Sunday, February 28, 2016

கைலி - கையலி - லுங்கி - சாரம்

#‎தமிழ்முஸ்லிம்‬

கைலி - கையலி - லுங்கி - சாரம்

நான் அறிந்து கைலி கட்டாத ஒரு தமிழ் முஸ்லிம் கிடையவே கிடையாது.  அவன் கட்டிக் கட்டிதான் தமிழ்நாடே கட்டத் தொடங்கியது என்றும் சொல்வேன்.

கைலி கட்டுவதைக் கௌரவமானதாய் ஆக்கியவர்கள் தமிழ் முஸ்லிம்கள். கைலியின் நிறத்தை வெள்ளையாய் ஆக்கியதும் அது கதர் வேட்டிக்குச் சமமாய் ஆனது.

ஒரு நாலுமுழ வேட்டி கட்டினால் நடக்கும்போது தொடைவரை தெரியும் என்பதால் வெள்ளைக் கைலிக்குள் வந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அப்படியும் ஒரு கருத்து உண்டு.

”ஈரோட்டுச் சந்தையில எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்” என்று அண்ணாவின் படம் ஒன்றில்  ஒரு பாட்டுவரி வரும். ஈடோடுதான் இப்படியான கைலிகளுக்கும் சிறப்பு வாந்தது.

இணையத்தில் கைலி பற்றி அருமையான தகவல்கள் தமிழிலேயே கிடைத்தன.

 'லூஜீ' என்ற பர்மியச் சொற்களுக்குச் சுற்றிக் கட்டப்படுவது என்று பொருள், 'லூஜீ'யே மருவி லுங்கி ஆனது.

Friday, February 26, 2016

புல்லரிக்குது போங்கப்பா

Kathir Vel

அரசியல் சாசனத்தில் ஆர்டிகிள் 19 என்ன சொல்லுது?
"மனசுல உள்ளதை ஓப்பனா சொல்ல ஒவ்வொரு இந்திய பிரஜைக்கும்
சுதந்திரம் உண்டு".
இந்தியா ஜனநாயக நாடு. இங்கே யாரும் யாருக்கும் எஜமானும் இல்லை, அடிமையும் இல்லை.
யாரும் என்ன வேணா பேசலாம்.
முட்டாள்தனமா பேசலாம்.
மடத்தனமா உளறலாம்.
அர்த்தமே இல்லாம பேத்தலாம்.
எவனுக்குமே புரியாத மாதிரி கதறலாம்.
மொத்தமும் தப்பாவே இருக்கலாம்.
ஆனா...
நல்லா கேளு. ஆனா, அப்படில்லாம் பேச அவனுக்கு அல்லது அவளுக்கு உரிமை இருக்கு. அதுல எவனாலும் கை வைக்க முடியாது, ஆமா.
நீ அவனை என்ன வேணா சொல்லிக்கோ.
நாய்னு சொல்றியா.
அப்படியே இருந்துட்டு போட்டும்.
ஆனா அதுக்கு இஷ்டப்படி குரைக்கிற உரிமை இருக்கு.
அத மறந்துடாத.
நீ அரசாங்கம்.

Thursday, February 25, 2016

வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியம்

“ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்” என்பான் கவியரசு கண்ணதாசன். புதிய ஆண்டு பிறப்பதை கொண்டாடச் சொல்லும் மனது , வயதொன்று கூடுவதை ஏனோ மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை.
“Age is an issue of mind over matter. If you don't mind, it doesn't matter” என்கிறான் மார்க் ட்வெய்ன்.
வயதாவதை தடுக்க முடியாது. ஆனால் வயதாகி விட்டது என்ற எண்ணத்தை நம்மால் தடுக்க முடியும். நம்மை நாமே சுறுசுறுப்பாக வைத்திருப்பதன் மூலம். அதைத்தான் நான் செய்துக் கொண்டிருக்கிறேன்.

