Saturday, March 31, 2012

கணவனும் மனைவியும் முழுமையாக பிடித்தவர்காக அமைந்துவிட முடியுமா!

 முழுமை எதில் உள்ளது ! முடிவின் இருதியே  முழுமையின்  துவக்கம்.  குறை  இல்லாத மனிதனைப் பார்க்க முடியுமா ! .குறையிலும்   நிறையினைக் காண்பவனே சிறந்தவன் . முழுமையாக கிடைக்கவில்லையயே என ஆதங்கப்படுவதைவிட கிடைத்ததைக் கொண்டு  நிறைவு அடைந்தவன் வாழ்வே மகிழ்வாக அமையக் கூடும் . தாகம்  தீர்க்க நீர் நாடி வேண்டுவோர்  கிடைத்த நீரைக் கொண்டு தாகத்தினை தீர வழி உண்டாகிக் கொள்வார்கள் . அதன் வேகம் படிப் படியாக குறைவதனை உணர்வார்கள் . எது தேவைக்கு  அதிகம் கிடைத்தாலும் அதன் மதிப்பு குறைவதனைக் காணலாம் . கடைத்தெருவில் பொருட்கள் அதிகம் வந்து சேர்ந்தாலும்  ஒரு பொருளின் விளைச்சல் அதிகமாகிவிட்டாலும் அதன் மதிப்பு குறைவாக போய்விடும் நிலை என்பது உண்மை . வாழ்வின் தத்துவமும் இதில் அடங்கும் . நாம் நினைத்தது  முழுமையாக கிடைக்காது  அப்படியே  அது கிடைத்து விட்டாலும்  அதன் சுவையை ,மகிழ்வை நாம் அனுபவிக்க முடியாது . குறையும் நிறையும் உள்ளடக்கியதே வாழ்வின் மகத்துவம் .திருமண வாழ்வும் அதைச் சார்ந்ததுதான் . நம்மால் முடிந்தவரை  வாழ்வை மகிழ்வாக்கிக் கொள்ள  விட்டுக் கொடுக்கும் மனதுடன்  நல்லதை பாராட்டி கெட்டதை  மறந்து  சிறப்போடு  வாழ  முயல வேண்டும் . கணவனும் மனைவியும் முழுமையாக பிடித்தவர்காக ஒருபோதும் சிறப்பாக வாழ்வை அமைந்துவிட முடியாது. கிடைத்த வாழ்வை சிறப்பாகிக் கொள்ள முயல்வதே சிறந்த வாழ்வு . வாழ்க்கை என்பது பொருள் கொடுத்து வாங்கும் பொருளல்ல.அது மனதைச் சார்ந்தது.வாழும் முறையைப் பொருத்தது.
 

இறை நம்பிக்கைக் கொண்டு அவனைத் தொழுது வாழ்வோர் வாழ்க்கை மனதில் கசடை நீக்கி தெளிந்த நீரோடையாக வாழ்வின் ஓட்டமும் சிறப்பாக முடியும்

கலையுலகில் கலைமகள்.....ஹிதாயா றிஸ்வி.

கிழக்கு மாகாணம்,அம்பாறை மாவட்டம்,கல்முனை தேர்தல் தொகுதியில் சாய்ந்தமருது கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த  'வைத்தியகலாநிதி' யூ.எல்.ஏ.மஜீத்,ஸைனப் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியான ஹிதாயா றிஸ்வி அவர்கள்;கலைமகள் ஹிதாயா,ஹிதாயா மஜீத்,நிஷா ஆகிய பெயர்களில் இலக்கியம் படைத்து வரும் எழுத்தாளரும்,கவிஞரும் ஆவார்.
 இவர் கல்முனை மகளிர் கல்லூரி,பம்பலபிட்டிய முஸ்லிம் மகளிர் கல்லூரி கல்-எளிய அரபிக்கலாபீடம் ஆகியவற்றின் பழைய மாணவியாவார்.இவர்  வெகுசனதொடர்புசாதன டிப்ளோமாவையும் பூர்த்திசெய்துள்ளார்.
தான் கற்கும் காலத்திலிருந்தே இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவரின் கன்னி கவிதை (புதுக்கவிதை) 1982-04-01 ம் திகதி 'மீண்டும்'எனும் தலைப்பில் தினகரனிலும்,அதேதினம்'சிந்தாமணி'பத்திரிகையில்'அன்னை'எனும் தலைப்பில் மரபுக்கவிதையும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.அன்றிலிருந்து  இன்றுவரை மூன்று தசாப்தகாலமாக மரபுக்கவிதை,புதுக்கவிதை,சிறுகதை,கட்டுரை,நெடுங்கதை,விமர்சனம்,மெல்லிசைபாடல்கள் என தவறாமல் எழுதிவரும் இவர் ஆயிரத்திற்கு மேற்பட்ட புதுக்கவிதைகளையும்,மரபுகவிதைகளும் எழுதிக்குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இவரின் படைப்புக்கள் இலங்கை தேசிய பத்திரிகைகளிலும்,இந்திய இலங்கை சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.இவரது கவிதைகள் தென்கிழக்குபல்கலைகழக தமிழ்துறை மாணவி நிந்தவூர் ஆசிரியை ரிஸ்லா அவர்களாலும்,கிழக்குபல்கலைகழக தமிழ்துறை மாணவ ஆசிரியர் முபாரக் அவர்களாலும் ஆய்வுசெய்து ஆய்வேடு சமர்பித்துள்ளனர்.பல்வேறு சமூகசேவை,இலக்கியமன்றங்களில் அங்கத்துவம் வகிப்பதோடு மலேசியாவிலுள்ள உலகத்தமிழ் கவிஞர் பேரவையிலும் முக்கிய இடத்தையும் வகிக்கின்றார்.இலங்கை வானொலியில் பல நிகழ்சிகளிலும் குரல் கொடுத்துள்ள இவர் ரூபவாஹினிக்கவியரங்கிலும் முதன்முதலில் பங்குகொண்ட முஸ்லிம்பெண் என்ற பெருமையைத் தட்டிக் கொண்டவர்,அத்துடன் இலங்கை வானொலி மாதர் மஜ்லிஸ் பிரதித் தயாரிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.சிந்தனை வட்டத்தின் 99 வது வெளியீடான 'தேன்மலர்கள்' இலங்கையில் முஸ்லிம் பெண் கவிஞர் ஒருவரால் எழுதி வெளியிடப்பட்ட முதல் மரபுக்கவிதைத் தொகுதி என்பதும் குறிபிடத்தக்கது.கலைமகள் ஹிதாயாவின்  மூன்றாவது கவிதை தொகுதி 'இரட்டை தாயின் ஒற்றைகுழந்தை'எனும் தலைப்பில் சிந்தனை வட்டத்தின் நூறாவது வெளியீடாக வெளிவந்தது.கவிதைத்தொகுதியின் தலைப்புக்கேற்ப இத்தொகுதியினை மஸீதா புன்னியாமீனுடன் எழுதியமை குறிப்பிடத்தக்கது.இவற்றுடன் சிந்தனைவட்டத்தின்  கவிதைத் தொகுதிகளான 'புதிய மொட்டுக்கள் ',
'அரும்புகளி'லும் ,காத்தான்குடி கலை இலக்கிய வட்ட வெளியீடான 'மணி மலர்கள்' மரபுக்கவிதை தொகுதியிலும் ,சாய்ந்தமருது நூல் வெளியீட்டுப் பணியகத்தின் வெளியீடான 'எழுவான் கதிர்களிலும்' இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன.இவரது இலக்கியப் பனியின் முக்கிய கட்டமாக 'தடாகம்'
இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டமையைக் குறிப்படலாம்.ஒரு பெண்ணாக இருந்த போதிலும்  கூட 12  இதழ்களை இவர் வெளிக் கொண்டு வந்தார்.
 இவ் இதழ்களில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா,ஸீ.எல்.பிரேமினி,பேராசிரியர் சு.வித்தியானந்தன்,ஏ.யூ.எம்.ஏ .கரீம்,கல்ஹின்னை ஹலீம்தீன்,புன்னியாமீன் ஆகியோரின் புகைப் படங்களை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்துள்ளார்.சில நூல்களின் வெளியீட்டு விழாக்களையும் நடத்தியுள்ளார்.இவர் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்தாலும்   கொழும்பு-வெள்ளவத்தை  ஹோட்டல்  சபயாரில் நாகபூஷணி கருப்பையா எழுதிய 'நெற்றிக்கண்'கவி நூலை வெளியீட்டு  சாதனை படைத்தார்.ஒரு முஸ்லிம் பெண் எழுத்தாளர் என்ற வகையில் இவரின் பணி பாராட்டத்தக்கது.

Source : http://kalaimahelhidayarisvi.blogspot.in/

ஹிதாயா றிஸ்வி. blogs

Friday, March 30, 2012

"திறந்த மூல" மென்பொருள் மேம்பாடு என்பதனை அறிய!


"திறந்த மூல" பெரும்பாலும் மென்பொருள் மேம்பாடு மற்றும் திறந்த மூல மென்பொருள் தொடர்புடைய மென்பொருள் எங்கே  வேலை செய்கிறது மற்றும் உள்ளடக்க விஷயங்களை உள்நாட்டில் வேலை எப்படி பார்க்க,படிக்க முடியும்.   அடிப்படை குறியீடு மூலம்  எடுத்து அதை மேம்படுத்த மற்றும் பயன்படுத்த , அல்லது ஒரு மென்பொருள் உருவாக்க  பெரும்பாலும் மீண்டும் மற்றொரு நிரலை இது சில பகுதிகளில் ஏற்ப மீண்டும் மாற்றங்களை செய்ய முடியும்.  "திறந்த மூல" "இலவச" பெரும்பாலும் ஒத்ததாக இருக்கும். சில நேரங்களில் திறந்த மூல மென்பொருள் முற்றிலும் இலவசமாக அல்ல விவரங்கள் உரிமம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றன - வேலை பயன்படுத்தப்படலாம் எப்படி விளக்கும் ஒரு சட்ட ஆவணம். அங்கே நீங்கள் மென்பொருள் மற்றும் மூல கொண்டு என்ன செய்ய முடியும் குறைக்க முடியும் என்று  வெவ்வேறு மென்பொருள் உரிமங்கள்,  அனைத்து உரிமங்கள் மென்பொருள் மட்டுமே சமாளிக்க. உரிமங்கள் மற்றும்  "திறந்த மூல" புத்தகங்கள், கட்டுரைகள், படங்கள், ஆடியோ, வீடியோ கிளிப்கள், வேறு எதையும் உள்ளிட்ட ஊடகங்கள், எந்த எண்ணுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதனைக்  காண இது ஒரு வழிகாட்டி
இஸ்லாம் மற்றும் பல  சமய நூல்கள்  அல்லது மற்ற படைப்புகள்  விநியோகிக்க இலவச பல  பொது டொமைன் உள்ளன. அவைகள் எந்த வெளியீட்டாளர் புத்தகங்கள் உரிமையை வாங்கியிருக்கிறது மற்றும் அரசு தன்னை உரிமைகள் மரபுரிமையாக. விநியோகம் மற்றும் விற்பனை,  ஏகபோக உரிமை நடத்தினர்  மற்றும் செலவுகள் ஒருவருக்கொருவர் வெவ்வேறு வெளியீட்டாளர்கள் போட்டியிட்டுள்ளனர் என்பதனை அறிவோம்.

