Tuesday, January 31, 2012

தணிக்கைக்கு தயாரானது ப்ளாக்கர்

பதிவுலகம் முழுவதும் ஒருவித சோகம் பரவியுள்ளது. அதற்கு காரணம் கூகுள் இன்று சத்தமில்லாமல் ப்ளாக்கர் தளங்களில் செய்த ஒரு மாற்றம் தான். அதாவது இலவச ப்ளாக்கர் தளங்களில் உள்ள .blogspot.com என்னும் முகவரியினை சில நாடுகளில் மட்டும் .com என்பதற்கு பதிலாக .in, .com.au என்ற முகவரிகளாக மாற்றியுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணங்களைப் பற்றியும், இதன் விளைவுகளை பற்றியும் பார்ப்போம்.
 

தொடர்ந்து படிக்க... http://www.bloggernanban.com/2012/01/blogger-ready-to-censor.html

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Sunday, January 29, 2012

சொர்க்கத்தை மண்ணில் காண்போம்


மரணம் நேர்ந்ததும்
மண்ணின் தொடர்புகள் எல்லாம்
துண்டிக்கப்பட்டுவிடுகின்றன

மரணத்திற்குப் பின்
நிம்மதிதான்
எஞ்சி இருக்கப் போகிறது என்றாலும்
மண்ணில் உள்ள இனிய வாழ்வை
மரணத்தால் நாம் இழக்கிறோம்

அதை இழக்க
எந்த உயிரும் சம்மதிப்பதில்லை

ஆகவே
சொர்க்கத்தை
மண்ணில் காண்போம்
யாவரும் வாழவும்
நாமும் வாழவும் வாழ்வோம்

மரணம் பற்றிய சரியானதும்
நிம்மதியானதுமான அறிதல்தான்
மனிதனுக்கு அந்த
உயர்வான உணர்வுகளைத் தரும்
 Source : http://anbudanbuhari.blogspot.com/
------------------------------------------------------------------------------------------------------
இறந்தவர்களைத் திட்டாதீர்கள் "இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல்: புகாரி

Thursday, January 26, 2012

பதற்றம் தவிர்! வெற்றி நிச்சயம்!


 பதற்றம்! ஆங்கிலத்தில் இதனை Anxiety என்று குறிப்பிடுகின்றார்கள். அடுத்து என்ன நடந்திடுமோ என்ற பயம் கலந்த அச்சம். இது ஒரு மனித பலவீனம். இதனை நாம் வென்றாக வேண்டும்.
தனி மனித வாழ்விலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி, தொழில் துறை அல்லது பணியிடம் ஆனாலும் சரி, தொண்டனாக இருக்கும் போதும் சரி, தலைவர் பொறுப்பில் இருக்கும் போதும் சரி – இந்த பதற்றம் கூடவே கூடாது.
ஏனெனில் – பதற்றம் – நமது செயல் திறனை பாதிக்கும் (performance).
பதற்றம் – நமது முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் (interferes decision making).
பதற்றம் – எந்த ஒன்றிலும் நமது கவனத்தைக் குவித்திட இயலாமல் தடுக்கும் (shatters concentration).
எந்த ஒரு செயலையும் நாம் அழகே செய்து முடித்திட நிதானம் தேவை. அவசரம் கூடாது. பதற்றம் எந்த ஒரு காரியத்தையும் கெடுத்து விடும். பதறாத காரியம் சிதறாது என்பது முதுமொழி.
சாதாரண சூழலில் யாரும் பதற்றம் அடைய மாட்டார்கள் தான். ஆனால் சில அழுத்தம் தரும் சூழல்கள் (stressful situations) பதற்றத்தைக் கொண்டு வரலாம். அந்த சமயங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதே நமது ஆளுமையை (personality) நிர்ணயிக்கும்.

பட்டத்தில் உயர்ந்த பட்டமாக பெண்ணுக்கு கிடைப்பது !

 பெண் குழந்தையாக இருக்கும் போது வீடு கட்டி விளையாடுவாள் பின்பு பூச் சூடி மகிழ்வாள். அந்தப் பூவின் மனம் மகிழ ஒரு மணமகனை நாடுவாள். அந்த மணமகன் கிடைத்த பின்பு தான் மணம் வீசும் மலராக இருந்து அவனது மனம் மகிழ வைப்பாள். அவனால் கிடைத்த பரிசான பிள்ளைகளை பாசம் காட்டி வளர்ப்பாள் .பிள்ளைகளுக்கு சக்தி நிறைந்த சீம்பாலைக் கொடுத்து உயிருக்குயிராய்க் காப்பாற்றி பாசத்தைக் காட்டி , பரிவைக் காட்டி,கனிவைக் காட்டி, அன்பாகப் பேசி ஆனந்தம் கொடுத்து வந்த தாயாகவும் கணவனுக்கு சேவை செய்யும் மருத்துவ தாதியாகவும், அக மகிழ வைக்கும் இனிய இன்பம் தரும் இல்லக்கிழத்தியாகவும், விடியல் விழித்திடும் முன்னே விழித்து சுவையுடன் சமைத்து தரும் அடுபன்கரை அரசியாகவும் இருந்து தன்னை அர்ப்பணிப்பாள். இத்தனைக்கும் அவள் அடைந்த பட்டத்தில் உயர்ந்த பட்டமாக "அம்மா" என்பதுதான் அவளை உயர்த்தி வைக்கின்றது.

 நபிமொழிகள் "ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) .
நூல்: முஸ்லிம். "உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ.

Tuesday, January 24, 2012

மனிதனது தேவைக்காகவே மற்றவைகள்..