Tuesday, February 23, 2016

குர்ஆன் ஓதுதலை ஒவ்வொரு ஸூராவாக கேட்கவும் மற்றும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்


In the Name of Allah, the Most Beneficent, the Most Merciful

மக்கா மஸ்ஜிதுல் ஹரம் இமாம் அப்துர் ரஹ்மான் சுதைஸ் குர்ஆன் ஓதுதலை ஒவ்வொரு ஸூராவாக கேட்கவும் மற்றும்  பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்
Download Complete audio recitation of the Holy Qur’an, in Arabic from Abdul Rahman Al-Sudais அப்துர் ரஹ்மான் அல் சுதைஸ்

குழம்பு - ஆணம் - சால்னா

தஞ்சாவூர் முஸ்லிம் வீடுகள் பலவற்றிலும் குழம்பு என்று சொல்லமாட்டார்கள். ஆணம் என்றுதான் சொல்வார்கள்.

பருப்பாணம் - சாம்பார்
புளியாணம் - ரசம்
மீனாணம் - மீன் குழம்பு
கறியாணம் - கறிக்குழம்பு

ஆணம் என்பது பழந்தமிழ்ச் சொல். தமிழ் முஸ்லிம் வீடுகளில் இப்படியான பல பழந்தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் இருப்பதைக் காணலாம்.

Sunday, February 21, 2016

நடிகர் ‪#‎விவேக்‬ - மனம் திறந்த உருக்கமான பேச்சு

இணையதள பத்திரிகைக்காக என்னை மனம்திறக்கச் சொல்கிறார்கள்.

அதுவும் சமீபத்தில் மறைந்த... என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி..!

இந்த அமிலச்சோதனையை நான் எவ்வாறு கையாள்வேன்..? அவனை நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறது.

கண்கள் தளும்புகிறது. எழுதும் பேனா அழுது தீர்ந்துவிடுகிறது. இதயம் சோர்ந்துவிடுகிறது.

அடுக்கடுக்காக அவன் நினைவுகள் கண்ணீர்மேகமாய் என்னைச் சூழ்ந்துகொள்கின்றன.

பிரசன்ன குமார் - என் பிரசன்னா. 13 வருடங்கள் ஆயிற்று; 14 -ம் வருட வாழ்வு போயிற்று. அக்டோபர் 23 -ல் பிறந்தவன்.

தலை எழுத்து

முன்னொரு காலத்தில்...
யவன தேசத்தை ஆண்டு வந்தான் ஒரு மாமன்னன். அவனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை.மன்னனும்,மகாராணியாரும் வேண்டாத தெய்வமில்லை, செய்யாத அநுஷ்டானங்கள் இல்லை, கடை பிடிக்காத விரதங்கள் இல்லை....எதுவும் பலன் தரவில்லை.

பக்கத்து ஊரில், சூபித் துறவி ஒருவர் இருப்பதையும் அவரை அணுகினால் மன்னனின் துயரம் நீங்க வழிபிறக்கலாம் என்றும் அறிவுரை தந்தான் முக்கிய மந்திரி.
மகாராணியாரின் தூண்டுதல் பேரில், சூபி துறவியை சந்திக்க பயணம் மேற்கொண்டான் மன்னன்.

உடலறிவாய் மனமே

சொல்லவந்தேன் நான்
எனதேற்றங்களின் இமயத்தையென்று
துள்ளிக்குதித்தது மனம்

நாவில்லாமல் சொல்லா
விழியில்லாமல் பார்வையா
நானில்லாமல் சொல்வதா
மிதக்காதே மனமே என்றது உடல்

என்ன முடியும் உன்னால்
என்னைப்போல்
எண்ண முடியுமா கறியே
என்று தீ திரட்டியது மனம்

Tuesday, February 16, 2016

விதி சொல்லும் விதி

விதி என்றால் என்ன? விதியை மதியால் வெல்ல இயலுமா? நினைத்ததை முடிப்பவர்கள் அறிவை நம்புகிறார்களா இல்லை - விதியை நம்புகிறார்களா! தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது மதியா அல்லது விதியா! விதியின் கதை கூட சற்று சுவாரஸ்யமானதுதான். விதியின் சொல்லை மதியென்று நம்பி வாழ்ந்து மாய்ந்தவர்களே சரித்திரத்தின் பக்கங்களில் நாயகர்களாக உலா வரு கிறார்கள்.