புத்தகங்கள்  வெளியீடுகளுக்கான கட்டுப்படுத்தப்பட்ட உரிமங்கள் மற்றும் அதிக விலை சேர்க்க   முடியாத நிலை. முஸ்லீம் சமூகங்கள் ஒரு வலுவான இயக்கம் உள்ளது.  அதனால்  சமூகம் முழுவதும் மறுபதிப்பு  செய்து  தொடர முடியும். அது அறிவை பரவ, கற்றல் மற்றும் சமய அறிவு ஒரு பிரீமியம் விண்ணப்பிக்கும் மதத்தின் கற்றல் கட்டுப்படுத்துகிறது .

 "Open Source""திறந்த மூல" மென்பொருள் மேம்பாடு என்பதனை அறிய சிறந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

தயவு செய்து இங்கு  கிளிக் செய்யுங்கள் 

நீடூர் ஊராட்சிமன்றத் தலைவர் சபீர் அஹ்மது பேசுகிறார்


Tuesday, March 27, 2012

'பதிவுலகத் திருடர்கள்' என ஓலமிடும் பதிவுலவுர்களின் திருட்டு புதுமையானது!


 . 'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
 
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்-13
 
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்80. 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
 
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்-80.


திட்டுவதுபோல் திட்டி வாழ்துவதுபோல் வாழ்த்தி குழப்பம் உண்டாக்குவதில் வல்லவர்கள் சிலர் . உங்களுக்கு எங்கிருந்து வந்தது இந்த அறிவு! இறைவன் கொடுத்த அருளை வளர்த்துக் கொண்டீர்கள். பழைய இலக்கியங்களை எடுத்து கையாள்வது இலக்கிய திருட்டு ஆகாதா? ஒரு ஆசிரியர் தான் கொடுத்த, பயிற்றுவித்த அறிவித்த அறிவை மற்றவர் பயன்படுத்துவதைக் கண்டு பெருமிதம் கொள்வதுதான் சிறப்பு . பிறக்கும்போதே அறிவோடு பிறப்பது அறிது.
உங்களில் உயர்ந்தவர் யார் என கேட்கும் போது 'பெற்ற கல்வியை மற்றவருக்கு ஏற்றிவைத்தவர் உங்களில் உயர்ந்தவர்' என நபிகள் நாயகம் நவின்றார்கள். புகழுக்காகவும் ,பொருள் நாடியும் எழுதுவோர் இருந்தும் மக்கள் பயனடையவேண்டும் என்று எழுதி வைத்தவர்கள் நம் முன்னோர்கள் .அது மட்டுமல்ல அறிவை பகிர்ந்துக் கொள்ள முடியாமல் ஆன்றோர்களால் இருக்க முடியாது. படிக்கும் பொழுது காப்பி அடித்தவர் பின் அவர் தேர்வு எழுதும் பொழுது அவர் காப்பி அடித்தது  நினைவுக்கு  வந்து சிறப்பாக எழுதியவர்கள் ஏராளம் . காப்பி அடிப்பதற்கும் ஒரு திறமை வேண்டும் .பின் அதுவே  அவரை அறியாமலேயே அவர் சொந்தமாக எழுதும் ஆற்றலைக்  கொடுத்துவிடும்  . கணினியை கையாளும் கலை அறியாமல்  முதலில் அதில் சில காப்பி கட்டுரை வரும் . பின்பு தன் முயற்சி தானே வந்தடையும். அறிவு உங்களுடன் அடைந்துக் கிடக்கும்போது ஒரு பயனுமில்லை .அது வெளியே வந்துவிட்டால் பொதுவுடமையாகி விடுகின்றது . பழமொழிக்கு   ஆசிரியர் யார்? அதனை நீங்கள் ஏன் கையாள்கின்றீர்கள்! சொன்னவர் "யாரோ" என்று போட்டு எவ்வளவோ அருமையான மேற்கோள்களை நாம் போடுகின்றோம் . பாதுக்காப்பு உரிமை வாங்கிக் கொண்டு  பின்பு எழுதி வாருங்கள் .உங்கள் எழுத்தினை எவ்வளவு பேர் படிகின்றார்கள் என்று பாருங்கள் அல்லது புத்தமாக வெளியிடுங்கள்  அப்பொழுது அறிவீர்கள்! பாடப் புத்தகமாக வரும்போது கட்டாயமாக வாங்க வேண்டிய அவசியமாகின்றது. அரசு தேவை இல்லாததை இனாமாக அள்ளி அள்ளிக் கொடுக்க உங்கள் அறிவை கொடுத்து மகிழுங்கள் .அது இறைவனது சொத்து. அது உங்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்வையும் கொடுக்கும்.
 
'நான் பதிவுலகில் கால்பதித்த காலத்தில் எனது பதிவைப்
 பலரும் என் பெயரோடு வலைமுகவரியோடு வெளியிட்டார்கள்
சிலர் என் பெயரில்லாமல் வெளியிட்டார்கள்
சிலர் என் பதிவைத் தன்பதிவு என்று வெளியிட்டார்கள்..

என் பதிவுகளை யார் எடுத்தாண்டாலும் அதற்காக நான் வருந்தியதில்லை...  
மாறாக நம் கருத்து இவருக்கும் பிடித்திருக்கிறது என்றே எண்ணி  மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்.'
-முனைவர். இரா.குணசீலன், தமிழ் விரிவுரையாளர்.

 தயவு செய்து இதனை கிளிக் செய்து படியுங்கள்   எழுத்துகளுக்கோ கருத்துகளுக்கோ காப்புரிமை கொண்டாடாத..

தயவு செய்து இதனை கிளிக் செய்து படியுங்கள்   அறிவைப் பகிர்ந்து கொள்வதும் திருட்டாகி விடுமோ!


Please click here to read No Copy right in Islam  http://seasonsali.blogspot.in/

புத்தக வியாபாரியாக எழுத்தாளர்கள் மாறி வருகிறார்கள்: ரிஷான் ஷெரீப்




'ஓர் எழுத்தாளன், புத்தக வியாபாரியாக மாறும் பரிதாப நிலைமை இன்று இலங்கையில் இருக்கிறது. இதனால் எழுத்தையே வெறுத்து ஒதுங்கிச் சென்ற பல எழுத்தாளர்களை நான் பார்த்திருக்கிறேன். இந்நிலைமை எனக்கு வரக் கூடாதென நினைக்கிறேன்' என்கிறார் எழுத்தாளர் ரிஷான் ஷெரீப்.


கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர் என பல பரிமாணங்களில் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி வரும்  இவர், கேகாலை மாவட்டம் - மாவனெல்லையை பிறப்பிடமாகக் கொண்டவர். பதுரியா மத்திய கல்லூரியில் தமது இளமை கால கல்வியை தொடர்ந்த இவர், மொறட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் படித்துப் பட்டம் பெற்றுள்ளார்.


'வீழ்தலின் நிழல்' (2010), என்ற  கவிதை தொகுதியை இவர் வெளியிட்டுள்ளதுடன் இவரது படைப்புகள் இலங்கையின் வீரகேசரி, விடிவெள்ளி ஆகிய பத்திரிகைகளிலும் காலச்சுவடு, உயிர்மை, நவீன விருட்சம், காற்றுவெளி, திண்ணை,

வடக்குவாசல் போன்ற இந்திய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.

இதைத்தவிர இவர், யூத் விகடன் இணைய இதழில் 'உனக்கென மட்டும்' எனும் தலைப்பில் 50 வாரங்கள் ஒரு கவிதைத் தொடரையும்;, 'இருப்புக்கு மீள்தல்' எனும் தொடரையும் எழுதியுள்ளார். கீற்று வார இதழில் 'நேசத்துக்குரிய ஒரே காதலுக்கு' எனும் தலைப்பில் 30 வாரங்கள் ஒரு கவிதை தொடரை எழுதியுள்ளார்.


இவர் தமிழ்மிரரின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதியில் வாசகர்களுக்காக பகிர்ந்துகொண்டவை...

Sunday, March 25, 2012

நடுநிலை - இஸ்லாம் எளிமையான மற்றும் மிதமான மார்க்கம்

 . 'நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
- 39 -ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
"அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்குவேன்" என்று நான் கூறுகூதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'நீங்கள் தான் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்குவேன்" என்று கூறியதா என்று கேட்டார்கள். 'நான் அப்படிச் சொல்லத் தான் செய்தேன்" என்று நான் பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், 'உங்களால் அது முடியாது. எனவே, (சில சமயம்) நோன்பு வையுங்கள். (சில சமயம்) நோன்பை விடுங்கள். (இரவில்) நின்று வணங்குங்கள். தூங்கவும் செய்யுங்கள். மாதத்தில் மூன்று நாள்கள் நோன்பு வையுங்கள். ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அதைப் போன்று பத்து மடங்கு பிரதிபலன் அளிக்கப்படும். அதுவே காலம் முழுவதும் நோன்பு வைத்ததாகும்" என்று கூறினார்கள். நான், 'இதை விட அதிக நாள் நோற்பதற்கு எனக்கு சக்தியுண்டு இறைத்தூதர் அவர்களே!" என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'அப்படியென்றால் ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாள்கள் நோன்பைவிட்டு விடுங்கள்" என்று கூறினார்கள். நான், 'அதை விட அதிகத்திற்கு எனக்கு சக்தியுண்டு, இறைத்தூதர் அவர்களே!" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'அப்படியென்றால், ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பைவிட்டு விடுங்கள். அதுதான் (நபி) தாவூதுதின் நோன்பாகும்; அதுதான் நடுநிலையானதாகும்" என்று கூறினார்கள். நான், 'அதை விடச் சிறந்ததற்கு எனக்கு சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'அதை விடச் சிறந்ததேயில்லை" என்று கூறினார்கள்.
3418- .ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களில் யாரையும் அவரின் நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப்படுவார்)' என்று கூறினார்கள். மக்கள் 'அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களின் நற்செயல் காப்பாற்றாது?)' என்று வினவினார்கள். நபி(ஸல்) அவர்கள் '(ஆம்) என்னையும்தான்; அரவணைத்துக் கொண்டால் தவிர' என்று கூறிவிட்டு, '(எனவே, நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்.) காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரமும் நற்செயல் புரியுங்கள். (எதிலும்) நடுநிலை (தவறாதீர்கள்) நடுநிலை(யைக் கடைபிடியுங்கள்.) (இவ்வாறு செய்தால் இலட்சியத்தை) நீங்கள் அடைவீர்கள்' என்றார்கள்.
6463.-ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்) அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும். நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. (எண்ணிக்கையில்) மிகவும் குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

6464-.ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்
Source : http://www.tamililquran.com/

இஸ்லாத்தை நோக்கி இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர்?

  இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக செயல்பட்டு வருகிறார். கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார். தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார். இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார். 


Source : http://onlyoneummah.blogspot.in/\


I read the Holy Quran everyday: Tony Blair

 LONDON: In a startling revelation during an interview to The Observer magazine, the former British Prime Minister Tony Blair confessed to reading the Holy Quran, the holy scripture for the 1.5 billion global Muslim population, as reported by the Daily Mail.
Blair, who was famously reluctant to discuss his faith during his time in office, converted to Catholicism months after leaving 10 Downing Street in 2007, and set up the ‘Tony Blair Faith Foundation’, to promote respect and understanding between the major religions.