 “நிச்சயமாக அல்லாஹ் எந்த சமுதாயத்தின் நிலையையும் மாற்றுவதில்லை – தங்களைத் தாங்களே அவர்கள் மாற்றிக்கொள்ளாத வரை – அல்லாஹ் ஒரு கூட்டத்தினருக்குத் தீங்கை நாடினால், அதனைத் தடுப்பவர் எவருமில்லை: அவர்களுக்கு அவனையன்றி எந்த உதவியாளருமில்லை.” (13:11)

. நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.
 –குர்ஆன்:17:70

 அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்;
 –குர்ஆன் : 2:29.

 இறைவன் படைப்பில் அனைத்தும் உயர்வானதாக இருப்பினும்  மனித படைப்பு மேன்மையானதாக  உள்ளது. மனிதனது  தேவைக்காகவே மற்றவைகள் படைக்கப்பட்டன.

3 பவுண்ட் மனித மூளையின்  ஆற்றலில்லாமல் எதுவும் முறையாக இயங்காது. 12,000 மில்லியன் செல்களை உள்ளடக்கிய இவைகளே உணர்வு, மகிழ்வு, சிரிப்பு மற்றும் பல உணர்சிகளால்  உந்தப்பட்டு கண்ணீர் மற்றும் அனைத்துக்கும் தொடர்பினை உண்டாக்கி மனிதனை உந்தச் செய்கின்றது. மனித மூளை  முறையாக செயல்படுத்தப்படவும், அறிவு ஆற்றலை பெருக்கிக் கொள்ளவும் இந்த நரம்பு மண்டலங்கள் உதவி செய்கின்றன.

 நினைவை நிறுத்திக் கொள்ளும் விதம் பலவிதமாக இருக்கலாம். உடன் நிகழ்ந்தவை ,சற்று முன் நிகழ்ந்தவை மற்றும் கடந்த காலங்களில் நிகழ்ந்தவை என்று  வகைப்படுத்தப்படலாம்.

 நினைவை நிறுத்திக்கொள்ளும்  ஆற்றலிலும் அறிவைப் பெறும் திறமைகளிலும் மனிதருக்குள் வித்தியாசம் இருக்கவே செய்கின்றது. சிலர் மனனம் செய்து அதனை மனதில் நிறுத்திக் கொள்வதில் சிறப்பாகவும், சிலர்  ஆக்கப் பூர்வமாக தானே சிந்தனை செய்வதில்(Creative Knowledge)  வல்லவராகவும் இருப்பார்கள். இதன் உண்மையான காரணத்தினை நம்மால் அறிந்துக் கொள்வது கடினமாகவே உள்ளது. இது பரம்பரை மரபின் காரணமாக வந்தவை என்றும் சொல்வார்கள். எது எப்படி இருப்பினும் இளமையில் கற்பது  இதற்கு துணை செய்யலாம். இளமையில் கற்கும் கல்வி அடிப்படையானது. இளமையில் கற்பது அனைத்திற்கும் அஸ்திவாரம் போன்றதாகும் "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்பது போல் திரும்பத் திரும்ப முயன்று அந்த கற்கும் கலையினை  தன் வயப்படுத்திக் கொள்வதில் வெற்றி பெற வாய்ப்புண்டு       

இறைவன் மனிதனை வெறும் விளையாட்டுக்காக படைக்கவில்லை. ஒவ்வொரு மனிதனிடமும் ஒவ்வொரு திறமையை கொடுத்தே இருக்கின்றான். அதனை அவன் தனது தொடர்ந்த முயற்சியால் தனக்கு கொடுக்கப் பட்ட ஆற்றலை கண்டறிந்து அதனை மேன்படுத்திக் கொள்வது மனிதனிடமே இறைவன் தந்துள்ளான்.

'கவிஞன் பிறக்கிறான் பேச்சாளன் உருவாக்கப் படுகின்றான்' என்று சொல்வார்கள். ஆனால் அத்தனைக்கும் அறிவு, கல்வி முயற்சி அடிப்படை தேவையாக உள்ளது. முறையாக கல்வி கற்காதவர் எதிலும் சிறப்படைய முடியாது.


மார்க்க ஞானம்  பெறுவது உயர்வாக உள்ளது. அந்த மார்க்க ஞானம் பெறுவதற்கும் ஒரு இடம் தேவைப்படுகின்றது. அதற்காக தன் பங்கினை தந்தோர் ஏராளம் . (அதில் ஒன்றாக சிறப்பாக செயல்பட்டு வரும்   
நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதாவின் நூற்றாண்டு விழா(அரபிக் கல்லூரி) இந்த வருடம்  நூற்றாண்டு விழாவினைக் மகிழ்வாக கொண்டாட உள்ளது பெருமிதத்தினைத்  தருகின்றது) ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா! . 

மனிதன் இறந்து விட்டால் அவனது மூன்று செயல்கள் தவிர மற்றவை துண்டிக்கப்பட்டு விடும். அவையாவன:
i). நிலையான தர்மங்கள்
ii). பயன் தரும் கல்வி
iii). அவனுக்காகப் பிரார்த்தனை புரியும் நல்ல பிள்ளை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம் 1631, அபூதாவூத் 2880, திர்மிதி 1376 மற்றும் புஹாரி 6514)



மார்க்க ஞானத்தினை கற்றுக் கொடுப்போர் மைக் போட்டு சப்தத்தினை பெருக்கி சொல்லிக் கொடுப்பதில்லை. அந்த அறிவினைத் தருவோர் தான் பக்குவமடைந்தவராகவும், நல்ல நடத்தையுள்ளவராகவும் இருந்து தன்னிடம் கல்வி பெறும் மாணவர்களை தன்னைச்  சூ அமர வைத்து அமைதியான முறையில்,கனிந்த வார்த்தைகளைக் கொண்டு   மென்மையான  ஆழமான கருத்துகளை மாணவர்களின் மனதில் பதிய வைப்பதுடன் தானும் அவர்கள்
னதில் காலத்தால் மறையாத நிறைவான நினைவில் பதிந்து விடுகின்றனர்.