கேட்டது கிடைக்கும், விரும்பியது நடக்கும் என்கிறார்களே... இவையெல்லாம் கிடைக்கலாம், நடக்கலாம் - ஆனால் நிலைக்குமா?

கதை சொல்லும் காலம் என்பதால் ஒரு நிஜ கதையும் நினைவில் வந்து போகிறது.

Monday, February 15, 2016

மட்டன் பிரியாணி (கல்யாண பிரியாணி)

மட்டன் பிரியாணி (கல்யாண பிரியாணி)

தேவையான பொருட்கள்:

மட்டன் – 1.25 கிலோ
அரிசி – 1 கிலோ
எண்ணெய் – 100 கிராம்
டால்டா – 150 கிராம்
பட்டை – இரண்டு அங்குல துண்டு இரண்டு
கிராம்பு – ஐந்து
ஏலக்காய் – மூன்று
வெங்காயம் – 1/2 கிலோ
தக்காளி – 1/2 கிலோ
இஞ்சி – 3 டேபிள் ஸ்பூன் குவியலாக (அ) 150 கிராம்
பூண்டு – 2 டேபிள் ஸ்பூன் குவியலாக (அ) 100 கிராம்
கொத்தமல்லி தழை – ஒரு கட்டு
புதினா – 1/2 கட்டு
பச்சை மிளகாய் – 8
தயிர் – 225 கிராம்
சிவப்பு மிளகாய் தூள் – 3 1/2 டீஸ்பூன்
மஞ்சள் போடி – 1 பின்ச்
ரெட் கலர் பொடி – 1 பின்ச்
எலுமிச்சை பழம் – 1
நெய் – ஒரு டீஸ்பூன்

Saturday, February 13, 2016

" இது காதல் மாதம்" -புதுகை அப்துல்லா


எதனால்
என்னைக் காதலிக்கிறாய்
என்றாய்?
அதைச் சொல்லத் தெரிந்து
இருந்தால்
நிச்சயம் உன்னை
காதலித்திருக்க மாட்டேன்!
‪#‎இது_காதல்_மாதம்‬

ஒரு சராசரி தினத்தின்
மாலை நேரம்..
வழக்கமான சந்திப்பில்
வழக்கம் போல் இல்லை நீ!
காரணம் கேட்டவனிடம்
கொட்டித் தீர்க்கிறாய்..
அனைத்தையும் கேட்டுவிட்டு
ஆறுதலாய் காதலையே
மீண்டும் அளிக்கிறேன் நான்!!

‪#‎இது_காதல்_மாதம்‬

ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்று ....!


ஒவ்வொரு தெளிவுக்குப் பின்னும்
ஒரு தேடல் இருந்தது
ஒவ்வொரு பகைக்குப் பின்னும்
ஒரு வஞ்சினம் இருந்தது
ஒவ்வொரு நட்புக்குப் பின்னும்
ஒரு புரிதல் இருந்தது
ஒவ்வொரு திறமைக்குப் பின்னும்
ஒரு உந்துதல் இருந்தது
ஒவ்வொரு வலிக்குப் பின்னும்
ஒரு துரோகம் இருந்தது
ஒவ்வொரு மௌனத்திற்கு பின்னும்
ஒரு சிந்தனை இருந்தது

Thursday, February 11, 2016

தடுக்கவில்லை என்கிறார் தந்தை

நறுக்கென்று கதைக்க தெரியும். ஆனாலும் சுமாராகத்தான் சொல்லியிருக்கிறார்.
ஜெயலலிதா நேற்று சொன்ன கதைக்கு கருணாநிதி இன்று சொன்ன பதில் கதை:

எந்த தந்தையும் தன் மகன் கீழே விழுந்து அடிபடுவதை விரும்ப மாட்டார். பிள்ளை பெற்றவர்களுக்கு அது தெரியும்

ஜெயலலிதா தனது கதையை சற்று மாற்றி கூறியிருக்க வேண்டும். ஊரிலே உள்ள பிள்ளைகளுக்கெல்லாம் அரசியல் பாடம் கற்றுக் கொடுத்த தந்தை, தன் மகனுக்கு மட்டும் கற்றுக் கொடுக்காமலா இருந்து விடுவார்?