 Please click Read more I read the Holy Quran everyday: Tony Blair

Source ; http://tribune.com.pk/story/

Saturday, March 24, 2012

துபாய் சர்வதேச அமைதி மாநாடு DIPC 2012 Promo (ENG)

துபாயில் நடைபெற இருக்கும் சர்வதேச அமைதி மாநாடு
Dubai International Peace Convention is being organized by Mohammed Bin Rashid Al Maktoum Award for World Peace (Government of Dubai) in association with Al Manar Center in partnership with Islamic Affairs & Charitable Activities Department (IACAD). DIPC 2012 will be a 3 day event to be held on 12th 13th & 14th April 2012 at Dubai World Trade Centre, Dubai. For further details, kindly logon to http://www.peaceconvention.com/

ஆர்வமுள்ளவர்களே! களம் இறங்குங்கள்!!

by நீடூர் SA மன்சூர் அலி M.A., B.Ed.,   

எனது நீண்ட நாள் ஆசைகளுள் ஒன்று: நமதூர் இளைஞர்கள் அனைவரும் - " பொருளீட்டுதற்காக குடும்பத்தைப் பிரிந்து பயணம் சென்று விடுகின்ற" - இஸ்லாத்துக்கு ஒவ்வாத கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதில் முன்னோடிகளாக விளங்கிட வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் கனவு.        
நன்றாகப் படித்து நல்ல திறமைகளை வளர்த்துக் கொண்டு (skilled) குடும்பத்துடன் வெளி நாடு செல்பவர்களைப் பற்றி நான் இங்கே பேசிடவில்லை.
 
காலத்துக்கேற்ற திறமைகளை வளர்த்துக் கொள்ளாமல், ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என்று வெளி நாட்டுக்குக் கிளம்பி விடுகின்ற நமது இளைஞர்களைப் பற்றியே நமது கவலை எல்லாம்.
 
இது குறித்து நாம் நிறையப் பேசியிருக்கின்றோம். ஆனால் மாற்றம் கண்ட பாடில்லை.
 
எனவே இது குறித்து நமது இளைஞர்களுடன் எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
 
பல இளைஞர்களுடன் நாம் பேசும்போது அவர்கள் கேட்பதெல்லாம் - '"இங்கிருந்து கொண்டு என்ன செய்யச் சொல்கிறீர்கள்?"  என்பது தான்! இக்கேள்விக்கு நாம் பதில் கண்டு பிடித்தே ஆக வேண்டும்.
 
இன்னொன்று: "வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்!" - இதற்கும் நாம் வழி கண்டு பிடித்தாக வேண்டும்.
 
எனவே நீடூர் சகோதரர்களை நாம் கேட்டுக் கொள்வதெல்லாம் - புதிய தலைமுறைக்கு உங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள் என்பது தான்.      
 
இந்த கருத்துப் பரிமாற்றத்துக்கு ஒரு தொடக்கமாக -
 
இதோ ஒரு பிஸினஸ் ஐடியா!  
 
காலையில் எழுந்தவுடன் பெரும்பாலான தாய்மார்களுக்கு இருக்கின்ற பெரிய "வேலை" பள்ளிக்கூடம் செல்கின்ற குழந்தைகளுக்கு மதிய உணவு தயாரித்து "பாக்ஸில்" கட்டித் தருவது தான்.
 

Friday, March 23, 2012

உணர்வுகள் முடக்கப் பட்ட கடமை வீரர்கள்!

அனைத்து பாதுகாப்பு வேலையும் மோசமானதாக இருக்கும். ஆனால் சில பாதுகாத்து வேலைகள் உடல் நலத்தை பாதிக்கக் கூடியதாக இருந்து வருகின்றன.அதிலும் இரவு நேர வேலைகள் மிகவும் அபாயகரமான வேலைகளாக உள்ளன.
மிகவும்  பிரபலமான பக்கிங்காம் அரண்மனையின் சில காவலர் கடமை வீரர்கள் உலகின் மோசமான வேலைகளாக  கூறப்படுகிறது. அவர்கள்  எரிச்சலூட்டும்படியாக பல மணி நேரம் நின்று காவல் காப்பதுடன் காட்சிப் பொருளாக மாறிய பொம்மையாக மாறி காட்சி அளிக்க  வேண்டும். அந்த  காவலர்கள், சிரிக்க முடியாது உணர்ச்சிகளை காண்பிக்க முடியாது, மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு  பதிலளிக்க முடியாது என்ற  பல விதிகள். தினமும் அவர்கள் சீருடை துவைத்து சலவை செய்ய வேண்டும்.  சிப்பாய் போன்ற கூடுதல் கடமை .கடமைகளில் தவறு நேர்ந்தால் கடுமையாக தண்டிக்கப் படுவார்கள். 
நாகரீகம் வளர்ந்த நாட்டில்  விந்தை மனிதர்களாக, காட்சிப் பொருளாக மாறிய மனிதன். மற்றவருக்கு  மகிழ்வை தந்து தன்னை வருத்திக் கொள்ளும் மனிதன்.

Thursday, March 22, 2012

வழி காட்டும் வரைப்படம் ...அற்புதமான இணையதளம்!

ஏர் / வாணிகம் / ரயில் மூலம் உலகின் எந்த இலக்கையும்  வரைபடத்தின்   மூலம் காண வழி.
 
உலகில் எங்கு போக வேண்டும்! வழி தெரியாமல் தவிக்க தேவையில்லை. எல்லா இடங்களுக்கும் எங்கிருந்து எதுவரை போக்குவரத்து அனைத்து முறைகள் மூலம். தரை  வழி, கடல் வழி மற்றும் விமான வழி கண்டுபிடிக்க  ஆரம்பிக்கும் இடம்  சேரும் இடம் குறிப்பிடுங்கள்
இந்த இணையதளம் நீங்கள் விரும்பிய இடத்திற்கு கொண்டு சேர்க்க. தொடக்க மற்றும் இலக்கு புள்ளிகள் தேர்ந்தெடுக்க அதன் வழி காட்டும் அற்புதத்தினை கண்டு பயனடைவீர்கள்
இந்த இணையதளத்தில் ஆச்சரியமாக இருக்கிறது. தொடக்க மற்றும் இலக்கு புள்ளிகள் தேர்ந்தெடுக்க, அது, நீ வழி காட்டும்
கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து, மேலும் தொடர்ந்து பாருங்கள்
http://www.rome2rio.com/

Tuesday, March 20, 2012

ஓர் தீவு - மரபணு குப்பையில்(?) ஒர் தீர்வு

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
**********
பிரஞ்சு வார்த்தைகளின் உச்சரிப்புகள் கவனமுடன் கையாளப்பட்டுள்ளன. தவறிருந்தால் சுட்டி காட்டவும்.
**********
ல ரெயுனிஒன் (La Réunion) - இந்திய பெருங்கடலில், மடகாஸ்கருக்கும் மொரீஷியஸ்சுக்கும் இடையே அமைந்துள்ள இந்த தீவு பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியாகும். சுமார் எட்டு லட்சம் மக்கள் வாழும் இந்த தீவு அறிவியல் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது

இந்நாட்டின் மக்களை ஒரு வினோதமான மூளை சம்பந்தப்பட்ட நோய் தாக்கிக்கொண்டிருந்தது. இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தீவிர பசியின்மையால் பாதிக்கப்படுவார்கள். சாப்பிட மறுத்தும், கட்டுப்படுத்த முடியாத அளவு வாந்தியும் எடுப்பார்கள். மூளையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் white matter காலப்போக்கில் அழிய ஆரம்பிக்கும். சுவாசிப்பதையும், இதயத்துடிப்பையும் கட்டுப்படுத்தும் மூளைத்தண்டுகள் தளர ஆரம்பிக்கும். 
நிச்சயம், இது எண்ணிப்பார்க்கவே கொடுமையான ஒரு நோயே. ரெயுனிஒன் தீவின் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்நோய்க்கு பறிகொடுத்துவிட்டனர். 
இந்த நோயை Ravine encephalopathy என்றழைகின்றனர். இந்த நோய் மிக அரிதானது. 10000-15000 பேரில் ஒருவருக்கு தான் இந்நோய் வரலாம் என்று ஆய்வாளர்கள் கணக்கிடுகின்றனர். அதே நேரம், ஒருமுறை வந்துவிட்டால், அடுத்த தலைமுறையினருக்கு கடந்துக்செல்லக்கூடியது. ஆக, இது ஒரு பரம்பரை நோயே. இந்த தீவு மக்கள் அதிகளவில் இந்த நோயால் பாதிக்கப்பட காரணமிருந்தது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்பதால், காலங்காலமாக சொந்தங்களுக்குள்ளாகவே திருமணம் செய்து வந்தனர் இத்தீவின் மக்கள். ஆகையால், இந்த நோய் அடுத்தடுத்த தலைமுறையினரையும் தாக்க ஆரம்பித்துவிட்டது. 
சரி, இந்த நோய்க்கான காரணங்கள் என்ன? எப்படி ஏற்படுகின்றது இந்த நோய்?
 
தொடர்ந்து படிக்க...http://www.ethirkkural.com/2012/03/blog-post.html

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Monday, March 19, 2012

ஸூரத்துர் ரஹ்மான்(அளவற்ற அருளாளன்) Surat Ar-Raĥmān (The Beneficent) - سورة الرحمن


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

55:1The Most Merciful

அளவற்ற அருளாளன்,

55:2. Taught the Qur'an,

இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.

55:3. Created man,

அவனே மனிதனைப் படைத்தான்.

தயவு செய்து கிளிக் செய்து மேலும் படியுங்கள்  


Please click here to read more 
  Captivating recitation of Surah Ar-Rahman (55th Chapter of the Holy Quran) by Sheikh Mishary bin Rashid Alafasy. This recitation was recorded in 1424 H.
Amazing and technically accurate recitation by Sheikh Mishary Rashid bin Alafasy. This video is an invitation to all humanity to the truth. It highlights the unlimited favors of the God Almighty upon mankind. This is the same One God of the Old Testament and the New Testament. Please watch and listen without prejudice and please reflect upon the message.

கலை,ஓவியம்,கவிதை வீடியோ.Art Project

வாழ்நாள் சிறிது ! வளர்கலை பெரிது!! 'தமிழில் கலை என்பதற்கு கற்றற்கு உரியவை எல்லாம் கலை  என்ற பொது வரையறையாற் தரப்படுகிறது'.கிடைத்த வாழ்வை பயனுள்ளதாய் செலவிடவேண்டும் . நம்மால் சாதனை செய்யமுடியவில்லை  என்ற எண்ணம்  மனதில் தோன்றும்பொழுது மற்றவர்கள் செய்த சாதனைகளைப் பார்க்கும் நம் மனதில்  நம்மை அறியாமலேயே ஒரு ஆர்வம் நம்மை தூண்டிவிடும். உலகத்தினை முடிந்தவரை உங்களால் முடிந்தால் பார்க்க முயலுங்கள் .அது வேடிகைக்காவும் கேளிக்கைக்காகவும் இருந்துவிடாமல் நம் அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும் இருப்பது மிகவும் அவசியம் சீன தேசம் சென்றாயினும் சீர் கல்வியைத் தேடு என்பது நபிமொழி.
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. அதனால் நம்  எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும்
அவசியம்.மகிழ்வான வாழ்வு ஆரோகியத்தின் அடித்தளம். அப்படி நாம் பெற்ற அறிவினை மகிழ்வினை அடுத்தவரிடம் பகிர்ந்துக் கொள்ளும்பொழுது நமக்குள் ஓர் மகிழ்வு வருவதனை நாம் அறிவோம்.


Saturday, March 17, 2012

போகாதே! போய் விடாதே! ஏன் இந்த அவசரம்?