Monday, January 23, 2012

கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?



காய்கனிகள், கீரைகளில் இல்லாத சத்து எதிலும் இல்லை. இவற்றிலுள்ள 'பைடோ கெமிக்கல்ஸ்' நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது.
1. கீரை, முட்டைக்கோஸ் ஏன் சாப்பிடணும்?
சில உணவுகளில் உள்ள கிருமி நாசினிகளையும், தேவையற்ற ரசாயனங்களையும் பிரித்து உணவை ஜீரணிக்கச் செய்வதால்
2. பூண்டு, வெங்காயம் ஏன் சாப்பிடணும்?
ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. இவற்றிலுள்ள சல்பைட் சத்து ஜீரண சக்தியைத் தருவதுடன் வயிறு உபாதைகளையும் போக்கும்.
3. தக்காளி, பச்சை திராட்சை ஏன் சாப்பிடணும்?
நுரையீரல் புற்று நோய் நீங்க உதவுகிறது. நோய் எதிர்ப்புச்சக்தி ஏற்படுகின்றது.
4. கேரட், மாம்பழம் ஏன் சாப்பிடணும்?
இவற்றிலுள்ள பீடா கரோடின், ஆல்பா கரோடின் என்னும் ரசாயன சத்துக்கள் புற்றுநோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை.

எது சிறப்பு!


எது சிறப்பு!

மலரதனின் சிறப்பென்றால் மகிழ்ச்சித் தோற்றம்
மனங்கனியச் செய்வதிலே மிகவும் ஏற்றம்
நிலவதனின் சிறப்பதுவோ நிலைகள் மாற்றம்
நிறைந்தாலும் மறைந்தாலும் நிலைக்கும் ஆற்றல்
உலகமிதன் சிறப்பென்ன? வேறு பூக்கள்
ஒருசேரப் பூத்திருக்கும் இயற்கைப் பூங்கா
உலவுகின்ற தென்றலுக்கும் உண்டே பேறு
உள்ளபடி பொதுவுடமை விளங்கும் காற்றே
.
தலைமையதன் சிறப்பென்றால் தகுதி காத்தல்
தக்கபடி பணிமுடிக்க தேரும் ஆட்கள்
கலைமனதின் சிறப்பிங்கே கற்பின் வாய்மை
கலங்காமல் ஒளிவீசும் கனலின் தூய்மை
அலைமுழக்கம் சிறப்பில்லை: ஆழி என்றால்
ஆழம்தான் சிறப்பாகும் அறிஞர் போல!
நிலைமறந்தே ஆடுவோரின் நினைப்பைக் கூட
நீக்கிவிடும் சிறப்பிங்கே நல்லோர்க் காமே

நண்பர்தம் சிறப்பெல்லாம் நலமே செய்தல்
நம்பிக்கை நீட்டியொரு நேசம் பெய்தல்
மண்ணிதனின் சிறப்பிங்கே மனிதம் ஓங்கல்
மற்றவரும் தன்போன்றே மனதில் கொள்ளல்.
கண்விழிகள் சிறப்படையும் காணும் நோக்கில்
கருத்தான ஏதொன்றும் கவர்ந்துக் கொண்டால்.
பெண்ணவளும் சிறப்பன்றோ பேணும் தாய்மை
பொறுமையினால் அடைகின்றாள் பெரிய வெற்றி.

சிலமனிதர் சிறப்பின்றி சின்ன புத்தி
சிந்தையிலே சுயநலமே செய்யும் உத்தி
பலமனிதர் சிறப்பிங்கே பாவம் ஐயோ.
பண்பாட்டைச் சிதைப்பதிலே பெருமை கொள்வார்
உளமகிழச் செய்வதுவே உயர்ந்தோர் செய்கை
ஒருவரையும் இகழாமல் உணரும் போக்கு.
புலவரிவர் சிறப்பிங்கே பொறுமை காத்து
புகழோங்க கவிவானில் ஒளிரும் பாடல்! 
 

Sunday, January 22, 2012

அதிக குழந்தை பெறுங்கள்: சிங்கப்பூர் பிரதமர்!

"சிங்கப்பூர் நாட்டினர் அதிக குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும்" என்று  அந்நாட்டின் பிரதமர் லீ சியன் லூங் கேட்டு கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சிங்கப்பூரில் தம்பதியர் அதிக பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் சமூகச் சூழலையும் மனப்போக்கையும் சேர்ந்து செயல்பட்டு உருவாக்க முன்வருமாறு" சிங்கப்பூராருக்கு பிரதமர் லீ சியன் லூங் அறை கூவல் விடுத்து இருக்கிறார்.

"தம்பதியர் அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள மேன்மேலும் நிதி ஊக்குவிப்புகள் பலன் தராது" என்று தெரிவித்துள்ள அவர், "சிங்கப்பூரின் எதிர் காலத்தில் தம்பதியருக்கு அதிக நம்பிக்கை ஏற்படச் செய்வதே அதற்கான ஊக்குவிப்பாக இருக்கும்" என்றார்.

"இந்த தேசிய முயற்சியில் எல்லாரும் சேர்ந்து நமக்கும் நம் குடும்பங்களுக்கும் பிள்ளைகளுக்கும் தலைசிறந்த தாயகமாகச் சிங்கப்பூரை ஆக்குவோம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source http://www.inneram.com/

Thursday, January 19, 2012

சலாகுத்தீன் அய்யூப்


By ரம்சின் நிஸாம்



பிரபல பேரரசான ஜயூபி பேரரசை நிறுவியவரே சலாகுதீன் ஆவார். யூசுப் சலாகுத்தீன் இப்னு ஜயூப் என்ற இயற் பெயரையுடைய இவர் ஈராக்கிலுல்ல திக்ரித் நகரத்தில் 1137 ல் பிறந்தார்.