அரசியலில் கீழே இருந்து கடுமையாக உழைத்து, படிப்படியாக மேலே வந்தவர்களுக்கு இந்த உண்மை புரியும். அடித்த காற்றில் மேலே வந்து கோபுரத்தில் ஒட்டிக் கொண்டவர்களுக்கு கதையை திரித்து சொல்லத்தான் தெரியும்.

உண்மையில் கதை என்ன தெரியுமா?

சிறப்பு விருந்தினர் சிறப்பான வரவேற்பு

 Vavar F Habibullah
 
அபுதாபி பட்டத்து இளவரசரின் இந்திய வருகை குறித்து பிரதமர் வெளியிட்ட டுவிட்டர் செய்தி தான் இது.

ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தொகை இப்போது 25 லட்சத்தையும் தாண்டி விட்டது.ஹிந்துக்கள் 50 சதவீதமும், கிருத்தவர்களும் - முஸ்லிம்களும் முறையே 25 சதவீதமும் அங்கு பணி புரிகிறார்கள். அமெரிக்காவில் வாழும் ஹிந்துக்களை விட அதிக அளவில் ஹிந்துக்கள் இங்கு வாழ்கிறார்கள். ஹிந்துக்களுக்கான கோவில்கள் கட்டு வதற்கு அரசே இலவசமாக நிலம் வழங்குகிறது. அது போலவே, சீக்கிய குருத்வாராக்களும், கிருத்துவ சர்ச்சுகளும் இங்கு இப்போது அதிக அளவில் உள்ளன. மத துவேஷம் இல் லை, நிற, இன பாகுபாடுகள் இங்கு அறவே இல்லை. பெரிய பதவிகளில் ஹிந்துக்களே அதிக அளவில் உள்ளனர்.

Wednesday, February 10, 2016

முஸ்லீம்கள் - நதிமூலம்

 by ஜோதிஜி
இராமநாதபுர மாவட்டத்தை பேசும் போது நாம் மற்றொரு விசயத்தையும் இப்போது பேசியாக வேண்டும்.  அது தான் இந்த மாவட்டத்தில் வாழ்ந்த இஸலாமியர்கள்.

பல்லவர்கள் தொடங்கி கடைசியாக பாண்டியர்கள் வரைக்கும் கால்பந்து போல இந்த மாவட்டம் பலரின் கால் கை பட்டு உருண்டு வந்தாலும் கிபி 1331 ஆம் ஆண்டு மதுரையைத் தலைநகரகாக் கொண்டு முஸ்லீம்களின் ஆட்சி நிறுவப்பட்டது. இவர்களின் ஆட்சி கிபி 1371க்குப் பிறகு சரிந்த பிறகு தான் நாயக்க மன்னர்களின் ஆட்சி உருவானது. இதுவே 1393 ஆம் ஆண்டு முற்றிலும் துடைத்தது போல் ஆனது.

ஆனால் இஸ்லாமியர்கள் என்பவர்கள் எப்படி உருவானார்கள்?

இஸ்லாமியர்களை இன்று முஸ்லீம் என்று அழைக்கப்படும் பெயரானது இடையில் உருவான பெயராகும்.  சங்ககாலத்தில் தமிழ்நாட்டோடு வணிகத் தொடர்பில் இருந்த யவனர்களின் பெயரே பின்னாளில் சோனகர் என்று அதனூடே முஸ்லீம் என்றும் உருவானது. ஏற்கனவே நம் பதிவில் கும்மியார் சொல்லியுள்ள மரைக்காயர் என்பது மரக்கலத்தில் வாணிப தொடர்புக்காக உள்ளே வந்தவர்கள் என்பதில் தொடங்கி துருக்கியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த கலிபாக்கள் மூலம் துலுக்கர் என்ற பெயரும் உருவானது.

