Tuesday, September 27, 2011

இணைந்தது எங்கள் சமுதாயம் !

கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்திய சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று கூத்தாநல்லூர் செல்வி மஹால்-ல் நடைபெற்றது. கூத்தாநல்லூர் ஜமாதார்களும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், சமுதாய இயக்கத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும், கூத்தாநல்லூர்-ஐ சேர்ந்த அனைத்து கட்சி மற்றும் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக A.A. அர்ஷத் அலி கிராத் ஓதி துவக்கி வைத்தார். செய்யத் நாசர் அவர்கள் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். JMR. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இவ்விழா-வை தலைமை ஏற்று தந்து சிறப்பித்தார்கள். கல்வி மற்றும் மருத்துவம் பற்றி TNTJ மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் Dr. M. சர்வத் கான் MBBS அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் SDPI மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தலைமை ஏற்றி தந்து சிறப்பித்த JMR. ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு தக்பீர் ஹஜ் சர்வீஸ் நிறுவனர் Lion. N.S. சிராஜி தீன் அவர்கள் பொன்னாடை போற்றினார். நிகழ்ச்சியின் இறுதியாக கூத்தாநல்லூர் இளைஞர் இயக்க தலைவர் K.J. செய்யது யூசுப் தீன் அவர்கள் கொள்கை விளக்க உரை மற்றும் நன்றி உரை ஆற்றினார்.

கணினி பயனர்களுக்கான பணிச்சூழலியல் உதவிக்குறிப்புகள்










Monday, September 26, 2011

வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம்

துபாய் : வளைகுடாவின் பணக்கார இந்தியர்களின் பட்டியலை துபாயிலிருந்து வெளியாகும் பிரபல வர்த்தக ஏடு ஒன்று வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் உள்ள முதல் பத்து இந்தியர்களை குறித்து இந்நேரம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். எதிர்பார்த்தது போல் இப்பட்டியலில் உள்ள பத்து நபர்களில் எட்டு நபர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் செய்பவர்களாகவும் நான்கு நபர்கள் மலையாளிகளாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


1.மிக்கி ஜகதியானி – 3.2 பில்லியன் டாலர்                                                                             

மும்பையை பூர்விமாக கொண்ட மிக்கி ஸ்பால்ஷ் உள்ளிட்ட பல பேஷன் பிராண்டுகளை கொண்ட லேண்ட் மார்க் ரீடெய்ல் ஸ்டோர்களை நடத்தி வருகிறார். துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இவரின் சாம்ராஜ்யம் வளைகுடா, ஐரோப்பா, ஆசியா என பல இடங்களில் 600 ஸ்டோர்களை நடத்தி வரும் இவரின் குழுமத்தில் 30,000 நபர்கள் பணி புரிகின்றனர்.

2. யூசுப் அலி – 1.75 பில்லியன் டாலர்

வளைகுடாவில் லூலூவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வளைகுடாவில் லூலூ உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தும் இவரின் எம்கே குழுமத்தில் 30 நாடுகளை சார்ந்த 25,000 நபர்கள் பணிபுரிகின்றனர். கேரளாவை பூர்விமாக கொண்ட யூசுப் அலி அமீரகத்தை தலைமையகமாக கொண்டு தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருகிறார். இந்திய அரசால் பத்மஸ்ரீ பட்டம் கொடுக்கப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3.பி ஆர் ஷெட்டி – 1.72 பில்லியன் டாலர்

கர்நாடகவை சார்ந்த பி.ஆர். ஷெட்டி குவைத் போரின் போது கிடைத்த ஏற்றுமதி ஆர்டரை வைத்து தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய ஷெட்டி தற்போது நியூ மெடிக்கல் செண்டர் மற்றும் யூ.ஏ.ஈ எக்ஸ்சேஞ் உள்ளிட்டவற்றை நடத்தி வரும் இவரும் அமீரகத்தை மையமாக கொண்டு தொழில் நடத்துபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

4.சாப்ரியா குடும்பம் – 1.3 பில்லியன் டாலர்

அமீரகத்தில் எலக்ட்ரானிக்ஸ் வாங்கும் எவருக்கும் ஜம்போவை தெரியாமல் இருக்க முடியாது. மும்பையில் ரேடியா பாகங்கள் டீலராக இருந்த மனு சாப்ரியா தான் சோனி, நோக்கியா உள்ளிட்ட எலக்ட்ரிக் ஜாம்பாவான்களின் டீலர் ஆக விளங்கும் ஜம்போவை நிர்மாணித்தவரின். அவரின் மறைவுக்கு பின் வாரிசு பிரச்னை இருந்தாலும் அமீரகத்தின் மிக முக்கிய குழுமம்.