 யார் செய்த தவறு! காலமெல்லாம் உன் மீது நான் கொண்ட அன்பை மறந்து  என்னை விடுத்து மறைய உனக்கு இந்நிலையை உருவாக்கியது யார்?

 உன்னை வழியில் விளையாடவைத்து என் விழியில் வெப்பத்தினை தந்து எரிமலையாய்  நெருப்பினை கொட்டவைத்து  விட்டாயே!  இனி என்  விழிக்கு ஏது குளிர்ச்சி! அன்பே நீ அணையாதே! அவசரத்தில் நாம் இந்த உலகத்தில்  வந்ததால் வேகமாய்  நாம் நம் வாழ்வை விளையாடி விட்டோமோ!
 நில்! போகாதே! முடியாது யாராலும் நிறுத்த முடியாது . போவதற்குள்ள வழியை நாமே உருவாக்கி நாமே அதில் பயணம் செய்து விட்டோம்.

எதற்கும் பொறுமை தேவை ! இறப்பதற்கு வழி உண்டாக்கி வேதனை அடைவதால் இழந்ததை திரும்ப பெற முடியுமோ!
தனக்கு
த் தெரியாமல் தானே வரவைத்த தற்கொலையோ! 
விபத்தின் வழி மரணம் வேகமாக நம்மை வந்தடைய நாம் ஏன் அந்த நிலையை உருவாக்கிக்  கொள்கின்றோம்! அதனால் விளையும் வேதனையை தாங்கிக் கொள்ள முடியாமல் நாம் ஏன் தவிக்கின்றோம்!
 

Friday, March 16, 2012

புகாரி என்பது இஸ்லாமியப் பெயரே அல்ல! புகாரி என்றால் என்ன?

புகாரி என்பது இஸ்லாமியப் பெயரே அல்ல

புகாரி என்று எழுதுவதைவிட புஹாரி என்று எழுதுவதுதான் அரபி மொழியின் உச்சரிப்பைச் சரியாகக் கொண்டதாகச் சொல்ல முடியும். நான் இலக்கணம் படித்தவனல்ல புஹாரி சார். ஆனால் வீம்புக்காக புகாரிதான் சரியென வாதிடுபவர்களை தமிழ் வெறியன் என்றுதான் நான் சொல்வேன். அவர்கள் தமிழை வளர்ப்பது போல பாவ்லா செய்யலாம். புஹாரி என்று கா வுக்கு பதிலாக ஹா போட்டு எழுதுவதால் தமிழ் அழிந்து விடும் என நினைப்பது பூனைக் கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டுவிடும் என்று நினைப்பது போல. இந்த தமிழ் அறிஞர்களின் பிரச்சனைக்குள்ளே நான் புக விருப்பமில்லை. என் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தேன் அவ்வளவுதான். கிரந்தம் என்கிறதெல்லாம் தெரியாமலேயே தமிழை என் உயிராக நேசிக்கிறேன்.. ஆனால் ஜ, ஷ, ஸ, ஹ எல்லாம் உயபோகிக்கும், அவற்றையும் தமிழாகச் சேர்த்துக் கொள்ளும் பொதுநோக்கு மனம் படைத்தவன், வெறியில்லாத தமிழன் அவ்வளவுதான். முதலில் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தமிழ் படிக்கிறார்களா, கான்வெண்டில் பாபா பிளாக் ஷீப் பாடுகிறார்களா என்று பார்க்கட்டும் புஹாரி சார்.



முதலில் புஹாரி என்பது அரபு மொழியின் சரியான உச்சரிப்பு ஆகாது. Bukhari بخاری என்பதுதான் இமாம் புகாரியின் பெயர். இது புஹாரி என்பதைவிட புகாரி என்பதற்குத்தான் அதிக நெருக்கமானது.

காண்க: http://en.wikipedia.org/wiki/Muhammad_al-Bukhari

இதைவிட சுவாரியமான ஒரு தகவல் என்னவென்றால். என் பெயர் இஸ்லாமியப் பெயரே அல்ல. புகாரா என்ற ஊரிலிருந்து வந்தவர் என்ற பொருளைக்கொண்டதுதான் புகாரி.

இந்தியாவிலிருந்து வந்தவர் இந்தியர், பாகிஸ்தானிலிருந்து வந்தவர் பாகிஸ்தானி, குஜராத்திலிருந்து வந்தவர் குஜராத்தி என்பதுபோல புகாரா என்ற உஸ்பெகிஸ்தானின் ஓர் ஊரிலிருந்து வந்தவர் என்பதன் பொருள்தான் புகாரி. இமாம் புகாரியின் பெயர் முகம்மது. அவரின் குடும்பப்பெயர்தான் புகாரி. இரண்டையும் சேர்த்து முகம்மது புகாரி என்பது அவர் பெயர் ஆனது.

என் தந்தையை அசன்பாவா ராவுத்தர் என்று அழைப்பார்கள். ராவுத்தர் என்பது குடும்பப்பெயர். இஸ்லாமியப் பெயர் அல்ல. இப்போது யாரும் அந்த ராவுத்தர் என்ற குடும்பப்பெயரைப் பயன்படுத்துவதில்லை. அது அவர் காலத்திலேயே வழக்கொழிந்துவிட்டது. ஒருவகையில் அது முஸ்லிம்களுக்கிடையில் சாதியை உருவாக்குவதுபோல் இருக்கிறது என்பதால் அதன் பயன்பாடு குறைந்துவிட்டது. அப்படிக்குறைவதையே நானும் விரும்புகிறேன்.

சென்னையிலும் இலங்கையிலும் இன்னும் சில நாடுகளிலும் Bukhari என்பதை Buhari என்று எழுதும் வழக்கம் உள்ளது. இது அவர்கள் துவக்கத்தில் செய்த தவறு என்றாலும் பழக்கத்தில் வந்துவிட்ட ஒன்று. எப்படியோ வைத்து அழைக்கப்படுவதுதான் பெயர். அந்த வகையில் என் பெயர் Buhari தான். வேறு எப்படி அழைத்தாலும் என் செவிகள் ஏற்பதில்லை. என் நண்பர்கள் அனைவரும் என் பெயரை Buhari என்று உச்சரிக்க மிகவும் விரும்புவார்கள். அதனுள் ஓர் இசை ஊஞ்சலாடிக்கொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கலாம். சொல்லச் சொல்ல இனிக்குதடா புகாரி என்று சொன்ன நண்பரும் உண்டு.

ஆகவே, Buhari என்பதை புஹாரி என்று எழுதினால்தான் சரி என்று நினைத்து புஹாரி என்றே எழுதிவந்தேன். அப்போது என் கவிதைகள் வெளியான பத்திரிகைகளிலும் ஏ. புஹாரி என்றுதான் எழுதப்பட்டிருக்கும். பின் தமிழை மேலும் கற்றபின், தமிழில் எழுதப்படாத எழுத்துக்களின் அறிமுகங்கள் எனக்குக் கிடைத்தன. அதன்பின் என் பெயரை நான் புகாரி என்று எழுதத் தொடங்கிவிட்டேன்.

முகம் அகம் என்ற சொற்களை எடுத்துக்கொள்ளுங்கள். இதன் க என்ற எழுத்து எந்த உச்சரிப்பைக் கொடுக்கிறது. முஹம் அஹம் என்றுதானே?

காகம் என்ற சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். முதல் எழுத்து கா வாகவும் இரண்டாம் எழுத்து ஹ வாகவும் ஒலிப்பதைக் காணமுடிகிறதல்லவா?

கா முதல் எழுத்தாய் வரும்போது கா என்றும் அதுவே இடை எழுத்தாய் வரும்போது ஹா என்றும் ஒலிக்கப்படும். இதுதான் தமிழில் எழுதப்படாத எழுத்துக்கள். இப்படி எழுதப்படாத எழுத்துக்கள் தமிழில் ஏராளமாய் இருக்கின்றன.

காகம் என்பதை காக்கா என்று எழுதினால் இதில் ஹா என்ற உச்சரிப்பு வரவே வராது. ஏனெனில் ஒரு ஒற்றுக்குப்பின் வரும் க ஒலிப்பில் மாறிவராது என்பதுதான் காரணம். ஒற்றுக்கு அத்தனை அழுத்தம் உண்டு.

ஹரி என்ற பெயரை கரி என்று எழுதமுடியுமா? முடியாது ஏனெனில் அதில் க முதல் எழுத்தாய் வருகிறது. அப்படி வரும்போது அதை ஹரி என்று உச்சரிக்க இயலாது கரி என்றுதான் உச்சரிக்க முடியும். எனவே சில தமிழ்ப்பிரியர்கள் அரி என்று எழுதுவார்கள். என் தந்தையின் பெயரான ஹசன்பாவா அப்படித்தான் அசன்பாவா ஆனது.

இப்படியே புகாரி என்று எழுதி உச்சரித்துப்பாருங்கள் அது புஹாரி என்று சரியாக ஒலிக்கப்படும். புகாரி என்பது புஹாரி என்று சரியாக ஒலிக்கப்பட்டால் நான் தமிழ் எழுத்தைத் தானே பயன்படுத்த வேண்டும்? ஏன் கிரந்தத்தைப் பயன்படுத்த வேண்டும்? அது எப்படிப் பார்த்தாலும் கடன்வாங்கிய எழுத்துதானே?
Source : http://anbudanbuhari.blogspot.in

புகாரி என்றால் என்ன?


என் பெயர் புகாரி. என் தந்தை எனக்கு அன்போடு வைத்த பெயர். புகாரி என்று ஏன் பெயர் வைத்தார் என்று எனக்குத் தெரியாது. சொல்லும்போது அதன் உச்சரிப்பு அவரை ஈர்த்திருக்கலாம். அதன் பொருளில் மயங்கி வைத்திருக்கலாம். அல்லது எங்கோ ஒரு நண்பர் வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் சிறுவனின் பெயர் புகாரி என்று கேட்டு, அன்றே தன் பிள்ளைக்கும் அதே பெயரைச் சூட்டவேண்டும் என்று ஆசைப் பட்டிருக்கலாம். ஆனால் எது உண்மை என்று நான் கேட்டுத் தெரிந்துகொள்ள என் தகப்பனார் உயிரோடு இல்லை. என் ஒன்பதாவது வயதிலேயே நான் போகிறேன் என்று ஒருவார்த்தை என்னிடம் கூறாமலேயே போய்விட்டார். அவருக்கு ரொம்பப் பிடித்தது அதனால் புகாரி என்று பெயர் வைத்தார் என்று என் அம்மா ஒற்றை வரியில் தன் விளக்கத்தை முடித்துக்கொண்டார்.

நான் என் பெயருக்கான பொருள் தேடி அலைந்தேன். ரஷ்யாவில் புகாரா என்ற இடத்திலிருந்து முகமது என்ற ஓர் இமாம் அரபு நாடு வந்து நபிகளின் வரலாறு அறிந்து 'ஹதீஸ்' என்னும் குறிப்புகள் தொகுத்தார். நபிகள் வாழ்வில் நடந்ததாகவும் நபிகள் கூறியதாகவும் இவர் தொகுத்த அந்தக் குறிப்புகள், ஆதாரப்பூர்வமானவை என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அவரை இமாம் முகமது புகாரி என்று அழைப்பார்கள். அதாவது புகாரி என்பது புகாராவிலிருந்து வந்தவர் என்று பொருள் கொண்டது. அது அவருக்குக் குடும்பப் பெயர் ஆனது.

நான் புகாரி குடும்பத்தைச் சேர்ந்தவனா என்றால் சத்தியமாய் இல்லை.