வாழ்வியல் வழிகாட்டி' அப்துற் றஹீம்

"என் உயிருள்ளவரை, ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காது எழுத்துத் துறையில் உழைத்து என் பிறவிக் கடனை நிறைவேற்றுவேன்" என்று வாழ்ந்த பேரரறிஞர் அப்துற்றஹீம்.

20 – ஆம் நூற்றாண்டின் இணையற்ற வாழ்வியல் இலக்கியங்களைப் படைத்த மாமேதையாகவும், இளைஞர்களின் வருங்கால வாழ்வுக்கு வழிகாட்டிய ஒளிவிளக்காகவும் திகழ்ந்த அப்துற்றஹீம் மு.றா. முகமது காசிம் என்பவருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர்.

கல்லூரிக் கல்வியை முடித்து வெளி வந்த அவர், வாழ்வை எப்படித் தொடங்குவது எனத் தெரியாமல் கிடைத்த நூல்களைக் கற்றார். 'படித்து முடித்து சம்பாதிக்காமல் இருக்கிறானே' என்று பலர் எள்ளி நகையாடினர். அவர்களுடைய ஏளனப் பேச்சு அப்துற் றஹீமுக்கு வருத்தத்தைத் தருவதற்கு மாறாக வேகத்தைத் தந்தது.

Monday, February 8, 2016

இதைவிட என்ன இருக்கிறது சாதிக்க?


திமுக தலைவர் கருணாநிதிக்கு விபத்து காரணமாக இடது கண்ணில் ஏதோ பாதிப்பு என்பது ஊடகர்களுக்கு நெடுங்காலமாக தெரியும். விபத்து பற்றி 63 ஆண்டுகளுக்கு பிறகு விவரம் தருகிறார் அவர்.
”1953-ம் ஆண்டு முகவை மாவட்டம் பரமக்குடியில் எனக்கு ஒரு பாராட்டு விழா. அதில் கலந்து கொண்டு விட்டு திருச்சி வரும் வழியில் திருப்பத்தூர் பயணிகள் விடுதி அருகில் விபத்து. மைல் கல்லில் கார் மோதியது. மைல் கல் உடைந்து, பயணிகள் விடுதியின் முன்புற வாயில் கதவில் போய் மோதி நின்றது கார்.
காருக்குள் இருந்த நாங்கள் உருண்டோம். நண்பர்களுக்கு காயம் இல்லை. என் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. மறுநாள் காலையில் முகமே வீங்கியது. இடது கண்ணில் கடுமையான வலி. கண் மருத்துவமனையில் சேர்ந்து, 12 அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அன்புடை நெஞ்சம்..!

எனக்கு டீ பிடிக்கும்;
உனக்கு காஃபிதான் பிடிக்கும்.

எனக்கு வெள்ளையும் பச்சையும் பிடிக்கும்;
உனக்கு ஊதாவும் சிவப்பும்.

எனக்கு இனிப்பு பிடிக்கும்;
உனக்கு உவர்ப்பும் புளிப்பும்.

நான் கால்களைப் போர்த்திக்கொண்டு உறங்குவேன்;
நீ கால்களை மட்டும் போர்த்த மாட்டாய்.

எனக்குப் பிடித்த ஆடைகளை உன்னுடன் இருக்கும்போது
நான் அணிவதில்லை;
ஏனெனில் அவை உனக்குப் பிடிக்காது.

எனக்குப் பிடிக்காத ஆடைகளை நீ அணிவதில்லை,
நான் ஊரிலிருக்கும் சமயங்களில்.

Sunday, February 7, 2016

ஆண்டவனும் முகநூல் கணக்கும்

அவன் படைப்புகளின்
எண்ணிக்கையை பட்டியிலிட
எந்த கூகுளும் இணையத்தில் இல்லை !

அந்த படைப்பாளியின் பயோடேட்டா
எந்த WIKIPEDIA-விலும் எழுதப்படவில்லை !

அவனது அண்ட ரகசியங்களை வெளியிட
எந்த WIKILEAKS-ஸாளும்
ஒருபோதும் முடியாது !

அவன் அண்டசராசரங்களை வரைய
எந்த WIKIMAPIA-வாலும் இயலாது !

