Saturday, March 31, 2012

கணவனும் மனைவியும் முழுமையாக பிடித்தவர்காக அமைந்துவிட முடியுமா!

 முழுமை எதில் உள்ளது ! முடிவின் இருதியே  முழுமையின்  துவக்கம்.  குறை  இல்லாத மனிதனைப் பார்க்க முடியுமா ! .குறையிலும்   நிறையினைக் காண்பவனே சிறந்தவன் . முழுமையாக கிடைக்கவில்லையயே என ஆதங்கப்படுவதைவிட கிடைத்ததைக் கொண்டு  நிறைவு அடைந்தவன் வாழ்வே மகிழ்வாக அமையக் கூடும் . தாகம்  தீர்க்க நீர் நாடி வேண்டுவோர்  கிடைத்த நீரைக் கொண்டு தாகத்தினை தீர வழி உண்டாகிக் கொள்வார்கள் . அதன் வேகம் படிப் படியாக குறைவதனை உணர்வார்கள் . எது தேவைக்கு  அதிகம் கிடைத்தாலும் அதன் மதிப்பு குறைவதனைக் காணலாம் . கடைத்தெருவில் பொருட்கள் அதிகம் வந்து சேர்ந்தாலும்  ஒரு பொருளின் விளைச்சல் அதிகமாகிவிட்டாலும் அதன் மதிப்பு குறைவாக போய்விடும் நிலை என்பது உண்மை . வாழ்வின் தத்துவமும் இதில் அடங்கும் . நாம் நினைத்தது  முழுமையாக கிடைக்காது  அப்படியே  அது கிடைத்து விட்டாலும்  அதன் சுவையை ,மகிழ்வை நாம் அனுபவிக்க முடியாது . குறையும் நிறையும் உள்ளடக்கியதே வாழ்வின் மகத்துவம் .திருமண வாழ்வும் அதைச் சார்ந்ததுதான் . நம்மால் முடிந்தவரை  வாழ்வை மகிழ்வாக்கிக் கொள்ள  விட்டுக் கொடுக்கும் மனதுடன்  நல்லதை பாராட்டி கெட்டதை  மறந்து  சிறப்போடு  வாழ  முயல வேண்டும் . கணவனும் மனைவியும் முழுமையாக பிடித்தவர்காக ஒருபோதும் சிறப்பாக வாழ்வை அமைந்துவிட முடியாது. கிடைத்த வாழ்வை சிறப்பாகிக் கொள்ள முயல்வதே சிறந்த வாழ்வு . வாழ்க்கை என்பது பொருள் கொடுத்து வாங்கும் பொருளல்ல.அது மனதைச் சார்ந்தது.வாழும் முறையைப் பொருத்தது.
 

இறை நம்பிக்கைக் கொண்டு அவனைத் தொழுது வாழ்வோர் வாழ்க்கை மனதில் கசடை நீக்கி தெளிந்த நீரோடையாக வாழ்வின் ஓட்டமும் சிறப்பாக முடியும்
-------------------------------------
"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"   - திருக்குறள்  -4

சாலமன் பாப்பையா உரை:

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்
-------------------------------------
 "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது." - குறள்
மு.வ உரை:

இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.  -
திருக்குறள்  -45
-----------------------------------

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
திருக்குறள்  -52

மு.வ உரை:
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
---------------------------------------------

. மனைவி வெறும் இச்சையை அடக்க வழி உண்டாக்கும்  இயந்திரமல்ல  மனைவி நம் இன்ப துன்பங்களுக்கு பங்கு வகிப்பவள். அதனால் நாம் மகிழ்வு அடைய முயலும் போது அவளையும் மகிழ்விக்கும் அளவிலேயே அனைத்துமிருக்க முயல வேண்டும் .

"அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!" என்று குர்ஆனில் சூரத்துல் பகரா என்கிற அத்தியாயத்தில் 187ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது! அதாவது, கணவன் மனைவிக்கு ஆடை! மனைவி கணவனுக்கு ஆடை!

 சிறப்போடு வாழ நாம் கவுரவம் ,மானம்,மரியாதை காக்கப்பட ஆடை உடுத்துவதுபோல்  தம்பதியர்  ஒருவருக்கு ஒருவர் தங்கள் கவுரத்தினை பாதுகாத்து  உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமை இல்லாமல் இருவரும் சமமே என்ற எண்ணத்தோடு கணவன், மனைவி இடையே  அன்பு பாராட்டி வாழ  வேண்டும் "ஓர் இறை நம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) .
நூல்: முஸ்லிம்.
 "உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ.   

"எந்தவொரு ஆன்மாவின் மீதும் அது தாங்கவியலாத் சுமையை அல்லாஹ் சுமத்துவதில்லை." (அல்குர்ஆன் 2:286)

 திருமணம் செய்து கொண்டால் மனைவிக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் மற்றும் இன்றியமையா வசதிகளை, தன் சக்திக்கேற்ப செய்து கொடுப்பது கடமையாகும். இதே போல மனைவியும் கணவனின் தேவைகளை அறிந்து நடந்து கொள்ள வேண்டும்; கணவனின் அழைப்புக்கு செவிசாய்க்க வேண்டும்.

"எந்தவொரு ஆன்மாவின் மீதும் அது தாங்கவியலாத் சுமையை அல்லாஹ் சுமத்துவதில்லை." (அல்குர்ஆன் 2:286)

எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.

அவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்' (அல்குர்ஆன் 4:19)

இல்லற வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர்களை ஆய்வு செய்தால் அக்கரைப் பச்சை மனப்பான்மை தான் பெரும்பாலும் காரணமாக இப்பதை அறிய முடியும்.

நீண்ட காலப் பிரிவு,இல்லற சுகத்தில் ஏமாற்றம்,தம்பதியரிடையே சரியான புரிந்துணர்வு இல்லாமல் போவது,மனைவியிடமிருந்து கிடைக்க வேண்டிய அன்பும் மரியாதையும் கணவனிடமிருந்து கிடைக்க வேண்டிய கனிவும் அரவணைப்பும் குறைந்து காணப்படுவது.

 நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது (17:32).

No comments: