Wednesday, June 20, 2012

கருப்பு நிறமா கலங்காதே!! கலக்கு.

.யாருக்கு எது கிடைக்கவில்லையோ அதுமேல் நாட்டம் அதிகம். கருப்பாய் இருந்தால் வெள்ளையின் மீது விருப்பம் இருக்கும்.வெள்ளையாய் இருப்பின் கருப்பின் மீது காதல் வரும் கருப்பு தலை மேல் வெள்ளை பாதத்தில். உயரமானவன் கட்டையான பெண்ணை விரும்புவான். குட்டையானவள் உயரமான கணவனை விரும்புவாள். ஆனால் உயர்ந்த கொள்கைகள் குப்பையிதான் மதிக்கப்படாமல் கிடக்கும் .அந்த குப்பையில் பணத்தாள் கிடந்தால் ஓடி எடுப்பான். நாமே கீழே விழுந்தால் நம் உடலைப் பார்க்காமல் சிதறிப்போன பணத்தினை பொறுக்குவோம்.

பொதுவாக நாம் பார்க்கின்றோம் கறுப்பர்களுக்கு இனிய குரல் வளத்தை இறைவன் தந்துள்ளான் கருபர்களே உலகில் சிறந்த விளையாட்டு வீரர்களாக நிறைந்து உள்ளார்கள்.உலகில் கருப்பர்கள்தான் மக்கள் தொகையிலும் அதிகம். காம்பியா நாட்டில் வாழும் மக்கள் கருப்பர்கள் ஆனால் அந்த நாட்டில் கருப்பு காக்காவை பார்க்க முடியாது. அங்கு இருக்கும் காக்காக்கள் அனைத்தும் வெள்ளை நிறம் உடையதுதான். கருப்பு நிறமுடையவர்கள் உணர்ச்சிபூர்வமான உற்சாகத்துடன் களையாக இருப்பார்கள் .கருப்பான சருமம் கொண்டவர்களை வெப்பத்தினால் உண்டாகும் தோல் வியாதிகள் வருவது குறைவு. சாதனை செய்வதிலும் அவர்கள் குறைவதில்லை. 
கருப்பு பணம் வைத்திருப்பதுதான் தவறு. கருப்பு நிறமுடன் இருப்பது தவறில்லை. தான் ஒரு கருப்பு நிறமுடையவன் என்ற தாழ்வு மனப்பான்மை மட்டும் ஒரு காலமும் வரக் கூடாது. அவ்விதம் நினைத்திருந்தால் வெள்ளையர்கள் நிறைந்த நாட்டில் ஆப்ரகாம்லிங்கனும்,ஒபாமாவும் உயர்ந்த பதவிக்கு வந்திருக்க முடியுமா! நாம் தான் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கின்றோம். குழந்தை பிறந்தவுடன் 'குழந்தை  கருப்பா சிவப்பா' என முதல் கேள்வியை வினவுகின்றோம். குழந்தை கிடைத்ததே இறைவனது அருள். அதிலும் கூன், குருடு மற்ற குறைகள் இல்லாமல் இருப்பதற்கே இறைவனிடம் காலமெல்லாம் நன்றிக் கடனாக இறைவனைத் தொழுது வரவேண்டும். பிறப்பு ஒன்று இருக்கும்போது இறப்பு என்பது உறுதியாகிவிடுகின்றது. இதற்கிடையில் இதில் எந்த நிறத்தில் பிறந்தால் என்ன? வாழ்ந்த காலத்தில் என்ன சேவை செய்தோம்! என்பதுதான் முக்கியம். கருப்பு நிறமுடன் வந்து விட்டதால் கலங்காதே! அது உன் தவறல்ல! நீ தவறு செய்யாமல் வாழ்வதே உனக்கு உயர்வு. வாழும் காலத்தில் சாதனை செய்.       



No comments: