப்படி வாழ்ந்து காட்டியவர் கர்ம வீரர் காமராஜர்.9 வருடங்கள் தொடர்ந்து தமிழ் நாட்டின் முதல்வராக இருந்த போதும் பதவியை பயன்படுத்தி தனக்கென்று தனி சொத்துக்களை சேர்க்காத உத்தமர்.சாக்கடை அரசியலிலும் ஒரு உண்மை மிகு தவ வாழ்க்கை வாழ்ந்து காட்டியவர்.
பதவி இல்லாத போதும் டெல்லிக்கே ராஜாவாக வாழ்ந்தவர்.தமிழன் மானம் காத்த தன்மான தமிழ் சிங்கம் அவர்.
என்ன செய்வது!
தமிழினம் ஏழை பங்காளனை கண்டு கொள்ளவில்லை. காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவை சாத்தும் பண்பு அவரை உதாசீனம் செய்தது.
பாக்கெட்டில் நூறு ரூபாய் நோட்டும் பாங்கில் நூற்றிருபத்தைந்து ரூபாய் மட்டும் மொத்த சேமிப்பாய் கொண்டு வாழும் ஒரு பெருந்தலைவனை எந்த தொண்டன் தலைவனாக ஏற்றுக் கொள்வான்.கையில் காசில்லாத கனம் காமராஜர் வாழும் காலத்திலேயே தமிழ் மக்களின் மனதில் இருந்து காணாமல் போய் விட்டார்.

Friday, February 10, 2017

முன்பாவம் [முன்செய்தபாவம்].

மனக்கிடங்கில்
மன்றாடிக் கிடக்கும் ஊமை உணர்வுகள்
மங்காமல் மறையாமல் கிடந்தழும்
மடிந்துவிட வேண்டி

ஊற்றெடுக்கும் உணர்வுப் பிளம்புகள்
ஊழிக் காற்றிலும்
உதிர்ந்துபோன இலைகளாய்
ஊசலாடியே உயிர்வதை செய்தபடி
எரிவதெல்லாம்
ஒளியாகாது எனத்தெரிந்தும்
எரிந்துகொண்டிருகிறது
சிறு நெருப்பு
அணைந்து விடாது
அடைக்கலம் கொடுக்க
ஆளில்லையென்று துடித்தபடி

சிந்தனைகள் பயணிக்கிறது ...

நட்பின்றி
மனங்கள் இணையாது
மனங்களின்றி
நட்பு கனியாது ....
உள்ளமின்றி
அன்பு பெருகாது
அன்பின்றி
உள்ளம் உருகாது ....
உறவுகளின்று
நேசம் மலராது
நேசமின்றி
உறவுகள் புலராது ....
உழைப்பின்றி
ஊதியம் பெறப்படாது
ஊதியமின்றி
உழைப்பு புறப்படாது ....
அறிவின்றி
கல்வி புலப்படாது

Monday, February 6, 2017

என்ன சொன்னார்

போர்ஹே என்ன சொன்னார்
மார்க்வெஸ் என்ன சொன்னார்
பரோட்டா மாஸ்டர் என்ன சொன்னார்
பொடிதோசை முட்டைதோசை அடை அவியல்
தக்காளி ஊத்தப்பம் கொத்து பரோட்டா

அல்லாமா இக்பால் என்ன சொன்னார்
மெளலானா ரூமி என்ன சொன்னார்
இன்பாக்ஸில் ரகசிய சிநேகிதி என்ன சொன்னாள்
கிரில் சிக்கன் ஹைதராபாத் பாஸ்மதி சிக்கன் ஷவர்மா
கொளத்தூர் சீரகசம்பா பிரியாணி தயிர் பச்சடி

மார்தட்டும் மானிடனே ....!

மார்தட்டும் மானிடனே ....!
இன்பம்வேண்டும் மானிடனே
----- இயற்கையை விலக்கியதேனோ
இல்லாமையை இல்லாதாக்கும்
----- இருப்பதையே தக்கவைத்தால்
அத்தனையும் அதனகத்தன்றோ
----- இயற்கைதரும் கழிவுகளும்
மண்ணில்கலந்து மக்கிஉரமாகி
----- பயிர்செழிக்க உதவிடுமே