ஆக, நான் புகாராவிலிருந்து வந்தவனும் அல்ல; புகாரி குடும்பத்தைச் சேர்ந்தவனும் அல்ல. ஒரு குடும்பப் பெயர் எனக்கு முதல் பெயராய் அமைந்திருக்கிறது. எனவே பொருளை நாமே உருவாக்க வேண்டியதுதான் என்று முடிவுசெய்தேன்.

தமிழகராதியில் புகார் என்ற சொல்லுக்கு அற்புதமான பொருள்கள் இருப்பதைக் கண்டேன்.

ஆற்றுமுகம்
காவிரிப்பூம்பட்டினம்
பனிப்படலம்
மந்தாரம்
மழைபெய்யும் மேகம்
கபிலமரம்
கபிலநிறம்
முறையீடு

இவற்றுக்கு எனக்கு மேலும் விளக்கம் தேவைப்பட்டது. என் பெயருக்கான பொருளாக மிகச் சரியாக எதைக்கொள்ளலாம் என்ற என் அலசலில், சொல்லறிஞர் ஒருவரின் உதவி தேவைப்பட்டது. சொல்லறிஞர் என்றதுமே எனக்கு திரு. இராம.கி அவர்களின் நினைவே வரும். என் கேள்வியை அவரிடமே விட்டேன். வழக்கம்போல் அவர் பதிலும் அற்புதமாய் வந்து இறங்கியது. அவருக்கு என் நன்றி. இதோ அவரின் விளக்கம்:

(இந்த விளக்கத்தின் இறுதியில் என் கவிதை ஒன்று என் பெயர் குறித்து இருக்கிறது)

அன்பிற்குரிய புகாரி,

ஆறு என்பது ஓடி வரும் போது அதன் கரைகளில் ஊர்களுக்கு அருகில் இருப்பது ஆற்றுத் துறை.

துறுதல் = நெருங்குதல், அணுகி வருதல்; நாம் வாழும் இடத்திற்கு அருகில் வருகிறது.

அதே ஆறு கடலை அடையும் போது அது கடலுக்குள் நுழைகிறது; அதாவது புகுகிறது; புகல்கிறது; புகருகிறது. புகரும் இடம் புகார். அப்படிப் பார்த்தால் எல்லா ஆறும் புகும் இடம் புகார்தான். (அதனால் தான் புகல் என்ற சொல் port என்ற ஆங்கிலச் சொல்லிற்கு முற்றிலும் இணையானது.) இருப்பினும் சிறப்பாகக் காவிரி புகும் இடத்திற்குப் புகார் என்று சொன்னார்கள். ஆறு கடலில் புகும் போது ஆற்றுப் பக்கம் ஒரு முகமும் கடலின் பக்கம் ஒரு முகமும், கடலிலிற்கும் ஆற்றிற்கும் அருகில் சற்று உள்வாங்கினால் போல் ஏற்படும் கழியில் (backwaters) இன்னொரு வகை முகமும் ஏற்படும்.

ஆற்றில் ஏற்படும் முகம் (இங்கே முகம் என்பது ஆங்கிலத்தில் சொல்லும் face என்னும் பொருள் தான்) ஆற்றுமுகம்; கடலைப் பார்த்தாற்போல் ஏற்படும் முகம் (ஆங்கிலத்தில் sea face என்பார்கள்.) கடல்முகம்; இதைக் கடற்புறம் என்றும் சொல்வது உண்டு. கழியைப் பார்த்தாற்போல் ஏற்படும் முகம் கழிமுகம்.

மேலே உள்ள மூன்றுமே புகாரில் உண்டு; (இந்தக் காலப் புகாரிலும் உண்டு; சற்று சீரழிவுடன். ஆனால் எர்ணாகுளம், கொச்சி போனால் இந்த மூன்றையும் பெரியாற்றின் முகப்பில் காணலாம்.)

காவிரி புகும் பட்டினம் காவிரிப் பூம்பட்டினம் ஆனது; அதற்கும் பூவுக்கும் முடிச்சுப் போடுவது கவிநயம் கருதியே ஒழிய உண்மை அல்ல.

இது போன்ற சொல்லாட்சிகள் இங்கிலாந்து, இரோப்பா போன்ற இடங்களில் ஆற்றின் மேல் உள்ள ஊர், கடலின் மேல் உள்ள ஊர் என்ற பெயர்களால் உண்டு. இங்கு சவுதியில் கூட Yanbu Al bahar (Yanbu on the sea) என்ற ஆட்சி உண்டு.

It is a city through which Kaveri enters the sea. இதுதான் காவிரிப் புகும் பட்டினத்தின் பொருள். நம் வேறாகப் புரிந்து கொண்டு குழம்பிக் கொள்கிறோம்.

இனி அடுத்த மூன்று பொருட்பாடுகள் மேகம், மழை, நீர் பற்றிய தொடர்பு கொண்டவை. இதை அறிய ப.அருளியின் "யா" என்ற பொத்தகத்தைப் படிக்கவேண்டும்.

புய் என்பது துளைக் கருத்து மூலவேர்
புய்+அல்>புயல் = துளைவளியாக ஒழுகுதலையுடைய முகில்

மிகப் பலவாகிய பொத்தல்கள் உடைய ஒரு நீர் நிரம்பிய கலத்தினின்று நீர் வெளிப்பட்டு ஒழுகுதலைப் போலவே மழைநீர்ச் சொரிதலைக் கண்டு அப்படிப் பெயர் ஏற்பட்டது. நாளடைவில் புயல் என்பது முகில், மழை, காற்றோடு அடிக்கும் மழை என்று பொருள் நீட்டம் பெற்றது.

இதே போல நிலத்தின் மேல் நிரம்பிக் கிடக்கும் நெடுநீர்ப் பரப்பில் இருந்து முகந்து கொண்டதால் முகில்

முகு>முகுவு>முகவு>முகவை = நீர் முகக்கும் கருவி முகு+இல்>முகில் = நீரை முகக்கும் மேகம். பின் அது மழையையும் குறித்தது.

முகில் கரிய தோற்றம் கொண்டதால் மை, மழை, மங்குல், மப்பு, மந்து, மஞ்சு, மாரி, மால், மாசு, மேகம், கார், ஆயம் எனப் பல சொற்களைப் பெற்றது.

மய்>மை = கரிய முகில்
மய்>மய்+ஐ>மயை>மழை = கரிய முகில்
மய்>மய்ம்>மம்>மம்பு>மப்பு = கரிய முகில்
மம்+கு>மங்கு>மங்குல் = கரிய முகில்
மய்>மய்ம்>மய்ம்+து>மய்ந்து>மந்து = கரிய முகில்
மய்>மய்ம்>மய்ம்+து>மய்ந்து>மய்ஞ்சு>மஞ்சு = கரிய முகில்
மய்>மாய்>மாய்கு>மாய்கம்>மேகம் = கரிய முகில்

நான் சொல்லிக் கொண்டே போகலாம். விரிவு அஞ்சி நிறுத்திக் கொள்கிறேன்.

மப்பும் மந்தாரமும் என்று சொல்வது இரட்டைக் கிளவி. மந்து+ஆரம் = மந்தாரம் = மேகக் கூட்டம்; மேகம் நிறைந்து நிற்பது; அடைந்து நிற்பது ஆறு கடலை அடைவதைப் போல; அதன் வழியாக நீர் கொட்டுகிறதல்லவா?

மேகப் படலம் பனிப் படலம் போல;

இனி அடுத்த பொருட்பாடு கபில நிறம்.

புகர்தல் என்பது துளையிடுதல் என்று சொன்னேன் அல்லவா? அதனால் புகர்வது புள்ளியிடுவது ஆகும். புகர் என்றால் புள்ளி என்றும் பெயர். புகரப் புகர கருத்தது இன்னும் கருக்கும்; சிவந்தது இன்னும் சிவக்கும்.

எனவே புகர் என்பதற்கு இருண்டது என்ற பொருளும் வந்தது. dark என்ற பொருளில். புகார் என நீண்டு brown நிறத்தைக் குறிக்கும். ஆங்கிலத்திலும் brown என்ற சொல்லின் பிறப்பு இந்தக் கருத்தில் தான். brown என்பது தமிழில் இரண்டு விதமாக உணரப் படும். ஒன்று கருமை கலந்த பொன்மை; இன்னொன்று கருமை கலந்த செம்மை..

கபில நிறம் என்பது இது தான்; brown நிறம். கிருஷ்ணன் என்றால் கருப்பன் என்பது போல் கபிலன் என்றால் புகர் நிறத்தான். புலவர் கபிலர் என்றால் என்னமோ, ஏதோ என்று எண்ணிக் கொள்கிறோம். அது அவருடைய நிறக் குறிப்பு. அந்தக் காலப் பெயர்கள் பல இப்படி நிறம் சார்ந்து இருக்கின்றன. கருப்பன், செவத்தான், பொன்னன், வெள்ளையன், நீலன், பச்சையப்பன் போல இது ஒன்று கபிலன்.

இந்தப் புகரிலேயே கொஞ்சம் செம்மை கூடிவிட்டால் அது குரால் எனப் படும் (reddish brown).

தமிழில் இருக்கின்ற நிறப் பெயர்கள் இன்னும் பலருக்குத் தெரிவதில்லை.

பெருங்கூச்சல், முறையீடு இரண்டும் வேற்று மொழிச் சொல்லால் கொண்ட பொருட்பாடுகள். இந்த மூலம் பாரசீகமோ, என்னவோ எனக்குத் தெரியாது.

அன்புடன்,
இராம.கி.


ஆக, நான்
கபில நிறத்தவனோ

கூட்டம் கூடி
கருணைக் கும்மியடித்து
மண்ணுக்குத் தேன் பொழியும்
மேக மனத்தவனோ

எண்ணக் குஞ்சுகள்
சின்னச் சிறகினை
விண்ணில் விரிக்க
மெல்லக் கிழிக்கும்
பனிப்படலமோ

ஓடித் திரிந்த
காவிரிப் பெண்ணின்
காதல் புகலிடமோ

ஆற்றலைத் தாகமும்
கடலலை மோகமும்
ஆரத்தழுவ
ஆசையாய் விரிந்துகிடக்கும்
இன்ப மடியோ

கற்பனை நீர் முத்துக்கள்
கணக்கற்று இறைய இறைய
கவிதை இழைகள்
காற்றினில் நிறைய நிறைய
கருத்துகள் எடுத்து வீச
புறப்பட்ட புயலோ

நானறியேன் நானறியேன்
ஆனால்...

புகாரி என்றெவரும்
அன்போடு அழைக்கும்போது
பூரித்துப் போகிறேன்
இந்த
அன்புடன் புகாரி

அதுவொன்றே
போதும் எனக்கு!

Source :http://anbudanbuhari.blogspot.in

Wednesday, March 14, 2012

படைச்சதுதான் படைத்தான் ஆசிரியரை ஆண்டவன் ஏன் படைத்தான் .