5.பி.என்.சி.மேனன் – 1.2 பில்லியன் டாலர்

கேரளாவில் பிறந்த மேனன் 1976ல் ஓமனுக்கு சென்று பார்டனருடன் இண்டீரியர் நிறுவனத்தை ஆரம்பித்தவர். ஓமனில் ஆரம்பித்தது போன்று பெங்களூரில் ஷோபா டெவலப்பர்ஸை ஆரம்பித்து ரியல் எஸ்டேட்டில் கலக்கிய மேனனின் நிறுவனம் ஓமனின் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்று.

6.சன்னி வர்கீஸ் – 950 மில்லியன் டாலர்

கேரளாவை சார்ந்த சன்னி வர்கிஸ் தொடக்கத்தில் ஆரம்பித்த ஒற்றை பள்ளியை இன்று 11 நாடுகளில் 1 இலட்சம் மாணவர்கள் படிக்கும் 100 பள்ளிகளாக ஜெம்ஸ் நிறுவனம் வியாபித்திருக்கிறது. அதிக கட்டணம் வசூலிப்பதாக சர்ச்சையில் அடிபட்டாலும் பத்மஸ்ரீ விருது வாங்கிய சன்னி வர்கீஸ் வளைகுடாவில் கல்வி சேவையில் முக்கிய நபரே.

7.ராஜன் கிலாசந்த் – 900 மில்லியன் டாலர்

மும்பையில் 60 வருடங்களுக்கு முன் டோட்ஸல் குழுமத்தை ஆரம்பித்த ராஜன் கிலாசந்த் இன்று தன் குழுமத்தை எஞ்சினியரிங், கனிம வளம், வர்த்தகம் போன்றவற்றில் மத்திய கிழக்கில் முக்கிய ஒன்றாக நிறுவியுள்ளார்.

8.டோனி ஜாசன்மால் – 900 மில்லியன் டாலர்

Jashanmal Group Executive director Tony Jashanmal (centre) is at rank 8, with $900m estimated wealth
ஈராக்கில் 1919ல் ஒரு சிறு கடையாக ஆரம்பித்த ஜாசன்மால் அமீரகத்தில் இன்று பரிச்சயமான கடைகளில் ஒன்று. வீட்டு பொருட்கள், பிரிண்ட் மீடியா என்று பல்வேறு பொருட்களின் பிரத்யேக டீலராக விளங்கும் ஜாசன்மால் 5 நாடுகளில் 100 ஸ்டோர்களை வைத்துள்ளது.

9.பகாரானி – 820 மில்லியன் டாலர்

1944ல் தென் ஆப்பிரிக்காவின் தொடங்கப்பட்ட சோய்த்ராம் இன்று அமீரகத்தை அடிப்படையாக கொண்டு 25 கடைகளை கொண்டு மிகப் பெரிய ரீடெய்ல் ஜாம்பாவானாக திகழ்கிறது

10.  டாக்டர் முஹமது அலி – 725 மில்லியன் டாலர்

பட்டியலில் உள்ள 10 பேரில் 2 வது ஓமனை சார்ந்தவரான முஹமது அலி கேரளாவை பூர்விகமாக கொண்டவர். அவர் ஆரம்பித்த கல்பார் எஞ்சினியரிங் மற்றும் காண்டிராக்டிங் நிறுவனத்தில் சுமார் 27,000 நபர்கள் பணிபுரிகின்றனர்.
Source : http://www.inneram.com/
---------------------------------------------------------------------------------------------------
வளைகுடாவின் Alhaj Dr.BS.Abdur Rahman பணக்கார இந்தியர்