டமஸ்கசில்
மேற்படிப்பை மேற்கொண்ட சலாகுத்தீன் தனது 31வது வயதில் 1169ம் ஆண்டு பாத்திம கலிபாக்கலின் கூட்டுப்படைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். நிர்வாகத் திறமை, போர் முறைகள் மற்றும் பயமறியா குணம் என்பவற்றின் காரணமாய் எகிப்து நாட்டின் தலைவராய் மாறினார். 1171ம் ஆண்டு எகிப்தின் பேரரசாக முடி சூடப்பட்டார். இவரது ஆட்சியின் கீழ் எகிப்தின் படைப்பலம் மற்றும் பொருளாதார வேகம் பெறுகியது. சிரியா நாட்டை ஆண்ட நூறுதீன் மன்னனின் மரணத்திற்குப் பிறகு அவரது விதவை மனைவியான இஸ்மத் உல்தீன் காத்தூன் என்பவரை மணம்புரிந்து 1174ம் ஆண்டில் சிரியா நாட்டை தனது ஜய்யூபி பேரரசுடன் இணைத்துக் கொண்டவர் அந்த காலகட்டத்திலேயே பல முறை சிலுவைப் போர்களை சந்தித்தார்.

1187- 1188ம் ஆண்டுவரை அனைத்து சிலுவைப் போர்களின் பகுதிகளையும் கைப்பற்றிய சலாகுத்தீன் ஜயூப் ஒரு முழுமையான ஜயூபி பேரரசை நிறுவினார்.
ஒரு முழுமையான இஸ்லாமிய பேரரசின் கீழ் ஜெரூஸலம் நகரை கொண்டுவந்த பொழுதும் கூட அங்கு வாழ்ந்த யூத மக்களை தொடர்ந்தும் ஜெரூசலம் நகரிலேயே வாழ அனுமதித்தார்.
மிகப் பெரிய பேரரசை ஏற்படுத்திய பின்பும் கூட இவர் சாதாரண மனிதராகவும் எழிமையாகவும் வாழந்தார். பூரணமான சுன்னி இஸ்லாத்தைப் பின்பற்றிய இவர் மற்ற மதத்தினரையும் மதித்ததோடு அவர்களின் புனிதத் தளங்களுக்குப் பாதுகாப்பும் கொடுத்தார். ஆக்கிரமிப்பாளர்களிடையும் கன்னியமாக நடந்து கொண்ட இவர் கைதிகளை சிறையில் அடைக்கவோ, துன்புறுத்தவோ, படுகாயங்கள் ஏற்படுத்தவோ என்றைக்குமே முனைந்ததில்லை.
பிடிபட்ட கைதிகள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல அனுமதி வழங்கியிருக்கிறார். இவரது சிறந்த குண நலன்கள் மூலம் அரேபியர்கள் மட்டுமல்லாது ஜரோப்பிய கிறிஸ்தவர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
1193ம் ஆண்டு மார்ச் 4ல் டமஸ்கசில் நோய்வாய்ப்பட்டு தனது 55 அல்லது 56வது வயதில் சலாகுதீன் ஜயூப் இறந்தார். அவர் இறந்த பிறகு அவரை அடக்கம் செய்வதற்குக் கூட அவரது குடும்பத்தில் போதிய பணம் இருக்கவில்லை காரணம் தனது செல்வம் முழுவதையும் ஸதகா கொடுப்பதிலேயே செலவிட்டார்.
இவரது மறைவிற்குப் பிறகு ஜயூபிப் பேரரசு 57 ஆண்டுகள் தொடர்ந்தது. சலாகுத்தீன் புகழ் அவரது வாழ்நாளில் மட்டுமல்லாமல் நவீன உலகிலும் தொடர்கிறது. இதற்குச் சான்றாக இவரது சின்னமான கழுகு முத்திரையே இன்றும் ஈராக், எகிப்து, யெமன் ஆகிய நாடுகளின் இராணுவச் சின்னமாகவுள்ளது.
Source :  http://ramzeenin.blogspot.com/2011/08/blog-post_20.html

Tuesday, January 17, 2012

பெண்ணின் காட்சி மாறும் விதம் புவியியல் போன்றுதான்

பெண்ணின் காட்சி மாறும் விதம் புவியியல் போன்றுதான்

 18 முதல் 22,வரை ஆப்ரிக்கா நாட்டைப் போல வளமான அழகுடன் இருந்தாலும் முழுமையாக அறியமுடியாதவளாக பாதி கண்டுக்கொள்ள முடிந்தவளாக இருப்பாள்.

23 முதல் 30 வரை நன்கு வாளிப்பமான முழு வளர்ச்சியுடன் மதிக்கத் தக்கவளாக வளர்சியடைந்த ஐரோப்பா நாட்டினை நினைவு படுத்துவாள்.

31முதல் 35ஸ்பெயின் நாட்டுப்பெண் போல்   சூடாக இருப்பினும் தன் மன நிறைவுடன் அழகாக காட்சி தருவாள்    

36 முதல் 40கிரேக்க நாட்டைப்போல் விரும்பித் தேடி பழகுவதற்குள்ள பக்குவம் வந்து இனிமையுடன் பார்த்து மகிழ வாய்ப்பு அதிகமுண்டு   

41 முதல் 50, கிரேட்  பிரிட்டின் நாட்டை சார்ந்தவள் போல் அந்த பெண்ணுக்கு
 ஆதாயம் அதகமிருந்தால் தொடர்பு கொள்ளலாம். மிடுக்கு நடை இருந்தாலும் யாராவது அறிமுகம் படுத்தி வைக்க வேண்டும்.