இறைவன் படைப்புகளில் மனித படைப்புதான் உயர்வானது .மனிதனுக்குள் எத்தனையோ ஆற்றல்கள் ஒளிந்துக் கொண்டிருந்தாலும்  அதனை வெளிக் கொணர ஒரு ஊக்கமும்,முயற்சியும் தேவைப்பட்டாலும் அதனைத்  தூண்ட ஒரு ஆசிரியர் தேவை .அந்த ஆசிரியர் உதவி கிடைக்காமல் சிறப்படையமுடியாது .விளக்கு ஒளி கொடுக்க எண்ணை தேவை. ஆசிரியர் இல்லாமல் முதலில் படிக்கப் பழகுவது  இருளில் தூசியை அகற்ற விளக்குமாறு கொண்டு கூட்டுவதுபோல் ஆகிவிடும், நமக்கு முதல் ஆசிரியராக அமைவது நம் தாய்தான் அவள் நற்சொல் பேசுவதிலும்,உற்சாகம் கொடுப்பதிலும்,அரவணைத்து போவதும் மற்றும்  தன் நன்னடத்தையாலும் தன்  குழந்தைக்கு சிறந்த ஆசிரியராக இருக்க முடியும் அதற்கு உரு துணையாக இருப்பது தந்தையும் மற்றும் நல்ல  சூழலில் வளர்வதுமாக  இருக்கும்.
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்;
-2:29. குர்ஆன்

குழந்தை இவ்வுலகில் வர இறைவனது அருள் வேண்டும். அந்த எல்லாம் வல்ல,கருணை மிக்க எங்கும் நிறைத்த  இறையோனைப் பற்றி தெரித்துக் கொள்ள சிறந்த ஆசிரியர் தேவை. அந்த ஆசிரியர் இறைபக்தி உடையவராக இருப்பது நல்லது .
முதலில்  இறைவனது பெயரைச் சொல்லியும் அவனது அருள் நாடியும்  அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...குழந்தைக்கு    பெயர் சூட்டுவதோடு தாய் தனது பாலை தன்  குழதைக்கு    ஊட்டிவிடுகின்றாள்.  அது தொடர்கின்றது அதுவே அந்த குழந்தை இறைவனின் பெயரைச் சொல்ல ஆரம்பிக்கின்றது . 

 கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள். -3:7.-குர்ஆன்

அந்த குழந்தை வளர வளர ஒரு ஆசிரியர் அதற்கு அவசியம் தேவைப்படுகிறது. இந்த உலகில் இறைவனைப் பற்றியும் அவனது படைப்புகளின் ஆற்றல் அறிய வருகின்றான் .கல்வயின் மீது நாட்டம் கொள்கின்றான்

“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக! 20:114.-குர்ஆன்
என்ற திருமறையின்  வார்த்தையை மனனம் செய்து அதன் நம்பிக்கையோடு படிக்கும் போது அவனது கல்வி அறிவு வளர்சியடைகின்றது   
 எது நல்லது எது கெட்டது என்பதனை தெரிந்து நல்லது  நாடி கெட்டதை விட்டு விலகி வாழ  முயல்கின்றான். அந்த ஆசிரியரும் ,தாயும்,தந்தையும் மற்றும்  உடன் இருப்போரும் நல்லவர்களாக இருந்து  விடும்போது அவனது வாழ்வும் சிறப்படைகின்றது . அதுவே மாற்றமாக இருக்க நேரிட்டால் அனைத்தும் கெட்டு அவனது வாழ்வு மோசமாகிவிடும் . அதனால் நாம் ஆசிரியரை தெரிவு செய்வதில்  கவனம் தேவை.
'
நம் வாழ்வு உயர்வாக அமைய சிறந்த ஆசிரியர் அவசியம் தேவை.  
தான் பெற்ற அறிவை மற்றவருக்கு ஏற்றி வைத்தவர் உங்களில் உயர்ந்தோர் - நபி மொழி
மனிதனுக்கு அறிவை தந்த இறைவன் தனி மனிதனுக்குள் அடைத்து வைக்காமல் மற்றவருக்கும் பகிர்ந்தளிப்பதையே விரும்புவான். அது தேடிக் கிடைக்கும் போது சிறப்பாக அமையும் .
எப்படி கற்பது
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
  - திருக்குறள்

கற்றுக் கொடுப்பவர் எப்படி இருக்க வேண்டும்

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.- திருக்குறள்

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.- திருக்குறள்

தாயின் மகிழ்வு 
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.( குறள் எண் : 69 )
விளக்கம்
மு.வ : தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
வார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள்.

புன்னகையே வாழ்க்கை

"புன்னகையே வாழ்க்கை" வலைப்பூ அதிபர் சகோ.முஹம்மத் ஃபைக் நேற்று எழுதிய வெளிநாட்டு வாழ்க்கை என்ற பதிவில்... எழுதப்பட்டு உள்ளவைக்கு வரிக்கு வரி பதில் எழுத விழைந்து அதனால் விளைந்ததுதான் இந்த பதிவு..! இதை 'எதிர்ப்பதிவு' என்பதோ 'பக்கத்துவீட்டுப்பதிவு' என்பதோ உங்கள் விருப்பம்..! ஆனால், அதில் சொல்லப்பட்ட மற்றும் இதில் சொல்லப்படும் விஷயங்கள்தான் முக்கியம்..!




அந்தப்பதிவில் எழுதப்பட்டு இருந்தது போலத்தான் நானும் முன்பு கூறிக்கொண்டு இருந்தேன். பலரும் அதேபோல சொல்வதை இங்கே சவூதியில் கேட்டுமிருக்கிறேன். இதற்கெல்லாம் என்ன காரணமாக இருக்கலாம்..? சரி... இனி அந்த பதிவுக்கு வரிக்கு வரி...

//வேலை செய்யப் பிடிக்கவில்லை 
உடன் வேலை செய்பவர்களையும் பிடிக்கவில்லை//
வெளிநாடுகளில் இருந்து இங்கே வந்து அதிக கல்வித்தகுதி மற்றும் அதிக திறமை மற்றும் அதிக சிரத்தையுடன் வேலை செய்யும் நம்மைப்போன்ற வெளிநாட்டவர்(அஜ்னபி)களுக்கு... அதே வேலையை செய்யும் உள்நாட்டு குடிமகன்களை காட்டிலும் இரு மடங்கு அல்லது மும்மடங்கு சம்பளம் கம்மி என்பதால் இருக்கலாம்.

Tuesday, March 13, 2012

கூகுள் சேமித்து வைத்திருக்கும் உங்களது தகவல்களை நீக்குவதற்கு


கூகுள் நிறுவனம் கடந்த 1ம் திகதி முதல் புதிய Privacy Policy ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் கூகுள் சாதனங்கள் அனைத்திலும் பகிர்ந்து கொள்ளப்படும்.

அதாவது உங்களுக்கு ஒரு ஜிமெயில் கணக்கு இருந்தால், அதில் நீங்கள் புதியதொரு கணக்கினை உருவாக்கும் போது தரப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் ஜிப்ளஸ், ஆர்குட், குரோம் பிரவுசர், யு-ட்யூப் என கூகுள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தப்படும்.

கூகுள் நாம் மேற்கொள்ளும் இணையத்தளங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் குறித்து வைத்துப் பயன்படுத்தும். உங்கள் தேடல்கள் மற்றும் பார்க்கும் தளங்கள் ஆகிய அனைத்தும் அதன் தகவல் தளத்தில் பதிவாகும். தேவைப்படும் நேரத்தில் இவை பயன்படுத்தப்படும்.
கூகுள் இது போல நம் இணைய வேலைகளைப் பின்பற்றாமல் இருக்க வேண்டும் எனில், அதற்கான எதிர் வேலைகளையும் நாம் மேற்கொள்ளலாம். இதனை ஒரு பட்டன் அழுத்தி மேற்கொள்ளலாம் என்பது இன்னும் ஆர்வமூட்டும் ஒரு தகவலாகும். இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.

உங்கள் கூகுள் கணக்கில், பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து நுழைந்த பின்னர், https://www.google.com/history என உங்கள் உலாவியின் முகவரி விண்டோவில் டைப் செய்திடவும் அல்லது கூகுள் சாதனங்களான கூகுள் ப்ளஸ் அல்லது கூகுள் தேடல் தளத்தில் மேலாக வலது மூலையில் உள்ள கீழ்விரி மெனுவில் Account Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில், Services என்ற இடத்திற்குச் செல்லவும். அடுத்து Go to web history என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.

இதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் நீங்கள் அண்மையில் சென்ற தளங்களின் முகவரிகள் மேற்கொண்ட தேடல்கள் அனைத்தும் அங்கு பட்டியலாக இருப்பதனைக் காணலாம்.

இங்கு உள்ள Remove all Web History என்ற கிரே கலர் பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து ஓகே பட்டன்களைக் கிளிக் செய்து வெளியேறவும். இதனைத் தொடர்ந்து, உங்களின் இணைய தேடல் பக்கங்கள், தகவல் தேடல் கேள்விகள் அனைத்தும் கூகுளின் கரங்களுக்குள் சிக்காது.

தகவல் தந்து உதவிய சகோதரர்  ansar mohamed அவர்களுக்கு மிக்க நன்றி..,
Source : http://vadakaraithariq.blogspot.in/

வெட்கம் கெட்டால் வேதனை வந்து சேரும் !

  நான் ஒடுக்கப்பட்ட பெண்ணாக நீங்கள் என்னை நினைப்பதனை நான் அறிகின்றேன் அதற்கு முக்கியமாக காரமாக நீங்கள் சொல்வது நான் உடுத்தும் ஆடை . ஹிஜாப் அணிந்து செல்வது எந்த தவறுமில்லை மற்றும் இது நன்மையான பயனையே தரும் 
ஆடை பாதி ஆள் பாதி என்பார்கள் , அதன் உண்மையான பொருள் சுத்தமான ஆடையணிந்து அசிங்கான ஆடை அணியாமல் இனக்கவர்ச்சியை
தூண்டாமல் இருப்பதேயாகும் . பெண்களுக்கே உள்ள தனித்த குணம் வெட்கம். .வெட்கம் கெட்டால் வேதனை வந்து சேரும் . என்னுள்ளே இருக்கும் சிறப்பு நாணமும்,அடக்கமும்,தான். மனதளவில் உள்ள உயர்ந்த எண்ணங்கள் தான்  பெண்மைக்கு  பெருமை தருகின்றது . நான் ஒரு முஸ்லிம் நான் விருபிய ஆடையை விரும்பி அணிந்தாலும் அதற்கு ஒரு வரைமுறை உண்டு .அதனை மிகவம் பெருமையாகவே கருதுகின்றேன் .என் ஆடல் அழகை  என் கணவர் கண்டு களிப்பதில் எந்த தவறுமில்லை. நான் கவர்ச்சி தரும் ஆடைகளை அணிந்து மற்றவர்களின் மனதினை கெடுத்து அதனால் விளையக்கூடிய தவறான செயல்களுக்கும் பாவமான் காரியங்களுக்கும் நான் ஒரு காரணமாக இருந்து விடக்கூடாது. இவ்விதம் நான் உடுத்தும்  உடையால் என் உரிமை சிறிதும் பாதிக்கப்படவில்ல. மற்ற பெங்களிப் பெண்களை போலவே கல்வி கற்க பாடசாலைக்கு,  கல்லூரிக்கு செல்வதற்கும்  மற்றும் அலுவலகங்கள் செல்வதற்கும் இஸ்லாம் எந்த தடையுமில்லை

Sunday, March 11, 2012

பெயர் வைத்த காரணம்! பெயர் சொன்னதால் அடி வாங்கியது!