A Well Known Social Worker Alhaj Dr.BS.Abdur Rahman




Alhaj Dr. B.S.Abdur Rahman Sahib, Chancellor - B.S. Abdur Rahman University, Vandalur, Chennai.
Alhaj Dr. B.S.Abdur Rahman, lovingly called 'Sena Aana' by people of Kilakarai. A well known personality in the field of Education, Economy and Industry and a Philanthropist of par excellence, hails from Kilakarai, Ramanathapuram District, Tamil Nadu, Besides his business activities he concentrates on the upliftment of the economically weaker sections and minorities through education, employment, health facilities and rural development. At present he pays more attention on "Women Education". His large heartedness and far sightedness have produced many a institutions of excellence, through which his services continue to benefit the poor, downtrodden and the under privileged sections of the society. He traces his lineage to first Caliph of Islam, Hazrat Abubakr Siddiq (RA).

Full Name : Buhari Syed Abdur Rahman
Date of Birth : 15th October 1927
Place of Birth : Kilakarai, Ramnad District
Educational Qualification : School Final
Father Name : Syed Muhammad Buhari
Mother Name : Yusuf Zulaikha





BUSINESS ACTIVITIES



1.	Chairman
	Amana Investments Ltd, HongKong

2.	Chairman 
	West Asia Exports & Imports Pvt. Ltd., Chennai

3.	Chairman
	East Coast Constructions & Industires (P) Ltd., Chennai

4.	Chairman
	West Asia Maritime Ltd., Chennai

5.	Chairman
	Sethu Investments Pvt. Ltd., Chennai

6.	Chairman 
	Buharia Holdings (P) Ltd.,Chennai

7.	Promoter
	Coal & Oil LLC., Dubai

8.	Vice-Chairman
        ETA Ascon Star Group, Dubai
Read more : http://seasonsali.blogspot.com/2011/09/well-known-social-worker-alhaj.html

புனிதமான மெக்கா சொகுசு விடுதிகள் நிரம்பி கஹ்பாவினை மறைக்கும் கொடுமை !

மெக்கா மாநகரம் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கிய அடையாளங்கள் மாறி செல்வந்தர்களுக்கு சொகுசு விடுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் வழி செய்ய மக்காவின்  புனிதத்  தன்மை இழந்து  (இஸ்லாமிய புனிதத்  தன்மை இழந்து விடும்) என்ற ஐயம் சிலரிடையே நிலவுகின்றது. புனித இடம்  ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு  உலகம் முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் கருத்து பிளவுபட்டு விட்டது.
 
  ஒரு காலத்தில் தூசி நிறைந்த  அரேபிய பாலைவன நகரம் இப்போது 

வானளாவிய கட்டடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஆடம்பர ஹோட்டல் ஒளிவிடும் கட்டிடங்கள் நிறைந்த மாநகரமாக  மாறியதால் கட்டிடங்கள் வரிசை கஹ்பாவுக்கு  சுற்றி மேலே உயர்கிறது. அதனால் கஹ்பா இருக்கும் இடம் எங்கு நின்றாலும் தெரியக் கூடியதாக இல்லை

கட்டுமான பித்து பிடித்தவர்களால் கலாசார  பெருமையை நிரூபிக்கும் நாட்டின் வரலாற்று  இடங்கள் அனைத்தும் வஹாபி கொள்கை பித்து பிடித்தவர்களால் சரித்திரம் மற்றும் வரலாறு முக்கிய இடங்கள் அழிக்கப் பட்டு விட்டன. நாயகம் வாழ்ந்த வீடு மற்றும் அவரது தோழர்கள்  இருந்த இடங்கள் பார்க்க முடியாது. அவர்கள் (வஹாபி கொள்கையுடையோர்) சொல்லும் காரணம் 'பழைய புராதான இடங்கள் இருந்தால் அதனை வணங்க முற்படுவார்கள் அதனால் அழித்து விட்டோம்' என்பார்கள். இது அவர்களது அறியாமையால் வந்த முரட்டு பிடிவாத கொள்கைதான். மற்றும்  நம்மை நாமே தாழ்வாக மதிப்பிட்டு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை அறியாதவர்களாக  மற்றவர்களை மதிப்பிட வழி வகுக்கும். உலகத்தில் பல நாடுகளில் பழமையினை பாதுகாத்து வருகின்றனர் . குறிப்பாக அதன் அருமைகளை பிரெஞ்சு நாட்டில் பாரிஸ் சென்றால் பார்க்கலாம். அவர்கள் தொல்பொருள் பாரம்பரியத்தை பார்வை நோக்கோடு வைத்துக் கொள்கின்றனர்.யாரும் அவைகளை வணங்கி வழிபடுவதில்லை. 
அல்லாஹ் கொடுத்த 
மகத்தான எண்ணெய் செல்வம் ஆடம்பர செலவுகளுக்கும் கான்கிரீட் கட்டிட ஹோட்டல்கள் கட்டி ஆடம்பர உல்லாச வாழ்வுக்கு பயன்படுத்தப் படுவது மிகவும் வேதனை தர வல்லது. 
-------------------------------------------------