51 முதல் 60 வரை சண்டை போட்டு அலுத்துப் போன இஸ்ரேல் நாடைபோல   பொருள், பணம் சேமித்து வைப்பதில் மிகுந்த நாட்டமுடையவளாக  இருப்பாள்.  
 
61 முதல் 70,வரை கனடா  நாட்டுப் பெண்ணாக தன்னம்பிக்கையோடு தன் மதிப்பினை பாதுகாப்பவளாக இருந்தாலும் யாராலும் பார்த்து பேசி ,உரையாடி உறவு கொள்ளலாம்

70 வயது வந்துவிட்டபின் பெண்கள் முதுமையின் அழகோடு காட்சிக்கு எளியவலாய் கனிவு மிக்கவளாய் திபத் நாட்டைப் போலிருந்து மன மகிழ்வு தருவதோடு சரி.

இது வரை  பெண்ணைப்  பார்த்தோம்  இனி ஆணின் (மனிதனின்) காட்சி எப்படி!

1 முதல் 80 வரை பிறந்ததிலிருந்து என்பது வரை ஆண் ஈரான் நாட்டைப் போன்று மற்றவர் ஆட்சியில் அடங்கி நிற்பான்.
இதுபோல் இந்திய நாட்டு ஆண்    பெண்ணின் ஆதிக்கத்தில் மடங்கி விடுவான்.

Monday, January 16, 2012

ஹாஜி. EM.நாகூர் ஹனிபாவின் இஸ்லாமிய இன்னிசை கீதங்கள்.

                                             ஹாஜி. EM.நாகூர் ஹனிபா அவர்கள்

 
அல்லாவை நாம் தொழுதால்...சுகம் எல்லாமே ஓடி வரும்
 அந்த வல்லோனை நினைத்திருந்தால்...
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும்...

Sunday, January 15, 2012

இதைச் சொன்னது யார்?


இந்த
முழு மொத்தப் பிரபஞ்சமும்
அதையும் தாண்டியதுமான
யாவும் எல்லாமும்
முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டன

உன் பிறப்பு
உன் இறப்பு
உன் அறிவு
உன் அழகு
உன் வாழ்க்கை
இன்னும் உன் எல்லாமும்
என்றோ தீர்மானிக்கப்பட்டுவிட்டன

இந்த உலகம்
இயங்கி இருக்கப்போகின்ற நீளம்
இன்னும் இப் பரந்த வெளியில்
வரப் போகின்ற யாவும் எல்லாமும்
அவை உருவாக்கப்படுவதற்கும்
முன்னதாகவே
தீர்மானிக்கப்பட்டுவிட்டன
 

Friday, January 13, 2012

தலைவாரிப் பூச்சூடி உன்னை...

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை!

சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்து கின்றாய்?

விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி
வேளைதோ றும்கற்று வருவதால் படியும்!

மலைவாழை அல்லவோ கல்வி? - நீ
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!

படியாத பெண்ணா யிருந்தால் - கேலி
பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்!

கடிகாரம் ஓடுமுன் ஓடு! - என்
கண்ணல்ல? அண்டை வீட்டுப் பெண்களோடு.

கடிதாய் இருக்குமிப் போது! - கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது!

கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு - பெண்
கல்விபெண் கல்விஎன் கின்றதன் போடு!

-பாரதிதாசன்

Thursday, January 12, 2012

வர்த்தக பயணிகளுக்கு சிறந்த விமான நிலையங்கள் மற்றும் ஏர் லைன்ஸ்

விளக்கப் படம் : வர்த்தக பயணிகளுக்கு சிறந்த விமான நிலையங்கள் மற்றும் ஏர் லைன்ஸ். What Are the Best Airports for Business Travelers?
Via: Online MBA News

தலிபான்களின் உடல் மீது சிறுநீர் கழிக்கும் அமெரிக்க கடற்படை வீரர்கள் !

 Picture soure

கொல்லப் பட்ட தலிபான் உடல்கள் தரையில் கிடத்தப் பட்டு அதன் மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சி யூ டியூப்பில் வெளியாகியுள்ளது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வீரர்களின் இச்செயலைக் கண்டித்து அமெரிக்க இஸ்லாமிய நல்லுறவு கவுன்சில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பெனட்டாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. போர் விதிமுறைகளை மீறும் வகையில் அமெரிக்க கடற்ப படை  வீரர்கள் செயல்பட்டிருப்பது கண்டிக்கத் தக்கது. அநாகரிகமானது என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வீடியோ காட்சி குறித்தும் அதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் பற்றி தெரிவித்த பெண்டகன் மற்றும் அமெரிக்கக் கடற்ப் படை செய்தித் தொடர்பாளர்கள் ''இந்தக் காட்சியை வீடியோ எடுத்து  இணையதளத்தில் வெளியிட்டது யார்  என்பது தெரியவில்லை.

ஆரோக்கியமான நெடு நாள் வாழ்வின் வழி.

 பல ஆய்வுகள் திருமணம் செய்து கொண்ட  தம்பதியர்கள் நீண்ட காலம் வாழ்வதாக தெரிவிக்கின்றன. விவாகரத்து செய்து கொண்டவர்களுக்கும்  திருமணம் செய்து கொள்ளாதவர்களுக்கும் வாழ்வில் நிம்மதியற்ற நிலை அடைந்து மன அமைதி இல்லாமல் வாழும் வாழ்வும் குறைவாகி விடுகின்றது. 