  நாம் எத்தனையோ சரிதைகளும் ,சுயசரிதைகளும் படித்திருக்கின்றோம் .பண்டித ஜவகர்லால் நெஹ்ரு தன் மகள் இந்திராகாந்திக்கு  எழுதிய கடிதம்  (Glimpses of World History) உலக வரலாறு(உலக சரித்திரக் கடிதங்கள்) .மகாத்மா காந்தியின் சுயசரிதை,பேரறிஞர் அண்ணா எழுதிய உள்ளம் வருந்திய நிகழ்ச்சிகள், கலைஞர் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி மற்றும் கணக்கிலடங்காதவைகள் இருக்கின்றன . நமக்குள் எத்தனை  உயர்ந்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அதில் நடந்தவைகளை மற்றவர்களிடம் சொல்லும்போது நமக்கு மன நிறைவு உண்டாகும் மற்றும் அதனை மற்றவர்கள் படித்தும் பயனும் அடையலாம். ஒவ்வொருக்குள்ளும் ஓர் சரித்திரம் புதைந்து கிடக்கின்றது. நாம் பெற்ற நல்ல அனுபவத்தினை மற்றவர்களும்  அறிந்து அவர்களும்  பயன் அடைந்தால் உங்களுக்கும் நன்மை செய்த பாக்கியம் கிடைக்கும் .
 (நீங்கள் எனக்கு எழுதி அனுப்பினால் அதனை பிரசுரிக்க மிகவும் விரும்புகின்றேன், அது யார் மனதினையும் நோகச் செய்யாமலும் உண்மை நிகழ்வாகவும் இருக்க வேண்டும் . அதை எழுதியதின் பொறுப்பு உங்களைச் சார்ந்தது.)


பெயர் வைத்த காரணம்!    
1941ஆண்டு ஏப்ரல் 12 மதராசில் முஸ்லிம் லீக் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்கு காயிதே அக்லம் முகம்மது அலி ஜின்னா கலந்து கொண்டார்கள். எனது தகப்பனார் நீடுர் .ஹாஜி .சி .ஈ அப்துல் காதர் சாகிப் அவர்கள் மாயவரத்திலிருந்து மதராசுக்கு தனி ரயில் வண்டி ரிசர்வ் செய்து மாயவர சுற்று வட்டார இஸ்லாமிய மக்களை அழைத்துச் சென்றார்கள்.மதராஸ் முஸ்லிம் லீக் மாநாடு நடந்த அன்று எனது அன்புத் தங்கை பிறந்ததால் அந்தப் பெயர் எனது அன்புத் தந்தையால் பாத்திமா ஜின்னா எனப் பெயர் வைத்தார்கள்.காயிதே அக்லம் முகம்மது அலி ஜின்னாஅவர்களின் தந்கையின் பெயர் பாதிமாஜின்னா. அவர்களும் அந்த மாநாட்டில் கலந்துக் கொண்டார்கள்.
காயிதே ஆஸம் முகமதலி ஜின்னா அவர்களின் மீது கொண்டிருந்த மட்டற்ற மதிப்பும் மரியாதையை நிலைப்படுத்த 1938ல் நான் பிறந்ததும் எனக்கு முஹமதலி ஜின்னா என்று பெயர் சூட்டினார்கள். எங்கள் ஊரிலேயே முதன் முதலாக "முஹமதலி ஜின்னா" என்று பெயர் சூட்டப்பட்டது எனக்குத்தான்.
அன்புடன் பாத்திமா ஜின்னாவின் சகோதரர் முகம்மது அலி ஜின்னா,நீடுர் .
-----------------------------------
பெயர் சொன்னதால் அடி வாங்கியது!

 நான் நான்காவது படித்துக் கொண்டிருக்குபோது  எங்கள் பள்ளிக்கு இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். அவர் வகுப்பறைக்கு வந்து ஒவ்வொரு மாணவனின் பெயரையும் கேட்டார் . என் பெயர் கேட்கும் போது "முகம்மது அலி ஜின்னா" என்று பதில் சொன்னவுடன்  அந்த இன்ஸ்பெக்டர் என்  கன்னத்தில் அறைந்து  விட்டார். நான் நிலை குலைந்து போனேன்.அவர் அடித்த காரணம் யாருக்கும் புரியவில்லை.உடனே அச்செய்தி எனது தகப்பனாருக்கும் மற்றவருக்கும் தெரிந்து ஊர் மக்கள் கூடிவிட்டார்கள். தான் செய்த தவறை உணர்ந்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டார். அந்த காலம் சுதந்திரம் அடையாத காலம் நான் வேண்டுமென்றே எனது பெயரை தவறாக சொல்வதாக அவர் நினைத்து விட்டார் .  எனது தந்தை மிகவும் செல்வாக்கு உள்ள, சேவை செய்யக் கூடிய  நம் நாட்டுப் பற்றுடையவர் .
அப்போதைய முஸ்லிம் லீக் தலைவர்களுடம் மிகவும் பழக்கமுடையவர். காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் ,சுலைமான் சேட் போன்ற பெரியவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்துள்ளதனை நான் சிறு பிள்ளையாக இருக்கும்போதே பார்த்துள்ளேன்.எங்கள் வீடு மேல் மாடியில் நம் நாட்டு  சுதந்திரக் கோடி(முஸ்லிம்  லீக் கொடியல்ல)  சிமெண்டால் பதிவு செய்யப் பட்டிருக்கும். அது இன்றும் உள்ளது.  எங்கள் தெருவின் பெயரும் ஜின்னாதெரு. அது எனது தந்தை வைத்த பெயர் . எனக்கு முகம்மது அலி ஜின்னா என்றும் எனது தங்கைக்கு பாத்திமா ஜின்னா  என்றும்  பெயர் வைத்து மகிழ்ந்தாகள் . ஆனால் நான் மட்டும் 6-வது படிக்க சேரும் பொழுது இன்ஸ்பெக்டரிடம்  அடி வாங்கிய நினைவு  வந்து பயந்து ஜின்னாவை எடுத்து விட்டு முகம்மது அலி என்று மட்டும் வைத்துக் கொண்டேன் . இது நானாக அந்த வயதில் அறியாமல் எடுத்த முடிவு . அதிலிருந்து கல்லூரி வரை அப்பெயர் தொடர்ந்தது. எங்கள் ஊரில் ஜின்னா என்றால்தான் அறிவார்கள் .கல்லூரியில்  மற்றும் என்னை அறிந்த உடன் படித்த   மாணவர்கள் முகம்மது அலி என்றால்தான் அறிவார்கள். நான் லயோலா கல்லூரி படிக்கும்போது என்னுடன் படித்தவர் தி, மு .க .பாராளு மன்ற உறுப்பினர் முகம்மது ஜின்னா . இவர் வைத்திருக்கிறார் நான் ஏன் ஜின்னா என்ற பெயரை விடுத்தேன் என மனதிற்குள் எண்ணி வருந்துவேன்,
இறைவன் நாடினால் தொடர்ந்து மறையாத நிகழ்வுகளை எழுதுகின்றேன்.

Friday, March 9, 2012

சகோதரி ஸாதிகா அவர்கள் கடந்து வந்த பாதை

 எல்லாப்புகழும் இறைவனுக்கே


சகோதரி ஸாதிகா அவர்கள் கடந்து வந்த பாதை


தங்கை ஹுசைனம்மா அழைத்த தொடர் பதிவை ஏற்று இந்த பகிர்வு.
அறுசுவை தளத்தில் எழுதி வந்த எனக்கு பிளாக் பற்றி சமீபத்தில்தான் தெரிய வந்தது.தங்கை ஜலீலாதான் தனது பிளாக்கை பார்க்குமாறு லின்க் அனுப்பித்தந்தார்.பிற பிளாக்குகளை எப்படிப்பார்ப்பது என்றும் சொல்லித்தந்தார்.பிளாக்குகளைப்பார்வை இட்ட ஒரே நாளில் எனக்கும் பிளாக் தொடங்கும் ஆர்வம் ஏற்பட்டு விட்டது.பிளாக் உலகம் பற்றி 'அ' என்று கற்றுக்கொண்டு 'ஆ'என்று அடுத்து கற்றுக்கொள்ளும் முன்னரே அவசர,அவசரமாக பிளாக்கைத்தொடங்கி விட்டேன்.

தங்கை ஜலீலா கொடுத்த ஊக்கமும்,உதவியும்தான் என்னை தொடர்ந்து எழுத ஊக்குவித்தது.

பிளாக் உலகில் நுழைந்து பிறரது பிளாக்குகளை பார்த்தபொழுதுதான் எற்கனவே வேறு தளங்களில் பங்கேற்ற ஸ்நேகிதிகள் வலம் வந்ததை கண்ணுற்றேன்.

ஜலீலா,ஹுசைனம்மா,மலிக்கா,சுஸ்ரீ,விஜி,இலா,மேனகா,கீதா ஆச்சல்,ஹாஷினி,ஹைஷ் ,அம்மு,போன்றோர் பதிவுகளைப்பார்த்ததும் எனக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.

இருந்தாலும் பிளாக் பற்றிய சந்தேகங்கள் நிறையவே உள்ளது.இன்னும் தெளிவு கிட்டவில்லை என்பதே உண்மை.கற்றது கை மண்ணளவு தான்.இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றது.கற்றுக்கொள்ளும் ஆவலும் நிறையவே உள்ளது.பிளாக் பற்றி யாராவது கிளாஸ் எடுத்தால் அவசியம் தகவல் தாருங்கள். :-)

எனக்கு எழுத்து தாகம் இப்போது,நேற்று வந்ததல்ல.நான் பத்து வயது சிறுமியாக இருந்த பொழுதில் இருந்தே கதைகள் எழுதி,எழுதிய கதைகளை நானே திரும்ப,திரும்ப வாசித்து,மலை போல் குவிந்து போன பேப்பர் கற்றைகளை பெரிய பித்தளை டிரம்மில் போட்டு மொட்டை மாடியில் வைத்து கொளுத்திய அனுபவமும் உண்டு.அப்போதய என் கதைகளின் ஒரே வாசகி என் தங்கை.இப்பொழுதும் கூட "அநியாயத்திற்கு அத்தனை கதைகளையும் கொளுத்தி விட்டாயே "என்று இன்று வரை ஆதங்கப்படுவார்.

எனது எழுத்தார்வத்திற்கு நீரூற்றி,உரமிட்டு வளர்த்தவர் மரியாதைக்குறிய மறைந்த ஜமா அத்துல் உலமா பத்திரிகையின் ஆசிரியர் அல்லாமா.அபுல் ஹஸன் ஷாதலி சாஹிப் அவர்கள்.மாதாமாதம் அவரது பத்திரிக்கையில் எனது கட்டுரை வெளிவரச்செய்தார்.ஒரு மாதம் அனுப்பத்தவறினாலும் கடிதம் எழுதி கேட்டு விடுவார்.

இப்படியாக என் எழுத்துப்பயணம் ஆரம்பமாகி நர்கிஸ்,மலர்மதி,முஸ்லிம் முரசு,மங்கையர் மலர்,மங்கை போன்ற பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தேன்.இந்நேரத்தில் மலர் மதி ஆசிரியை என் அன்பு அக்கா அலிமா ஜவஹர் என்னை ஊக்குவித்து என் சிறுகதைகள்,தொடர்கதை போன்றவற்றை வெளியிட்டு எனக்கென ஒரு தனி இடத்தை அமைத்துத்தந்தார்.இதே போல் மங்கையர்மலர் ஆசிரியை மஞ்சுளா ரமேஷ் அவர்களும் என் படைப்புகளை வெளியிட்டு கடிதம் மூலம் என்னை ஊக்கப்படுத்தினார்.இந்நேரத்தில் என் கணவரும் என் எழுத்துக்கு நிறைய ஊக்கமும்,உதவியும் செய்தார்.