ட்விட்டர் அக்கவுண்ட் இல்லாமலேயே
அதிகமான FOLLOWERS உள்ளது
அவன் ஒருவனுக்காகத்தான் இருக்கும் !

YAHOO-க்களில் மட்டுமின்றி
அனைத்து தேடல்களிலும்
அதிகமாக தேடப்படும் அன்பன்
அவனாகத்தான் இருக்க முடியும் !

Friday, February 5, 2016

சுக்கு காபியில் பால் சேர்க்கலாமா?

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; என்பார்கள். அந்தளவுக்கு போற்றப்பட்ட சுக்கின் மருத்துவ பலன்கள் பற்றி சில துளிகள் அறிவோம்..!

* இஞ்சி காய்ந்தால், சுக்கு. காரம், மணம் நிறைந்த சுக்கு, உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். அதே வேளையில் பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்கக்கூடியது.


* தலைவலிக்கு சுக்கை நீர் விட்டு அரைத்தோ, உரசியோ (இழைத்து) நெற்றியில் பூசினால், அடுத்த சில நிமிடங்களில் கைமேல் பலன் கிடைக்கும். தண்ணீருக்குப் பதிலாக பால் விட்டு அரைத்தும் பயன்படுத்தலாம். எந்த விதமான தலைவலி வந்தாலும் இந்த சுக்கை நெற்றியில் பற்று (பத்து) போட்டால் அடுத்த சில நிமிடங்களில் நிவாரணம் கிடைக்கும். வலி இருக்கும் இடங்களில் சுக்கை தேய்த்தால் இதமாக இருக்கும். வலி விலகியதும் எரிச்சலை ஏற்படுத்தும். அப்படியானால் தலைவலி சரியாயிற்று என்று அர்த்தம். உடனே ஒரு துணியால் நெற்றிப் பற்றை துடைத்தோ, கழுவியோ விடலாம்.

தாயின் முகம் பார்க்கப் பிடிக்கும்

தாயின் முகம் பார்க்கப் பிடிக்கும்

அவள் பொழியும் பாசம் பிடிக்கும்

மனைவியின் கண்களை நேராக பார்த்துப்பேச பிடிக்கும்

அவள் பேசுவதே கண்களால் என்றால் ரொம்ப பிடிக்கும்

இதழ் பிரியாத புன்னகை பிடிக்கும்

புன்னகையில் மறைந்திருக்கும் நிஜமான நேசம் பிடிக்கும்

அதிர்ந்து பேசாத வார்த்தைகள் பிடிக்கும்

வார்த்தைகளற்ற மெளனம் பிடிக்கும்

அதிகாலையில் அவள் புரிந்திடும் காதல் பிடிக்கும்

மழலையின் மொழி பிடிக்கும்

பல சமயங்களில் குழந்தையாய் மாறிட பிடிக்கும்.

Wednesday, February 3, 2016

மௌனம்

ஒரு சூழ்நிலையில், நாம் தவறாக இருக்கலாம்.
அல்லது, விதியின் சூழ்ச்சியால் நாம் தவறு செய்ததாகக் காணப்படலாம். அப்போதும் உண்மையாய் இருத்தல் என்னும் நமது ஒரே உரிமையைத்தான் நாம் மேற்கொள்ள வேண்டும்.
உண்மையைப் பேசச் சந்தர்ப்பம் கிடைக்கும்போது நாம் தவறவிடக் கூடாது. அதே சமயம், பேசாமல் இருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
உண்மை, பேசப்பட வேண்டும்தான். ஆனால், சில நேரங்களில்,
மௌனம், உண்மையை இன்னும் வலுவாக முழக்குகிறது!!

தேவையின் நாயகி….!

செல்லும் இடமெல்லாம்
காண்கிறேன்
ஆட்கொள்ள விளைகிறேன்
ஆர்வத்துடனே
கண்ணிலே காட்சிகள்
காட்டுகிறாய்
நிற்காமல் உருண்டு
ஓடுகிறாய்
கையில் கிடைத்துவிட்டால்
ஆட்டுவிக்கிறாய்