தமிழ் ராஜ்யம்

Vavar F Habibullah
(dr habibullah )
தமிழ் ராஜ்யம்
நம் நாட்டில்...
அதுவும் தமிழ் நாட்டில் மக்கள் ஓட்டு போட்டு எம்.எல்.ஏ - வை தேர்வு செய்வார்கள். எம்.எல்.ஏக்கள் ஓட்டு போட்டு தங்கள் சட்ட மன்ற கட்சித்தலைவரை தேர்வு செய்வார்கள்.
மெஜாரிட்டி எம்.எல்.ஏக்களை கொண்ட கட்சி ஆளும் கட்சி அந்தஸ்து பெறும். அதன்
தலைவர் கவர்னரால் முதல்வராக பதவியில் அமர்த்தப்படுவார்.
அரசியலமைப்பு சட்டப்படி...
25 வயது நிரம்பிய இந்திய குடிமகன் யாராக இருந்தாலும் முதல்வராகலாம். அந்த நபர் எம்எல்ஏ வாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.படிப்பு தகுதிகள் எதுவும் தேவை இல்லை. ஒரு விஷயம் தான் இதில் மிகவும் முக்கியம். அதாவது அந்த நபர் ஆளும் கட்சி உறுப்பினர்களால் ஒருமனதாக கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டால் மட்டும் போதும். மிகவும் எளிதாக முதல்வர் ஆகி விடலாம்.
இப்போது சசிகலாவை அவரது கட்சி எம்எல்ஏ க்கள், தலைவராக தேர்வு செய்து விட்டனர்.

Friday, February 3, 2017

"குணமாக்கும் கலை1 of 7 / "KUNAMMAKUM KALAI 1 of 7

ஹீலர்.அ.உமர் பாரூக் பங்கேற்ற "குணமாக்கும் கலை" மக்கள் மருத்துவப் பயிற்சிமுகாமில் (தஞ்சை) பதிவு செய்யப்பட்டது.
Hr.A.Umar farook @ "KUNAMAAKKUM KALAI" public training camp at Tanjore, Tamilnadu. Total programme video containing four parts.
Mail : drumarfarook@gmail.com
web: www.acuhome.org

அவள் மென்மையானவள்

அவள் மென்மையானவள்
பிறந்திடும் போது
அவள் மென்மையானவள்
தவழும் போது
அவள் மென்மையானவள்
நடை பழகிடும் போது
அவள் மென்மையானவள்

இதெல்லாம் எப்படி நடந்தது - 33 மணிவிளக்கு..!!


மணிவிளக்கு மாத இதழ் – இது அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாக்கவி அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட நல்லதொரு தரமிக்க மாத இதழ். அல்லாமா அப்துல் ஹமீது பாக்கவி அவர்கள் துவக்கி வைத்த மணிவிளக்கு ஆரம்பத்தில் குர்ஆனியச் சிந்தனைகளும் இஸ்லாமிய தத்துவ விளக்கங்களும் இஸ்லாமிய இலக்கிய பகுதிகளும் கொண்டு வெளிவந்த மாத இதழ்.

முதல் தலைமுறையான மணிவிளக்கு எழுத்தாளர்களில் பலரும் உலமா பெருமக்களாகத் திகழ்ந்தார்கள்.

ஆரம்ப மணிவிளக்கு எந்த அரசியலையும் அடையாளம் காட்டியதில்லை. அது ஆன்மீக இலக்கிய இதழாகத்தான் தன்னை அறிவித்துக் கொண்டது.

தமிழகத்தில் அன்றைய கட்டத்தில் வாழ்ந்திருந்த ஆலிம் பெருமக்களில் சிலர் காங்கிரஸ் அரசியலை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தனர். அவ்விதம் காங்கிரஸ் அரசியலை ஏற்றுக் கொண்ட ஆலிம் பெருமக்கள் மணிவிளக்கில் அதிகம் எழுதி வந்தனர்.

ஆனால் அரசியல் வாடை அங்கு வீசுவதே இல்லை. அல்லாமா அப்துல் ஹமீது பாக்கவி அவர்களும் காங்கிரஸ் அரசியல் ஆதரவுக் கொண்டவராக இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் உருவாக்கிய மணிவிளக்கு அரசியலை முன்னெடுக்கவில்லை.

மணிவிளக்கு என்ற பெயர் அண்ணலாரை உருவகப் படுத்திய சொல்லாடல். இந்தச் சொல்லாடலுக்கு இலக்கிய பின்னணி உண்டு.

சீறாவைத் தந்த உமரப்பா அவர்கள் அண்ணலாரைக் குறிக்க உருவகப் படுத்திய அற்புதமான சொல்லாடல், மணிவிளக்கு.

பானுவின் கதிரால் இடருறுங் காலம்
படர்தரு தருநிழல் எனலா
ஈனமும் கொலையும் விளைத்திடும் பவநோய்
இடர்தவிர்த் திடுமரு மருந்தாய்த்
தீனெனும் பயிர்க்கோர் செழுமழை யெனலாய்க்
குறைசியிற் திலதமே யெனலாய்
மானிலந் தனக்கோர் மணிவிளக்கு எனலாய்
முகம்மது நபிபிறந் தனரே!