இந்த எழுத்தே என்னை ஈ.டி.ஏ குழுமத்தலைவர் அல்ஹாஜ்.பி.எஸ் அப்துர் ரஹ்மான் அவர்களின் குடும்பத்தினருக்கும்,எனக்குமான நட்பை ஏற்படுத்தியது.டாக்டர்.ரஹ்மதுன்னிஷா அப்துர்ரஹ்மான் அவர்களை ஒரு பத்திரிக்கைக்காக பேட்டி எடுத்து மூன்று பாகங்களாக வெளியிடச்செய்தேன்.

கீழை நகருக்கே மகுடம் சூட்டியது போல் அமைந்த கீழக்கரையில் பிரமாண்டமாக நடந்த மாபெரும்உலகத்தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் பெண்கள் மாநாட்டில் என்னை வரவேற்புரை நிகழ்த்த அழைத்தது வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய நிகழ்வு.அம் மாநாட்டிலும்,அம் மாநாட்டைத்தொடர்ந்தும் திருவை அப்துர் ரஹ்மான்,ஆளூர் ஜலால்,நர்கீஸ் அனீஸ்பாத்திமா ,ஹிமானாசெய்யத்,பானு முகைதீன்,ச்வுந்தரா கைலாசம்,கமருன்னிஷா அப்துல்லா,அஜீஜ்ஸுன் நிஷா,நஃபீஷாகாலீம்,கம்பம் அலி,கவிக்கோ அப்துர்ரஹான் ,கவிகாமு ஷரீப்,கே.ஜெய்புன்னிஷா ,பாத்திமுத்து சித்தீக் ,தமிழம்மா ,நாதிரா கமால் ,சுமையா போன்ற பற்பலஅறிஞர்களின் அறிமுகம் ,அவர்களுடன் அளவளாவும் இனிய தருணமும் கிடைத்தது.சிலரின் நட்பு இன்னுமும் தொடர்கின்றது. கீழக்கரை தாஸிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் வெல்ஃபேர் கமிட்டி உறுப்பினராக பங்கேற்கும் வாய்ப்பையும் தந்தது.

குழந்தைகள் பிறந்து எனக்கும்.எழுத்துலகிற்குமான பாலம் அறுபட்டுப்போனாலும்,பார்ப்பவர் எல்லாம் என்ன எழுதுவதே இல்லை என்று கேட்டாலும்,பார்க்கும் நேரமெல்லாம் டாக்டர் ரஹ்மதுன்னிஷா அப்துர்ரஹ்மான்,டாக்டர் கமலா ராகுல் போன்றோர் உட்பட என் நலம் விரும்பிகள் பலரும் "நம்ம சைட் எழுத்தாளரை மிஸ் பண்ணுகிறோமே?மறுபடி எப்ப ஸ்டார்ட் பண்ணப்போகின்றாய்"என்று கேட்கத்தவற மாட்டார்கள்.


இந்நேரத்தில் சற்றேனும் நேரம் கிடைக்காவிட்டாலும்,எனக்காக தன் படிப்பை ஒத்தி வைத்து விட்டு சற்று நேரம் அவ்வப்பொழுது வந்து உதவும் என் அருமை மகனாரையும் நன்றியுடன் நினைத்துக்கொள்கின்றேன்.தமிழ் வாசிக்கத்தெரியாவிட்டாலும் சிரத்தையாக டிராயிங்க் வரைந்து கொண்டே என் பிளாக்கை நான் வாசிக்க கேட்டு கமண்ட் அடிப்பது எனக்கு கிடைத்திருக்கும் நோபல் பரிசு.

இப்பொழுது என் விரல்களில் பேனா நர்த்தனம் ஆடுவதை விட,கீ போர்டில் என் விரல்கள் நர்த்தனம் ஆடுவது எனக்கு ரொம்பவே பிடித்திருக்கின்றது.

சம்சாரத்தின் புலம்பலைவிட மின்சார புலம்பல் கடுமை!

இறைவன் மின்சாரம்  என்று  அழைக்கப் படும் என்னை மின்னல் வழி உண்டாக்கினாலும் மனிதனுக்கு அறிவைக் கொடுத்து பல மாற்றங்களுக்கு உள்ளானேன்.
   ஃபர்
துணியை அம்பர் மீது தேய்ப்பதைக் கொண்டு இரண்டுக்கும் இடையில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு நான் (மின்சாரம்) உண்டாவதாக பண்டைய கிரேக்கர்கள் கண்டுபிடித்ததாக  என் (மின்சார) வரலாறு சொல்கின்றது .
பெஞ்சமின் பிராங்க்ளின் அவர்கள் எனது தந்தை என்றும் சொல்வார்கள்.
நான் உருவானதின் மாற்றங்களும் வினோதம்தான்.
ஆனால் நான் தமிழ்நாட்டில் படும் அவதியை யாரிடம் சொல்வது . நான் மலடியாம் , உரு முறையாக தங்காமல் கலைந்து விடுகின்றதாம் .
நான் என்ன செய்வது !

என் கணவன் அரசு என்னை சரியாக கவணிப்பதில்லை.அவருக்கு பல வேலை. பாவம் அவர்! ஏழை, எளியமக்களின் நலனுக்காக பாடுபடும் என் அரசு,  
அவரைக் பார்த்து மக்கள் கேட்டால் அவர் சொல்கின்றார் எனது முந்தைய கணவன் என்னை சரியாக பராமரிக்காமல் ஊட்டச் சத்தும் சரியாக கொடுக்கவில்லை  என்கிறார் . என் நிலை இவ்வாறு இறுக்க மக்கள் ஏன் என்னை குறை சொல்கிறார்கள் . நான் ஒழுங்காக எனது பரம்பரையை உருவாக்க என் கணவன் முன்எச்சரிகையோடு நடந்திருந்தால் எனக்கு இந்த அவப்பெயர்  வந்திருக்காதே. என்னை குறை சொல்வதை விடுத்து என் கணவன் அரசுக்கு அறிவுறை கொடுங்கள் .அது பயனுள்ளதாக இருக்கும்.அதுவரை  எனது புலம்பலும் நிற்காது, நீங்கள்  என் மீது கூறும் குற்றச் சாட்டுகளும் ஓயாது.
இனி நிலா, மின்னல் ஒளிகளை நம்பி வாழுங்கள். என் சக்களத்தி
கள் ஜெனரேட்டர்,காத்தாடி, கேஸ் ,மண்ணெண்ணை , விறகு ஒன்றையும் நம்பாதீர்கள் .
உங்களையே நம்பி ஒரு கைவிசிறி வாங்கி பயன் படுத்துங்கள்  


 பகலில் மின்சாரத்தை பேட்டி காண முடியாது .அவள் பகலில் வெளிநாட்டு வாகன  உற்பத்தியாளர்களுக்கு  சேவை  செய்யப் போயிருப்பாள். அங்கு என்னதான் கொட்டிக் கொடுக்கிறார்களோ! மாலை வருவரை காத்திருப்போம் என இருந்தேன். ஆறு மணிக்கு மின்சார மங்கை வந்தாள். பேட்டி ஆரம்பித்து முடிப்பதற்குள் அரை மணிக்கு ஒருதடவை ஓடி ஓடி ஒளிந்துக் கொள்கின்றாள்.அலுத்துப்போய் விட்டது. ஆளை விடு என அவளே போய் விட்டாள். நான் எங்கே எழுதுவது! அதனை எப்படி சரி பார்ப்பது என் பிழையை மற்றவர்கள் இருட்டில் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதோடு எழுதி முடித்து விட்டேன் .
     வீட்டில் 'தோசை சுடு' பசிக்கிறது என்றேன். சம்சார புலம்பல்   ஆரம்பமாகி விட்டது.'கேஸ் இல்லை மின்சாரம் வந்ததால்தான் சுட்டு தர முடியும்'   வார்த்தையால் என்னச் என்னைச்  சுட்டாள். 'அப்பொழுதே சொன்னேனே இன்வேன்ட்டர் வாங்கி வையுங்கள்' என்று புலம்பினாள் .நான் அரசு இனாமாக கொடுக்கும் என்று நினைத்தேன். 'இனாமிலேயே கிடைத்தாலும் அதற்கு சார்ஜ் ஏற்ற மின்சாரம்  வேண்டுமே' என சமாளித்தேன். கொசு வேறு கடிகின்றது மொட்டைமாடிக்குப் போய் நிலாவின் ஒளியில் அமைதி காண்போம் என ஓடிவிட்டேன் 

Tuesday, March 6, 2012

கானாவை கண்டு பிடித்தவர் யார்!

ஒளி கண்டேன் ஒலி கேட்டேன்
அலை கண்டேன் ஓசை கேட்டேன்
காதல் கொண்டேன் ஆசை கொண்டேன்      
கனா கண்டேன்  கண் விழித்தேன்
அங்கும் வெளிச்சம் இங்கும் வெளிச்சம்
கனா நின்று மறைந்தது நினைவு நிலையாய்  நின்றது
கற்பனை ஊரும் களைந்து போகும்
கற்பனைக்கு நங்கூரம்  இருப்பின் நிலைத்து நிற்கும்
மனோநிலை மாறி மாறி வரும் காலம் மாறுவதுபோல்
கனாவின் நிலையும் மாறி மாறி வரும் விழித்தால் களைந்து விடும்
கனா மகிழ்வையும் அச்சத்தையும் மாறி மாறி கொடுக்கும்
கனாவை நினைவாக்க முயல்வதற்கு முன் மறைந்து மறந்து போகும்.
மறந்துபோகும் கனவே மனிதனை பித்தம் பிடிக்காமல் பாதுகாக்கும்
நல்ல கனா ! கெட்ட கனா என உனக்குள் ஒரு பிரிவுண்டோ!
நடந்த நிகழ்வால் நீ கனாவாய் வந்தாயா!
நிகழப் போவதுற்கு முன் நினைவைத் தந்தாயோ !
ஆழ்மனதில்  மனதில் அடங்கியிருந்து கனாவாய் காட்சி கொடுத்தாயோ!
நடக்கமுடியாததை  கனாவாய் வந்து மகிழ  வைத்தாயோ!
மறக்கும் கனாவாய்  சில நிலைத்து நிற்கும் கனாவாய் சில வந்து விளையாடுவதேன்!
பயமுறுத்தும் கானவாகவும்  மகிழ்விக்கும் கானவாகவும்  வேடிக்கை காட்டும் விநோதத்தினை எங்கு கற்றாய்!

Monday, March 5, 2012

பாங்காக் – தமிழ் முஸ்லிம் அசோசியேசன்+ பாங்காக்கின் அனைத்து மசூதிகளின் விபரம்



பாங்காக் – தமிழ்  முஸ்லிம்  அசோசியேசன் மசூதி
BANGKOK MOSQUE – Tamil Muslim Association in Thailand

பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கம்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் சங்கம்

பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்க வரலாற்றுச் சுருக்கம்:
ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த நாட்டைத் துறந்து, உழைத்துப் பொருளீட்டும் உயர்வான எண்ணத்தில் நூற்றுக்கும் சற்று குறைவான தமிழ் பேசும் முஸ்லிம் சகோதரர்கள் அமைதி தவழும் சியாம் என்றழைக்கப்படும் தாய்லாந்தின் தலைநகரமாம் பேங்காக்கில் தொழில் செய்து வந்தார்கள்.அதுசமயம், நமது இளைநர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ள, கருத்துபரிமாறிக் கொள்ள இனிய மாலைப்பொழுதுகளை இன்புற கழிக்க ஒரு பொது இடமின்றி தவித்தனர். பெரும்பாலான சமயங்களில் ஹோட்டல் லாபிகளில் அமர்ந்து நாட்டு நடப்புகள்,தொழில் விஷயங்களை பேசிக்கொள்வார்கள்.