 ஜப்பான் ஒகினோவன் மக்கள் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிகின்றன. இவர்கள் வயதாகிவிட்டது என்ற காரணம் காட்டி ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து தங்கள் உடல் உழைப்பை முக்கியமாக விரும்பி செயல்படுத்துகின்றனர். காய் கரி மீன் இவைகளை அதிகமாக விரும்பி தங்கள் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். தாங்கள் நீண்ட ஆண்டுகள் வாப் போவதாக நம்புகின்றனர். அதற்கு ஏற்றதுபோல் உடல் நலத்தினை பாதுகாக்க அணைத்து முயற்சிகளிலும்  ஈடுபடுகின்றனர். எண்ணமே வாழ்வு.

Wednesday, January 11, 2012

நீடூர் அ.மு.சயீத் நூல் வெளியீட்டு விழாவில் - நாகூர் ஹாஜி, E.M.ஹனீபா அவர்கள் பேச்சு.


நீடூர் அ.மு.சயீத் நூல் வெளியீட்டு விழாவில் - நாகூர் ஹாஜி, E.M.ஹனீபா அவர்கள் பேச்சு.

"நீடூர் சையீத் அவர்களின் திருமணத்திற்கு மாப்பிள்ளை தோழனாக நானும் A.K.S.அப்துஸ்ஸமது அண்ணனும் இருந்தோம்" -நாகூர் E.M.ஹனீபா

S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Jazakkallahu Hairan
நன்றி : http://niduronline.com/?p=​460

சகோதரா மன்னித்துவிடு..(இனிய வீடியோ இணைப்புடன் )

 என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
.சகோதரா மன்னித்துவிடு. தனுஷின் கொலவெறிப்பாட்டை அங்கீகரித்த ஒட்டு மொத்த தமிழர் சார்பிலும் மன்னிப்பு கோருகிறேன்…
- தனுஷின் ‘தமிழ் கொலவெறிப்பாட்டு’க்கு எதிராக, யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் அட்டகாசமான தமிழில் எழுதி அதே மெட்டில் பாடியிருக்கும் ‘என் தமிழ் மேல் உனக்கேனிந்த கொலவெறிடா?’ என்ற பாட்டைக் கேட்ட பிறகு பலரும் உதிர்த்த கமெண்ட் இது!
நாடே தனுஷின் கொலவெறி பற்றி பேசிக் கொண்டிருக்க, மொழி ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது இந்தப் பாடல்.
இந்தப் பாட்டைக் கண்டிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து எஸ் ஜே ஸ்டாலின் உருவாக்கியுள்ள ‘கொலைவெறிப் பாடலுக்கு’ அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஏக வரவேற்பு.
தமிழ் உணர்வாளர்களும் புலம்பெயர் ஈழத் தமிழர்களும் இந்தப் பாடலை உருவாக்கிய ஸ்டாலினை பாராட்டித் தள்ளிக் கொண்டுள்ளனர்.
‘என் தமிழ் மொழி மேல் உனக்கேன் இந்தக் கொலைவெறிடா’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் பப்பா பப்பா என பாடிக் கொண்டிருக்கும் தனுஷை ‘தப்பு தம்பி தப்பு’ என தலையில் குட்டுவது போல அமைந்துள்ளன. இந்தப் பாடல் இணையதளத்தில் வெளியான மூன்று நாட்களுக்குள் 1.30 லட்சம் பேர் கேட்டு ரசித்திருக்​கிறார்கள். இன்றைய நிலவரப்படி 1.70 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ள பாடல் இது.
யாழ் நகரைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் இந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பாடலை இயற்றி, பாடி, இசையமைத்த எஸ்.ஜெ.ஸ்டாலினுக்கு, உலக அளவில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்தப் பாடலில் ஈழத் தமிழர்களின் அடையாளங்கள், மண் சார்ந்த நினைவூட்டல்கள் அழகாக இடம்பெற்றுள்ளது இன்னொரு சிறப்பு.
‘கொலவெறிடா – யாழ்ப்பாணம் பதிப்பு’ என்ற தலைப்பில் வந்துள்ள அந்தப் பாடலின் வரிகள் முழுமையாக:

இஸ்லாம் பற்றி 10 தவறான கருத்துக்கள்!

இஸ்லாம் பற்றி மிகவும் தவறாக செய்திகளை பரப்பப்படுகின்றன,அதே நேரத்தில் நமது சமுதாயத்திற்கு தீங்கு ஏற்படும் விதத்தில் செயல் படுகின்றனர். அதிலும் மிகவும் குறிப்பாக மேற்கத்திய நாடுகள் மற்றும் அதனைச் சார்ந்த ஊடகங்கள் இதில் தொடர்ந்து ஈடுபடுகின்றன.ஆனால் அவைகளின்  பொய் பிரசாரங்களை மக்கள் நம்புவதாக இல்லை.   இஸ்லாம் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் மக்கள் இதனால் அதிகமாகியே வருகின்றனர். இதையும் மீறி இஸ்லாம்  வளர்ந்து வருகிறது.  நாம் உலகின் அனைத்து பகுதிகளில் இருந்து  மக்கள் மனதில்  இந்த தவறான பொய் பிரசாரங்களை உடைத்தெரிந்து  இஸ்லாம் பற்றிய உயர்ந்த உண்மையை பகிர்ந்து கொள்ள ஒரு நாட்டம் மேற்கொள்ளவேண்டும்.

Top 10 Misconceptions About Islam

by The Duke Capone

10
Muslims are Arabs
China 9X

Misconception: All Muslims are Arabs
The common image of a Muslim is a turbaned dark Arab man with a long beard. However this image is part of the minority of Muslims. Arabs make only 15% of the world’s Muslim population. As a matter of fact the Middle East comes in third with East Asia coming in at first (69%) and Africa (27%) coming in at second. Another common misconception is that all Arabs are Muslims. While the vast majority of Arabs are Muslims (75%), there are many other religions that Arabs practice including Christianity and Judaism.


9

Muslims and Jesus
Lastjudgment30D

Misconception: Muslims Hate Jesus
There are many similarities between the historical references of Christianity and Islam. Many people are amazed to find out that according to Muslim belief, Jesus is one of the greatest messengers of God. One cannot be a Muslim without believing in the virgin birth and the many miracles of Jesus Christ. Jesus is also mentioned in many verses of the Quran and is often used as an example of good virtue and character. However, the main difference between Christianity and Islam is that Muslims do not believe that Jesus was God. Pictured above is Jesus in an Islamic portrayal of the last judgement.


8

Children’s Rights
Picture 1-106

Misconception: Children have no rights
Children, according to Islamic law, have various rights. One of these is the right to be properly brought up, raised, and educated. Islam encourages children to be brought up well because it is the responsibility of an adult to raise his child to become a moral and ethical adult. Children must also be treated equally. When giving financial gifts they should all be the same amount and there should be no preference among them. Children are even permitted to take moderately from their parent’s wealth to sustain themselves if the parent declines to give them proper funds for living. A child is also not allowed to get hit in the face or hit by anything larger than a pencil.

Readmore : Top 10 Misconceptions About Islam

Please click here : seasonsali: Top 10 Misconceptions About Islam

 

Tuesday, January 10, 2012

'கொலவெறி' புகழ் தனுஷுக்கு தமிழ் கவிஞர்கள் கண்டனம்!

சென்னையில் நடந்த ஒரு விழாவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மகன் குமாரவேலு ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுடன் கவிஞர்கள் அப்துல் ரகுமான், புலமைபித்தன், நா.காமராசன், பொன்னடியான், பூவை செங்குட்டுவன், அறிவுமதி, பழனிபாரதி, நா.முத்துக்குமார், சினேகன், ஏகாதசி, நெல்லை ஜெயந்தா, ப்ரியன், அண்ணாமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள்.

கவிஞர்களுக்கு மேடையில் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. அப்போது, நடிகர் தனுஷ் பாடிய “ஒய் திஸ் கொலை வெறிடி” பாடலைக் கண்டித்தனர். மன்னர்மன்னன் பேசும்போது, "எனது தந்தை பாரதிதாசன், தமிழ் பண்பாட்டுக்கு விரோதமான செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதித்ததில்லை. இன்றைக்கு ஆங்கிலம், தமிழ் கலந்து பாட்டு எழுதுகிறார்கள். அதுபோன்ற பாடலை மக்கள் உங்களிடம் விண்ணப்பம் போட்டு கேட்டார்களா? மக்கள் இந்த பாடல்களை விரும்புகிறார்கள் என்பது அப்பட்டமான பொய்" என்றார்.

கவிஞர் அறிவுமதி பேசும்போது, "கொலை வெறிடி பாடல் தமிழையும், தமிழனையும் கொச்சைப்படுத்தும் பாடலாக உள்ளது" என்றார். கவிக்கோ அப்துல் ரகுமான் பேசும்போது, "நல்ல பாடல்கள் வந்த காலம் போய் 'ஒய் திஸ் கொலை வெறி' பாடல் காலமாகி விட்டது" என்றார்.

Source : http://www.inneram.com/

புகழை விரும்பாதீர், இல்லாவிடில் மனவுளைச்சலுக்கும், கவலைகளுக்கும் உள்ளாக்கப்படுவீர்

أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم

பிறரின் கவனத்தின் மையமாக இருக்க நாடுவதினாலும், பிறரை மகிழ்விக்க முயற்சி செய்வதினாலும், உங்கள் வாழ்வின் அமைதி மற்றும் உறுதிப்பாட்டை  நீங்கள் இழக்கிறீர். அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; திருக்குர்ஆன்:  28:83

ஒரு கவிஞர் கூறினார்:
“யார் பிறரை பின்பற்றுவதிலும், தலைமைக் கொள்ளாமல் இருப்பதிலும் திருப்திக் கொள்கிறாரோ, அவர் தன் பால் அமைதியைக் கொண்டு வருகிறார்.
மேலும் தனது இரவுகளை அமைதியாக கழிக்கிறார்.
நிச்சயமாக காற்று பலமாக மற்றும் கடுமையாக வீசும் பொழுது மரத்தின் உயரமான பாகத்தையே சுண்டி எறிகிறது.”
அவர்கள் சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் காண்பிப்பதற்காக; திருக்குர்ஆன்:  4:142
மேலும் எவர் தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ… திருக்குர்ஆன்:  3:188
பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பியவர்க்ளைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்… திருக்குர்ஆன்:  8:47

ஒரு  கவிஞர் கூறினார்:
“ஒளிபுகு என்பது தனது செயல்களை காண்பிக்கச் செய்யும் ஒருவரின் மேல் அங்கி,
தன் மீது அதனை அவர் சுற்றி போர்த்திக் கொண்டாலும், அவர் நிர்வாணமாகவே இருக்கிறார்.”
Source : http://theheartopener.wordpress.com/

Sunday, January 8, 2012

1927ஆண்டிலிருந்து சென்னையில் ‘முசல்மான் ’ கையால் எழுதப்பட்ட செய்தித்தாள்

பாதுகாக்கப் படும் கனவு நினைவாக தொடர்ந்து செயல் வடிவத்தில்
‘முசல்மான் ‘ என்ற கையால் எழுதப்பட்ட செய்தித்தாள் 1927ஆண்டிலிருந்து சென்னையில் .
'Musalman' அநேகமாக உலகின் கடைசி கையால் எழுதப்பட்ட  செய்தித்தாளாக இருக்கலாம் . இது கிட்டத்தட்ட  1927 ல் வெளியிடப்பட்ட அதே வடிவத்தில்   சென்னையிலிருந்து  ஒவ்வொரு நாளும் வெளியிடப்படுகின்றது

The 'Musalman' is probably the last handwritten newspaper in the world. It has been published and read every day in South India's Chennai since 1927 in almost the same form. In the shadow of the Wallajah Mosque in Chennai, a team of six die hard workers still put out this hand-penned paper. Four of them are katibs -- writers dedicated to the ancient art of Urdu calligraphy. It's tough for the die-hard artists of Urdu calligraphy. But the story we tell here is not just of their desperation and despair. The fact is, at the office of 'The Musalman', the oldest Urdu daily in India, no one has ever quit. They work till they pass on. This is the story we tell.  .



உலகின் ஒரே 'கையெழுத்துப்பிரதி தினசரி'... இன்னும் சென்னையில்..!

    பண்டையகால உலகில் பனை ஓலைகளிலோ, துணிகளிலோ பின்னர் காகிதங்களிலோ எழுதப்பட்ட கையெழுத்துப்பிரதிகள்தான், தினசரிகள் என்று புழக்கத்தில் இருந்து வந்தன. இந்நிலையில் எழுத்துக்களை பதிக்கவும் ஒரே வகையான பக்கங்களை மிக வேகமான முறையில் பல படிகள் எடுக்கவும் உதவும் அச்சு இயந்திரம் 1450 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஜோஹன்ஸ் கூட்டன்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட, முதலில் பரவலாக ஐரோப்பா கண்டம் முழுவதும் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது. 


           இது மேலும், பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நவீனமாகி,  பின்னர் உலகம் முழுவதும் பயன்படுத்தத்தொடங்கினர். பொதுவாக அச்சு இயந்திரங்களை உள்ளடக்கிய ஒரு தொழிலகமான அச்சுக்கூடம் என்பது... தினசரிகள், வார இதழ்கள் போன்றவை  பிறக்கும் மிகவும் முக்கியமான இடம்..! இந்த அச்சுப்புரட்சி ஏற்பட்டபின்னர் கையெழுத்துப்பிரதி எழுதும் கலை (calligraphy) என்ற ஒன்றே இல்லாமல் ஆகி, வழக்கொழிந்து போய்விட்டது. யாரும் தினசரிகளை... அவ்வளவு ஏன்... வார, மாத இதழ்களையோ கூட கையினால் எழுதுவதில்லை. அனைவரும் எப்போதோ அச்சுக்கோர்க்க துவங்கி விட்டனர். ஆனாலும், ஐம்பது-நாற்பது வருடங்களுக்கு முன், நம் பல்கலைக்கழக பட்டங்களில் வித்தியாசமாக ஓவியங்கள் போல ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டு இருக்குமே..! University Degree Certificate -- இப்படி..! நினைவு இருக்கிறதா..? இந்த சான்றிதழ்களை அதற்கென்றே உள்ள பட்டை நிப் உள்ள பேனா வைத்து தொழில்ரீதியாகவே அப்போது கையால் எழுதுவார்கள்.

Thursday, January 5, 2012

Route வரைப்படம் ... எங்கும், எல்லா இடங்களுக்கும் செல்ல . அற்புதம்! பயனுள்ளது . பாருங்கள்

  இந்த வலைத்தளம் பிரமிப்பூட்டும் வழி காட்டும்
துவக்க மற்றும் இலக்கு புள்ளிகள் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் , அது உங்களுக்கு  வழி காட்டும்

     போக்குவரத்து அனைத்து முறைகள் மூலம்...!

     விமானம்  / பஸ்  / ரயில் மூலம் உலகின் எந்த இடத்திற்கும்  இந்த வரைபடத்தின் மூலம் நீங்கள் வழி கண்டடையலாம்

     கீழே உள்ள இணைப்பை கிளிக் செ
ய்யுங்கள்
www.rome2rio.com









  

மின் அஞ்சல் வழி தகவல் தந்தவர் A. H.பாரூக்  அலி

Tuesday, January 3, 2012

பெண்களுக்கு இஸ்லாம் தரும் உரிமைகள்..

இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்களுக்கு இஸ்லாம் தரும்  உரிமைகள் பல அதில் சில ....

கல்வி பெற உரிமை மற்றும் அது அவர்கள் கடமை.

தமது சொந்த சுயாதீன சொத்து உரிமை.

அவர்கள்
விரும்பினால் தங்கள் தேவைக்கு  பணம் சம்பாதிக்கவும் வேலை தேடிக்கொள்ளவும் சேமித்துக் கொள்ளளவும் உரிமை வழங்கப் பட்டுள்ளது

சம செயல்களுக்காக பரிசு என்ற சமத்துவ அந்தஸ்து  

 தங்கள் கருத்தை வெளிப்படுத்தவும்  மற்றும் அதனைக்  கேட்கவும் உரிமையுண்டு

அனைத்து அவள் தேவைகளையும் கணவரிடமிருந்து கேட்கும்  உரிமை.

தனது  திருமணம் பற்றி  பேச்சுவார்த்தை நடத்த உரிமை.

Sunday, January 1, 2012

நிம்மதியென்னும் வெளிச்சத்தில்.

கடந்தவைகளில்
கசப்பானவைகளை கடத்திவிடு
மனதைவிட்டு வெகு தூரம்

நடந்தவைகளில்
கெட்டதைதவிர நினைத்துக்கொண்டிரு
நெஞ்சின் ஒரு ஓரம்

நாட்களில் ஏதுமில்லை
நல்ல நாள்
கெட்ட நாளென்று

நேரத்தில் ஏதுமில்லை
நல்ல நேரம்
கெட்ட நேரமென்று