  மக்கா நகரின் புனிதத் தன்மையும் அதை கண்ணியப்படுத்த வேண்டிய அவசியமும்! – Audio/Video

ஆடியோ : (Download) {MP3 format -Size : 2.7 MB}

 

மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி at சுவனத்தென்றல்
Source :http://suvanathendral.com/--------------------------------------------------- 

Sunday, September 25, 2011

இறைவனின் இறுதித் தூதர்...


அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹு)உங்கள் அனைவரும் மீது அல்லாஹுவுடைய சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக !

நிச்சயமாக எவர்கள் (ஓரிரை)நம்பிக்கை கொண்டு ,நற்செயல்கள் செய்து தொழுகையைக் கடைப்பிடித்து ,ஜகாத்தையும் கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய( நற் ) கூலி அவர்களுடைய ரப்பிடத்தில் இருக்கிறது -இன்னும் அவர்களுக்கு எவ்வித பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும்மாட்டார்கள் .அல்பகரா :277

* முஹம்மத் நபி (ஸல்) இறைத் தூதர் என்று முழுமையாக நம்புதல்.
* நபியின் கட்டளைகளுக்கு முழுமனதுடன் ஏற்று கட்டுப்படுதல்
* நபியின் வார்த்தைகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் பின்பற்றுதல்.
* நபி காட்டிய வழிமுறையை கூட்டல் குறைவில்லாமல் அப்படியே பின்பற்றுதல்.
* நபியின் செயல்முறைகளுக்கு மேலதிகமாக எதையும் உருவாக்காமல் தவிர்ந்து கொள்ளல்.
* நபியை சகல காரியங்களிலும் முன்மாதிரியாகக் கொள்ளல்.
* நபியின் சுன்னாக்களை குறைக்காமல், கொச்சைப்படுத்தாமல் செயல்படுத்துதல்.
* நபியை தன் உயிர், பொருள், பிள்ளை, பெற்றோரை விட நேசம் கொள்ளல்.
* நபி காட்டிய வழியை ஏற்று நபி தடுத்த விடயங்களை விட்டும் தூரமாகுதல்.
* நபி போதித்த மார்க்கத்தை ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் கடைப்பிடித்தல்.
* நபியின் மீது எப்போதும் ஸலவாத்து கூறல்.
* நபி எத்திவைத்த குர்ஆனை தினம் தோறும் ஓதுதல்
* நபி போதித்த குர்ஆனின் விளக்கங்களைப் படித்தல்.
* நபியின் தூய வரலாற்றை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தல்.
* நபியுடன் தியாகங்கள் புரிந்த உத்தம ஸஹாபாக்களையும் குடும்பத்தாரையும் மதித்தல்.
* நபியின் பெயரால் கூறப்படும் செய்திகளுக்கு தகுந்த ஆதாரம் கேட்டல்.
* நபியின் நம்பகத் தன்மையை நிரூபிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டும் பின்பற்றல்.
* நபிக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் ஆதாரமற்ற, போலியான ஹதீஸ்களை விட்டு விடுதல்
* நபியை அல்லாஹ்வின் அந்தஸ்துக்கு உயர்த்துவதோ இணையாக ஆக்குவதோ ஆட்சேபித்தல்.
* நபியை சாதாரண மனித நிலைக்கு -கீழ் தரத்துக்கு- பேசுவதை கண்டித்தல்.
* நபியை இறுதி நபியாக அகில மக்களுக்கும் ரஹ்மத்தாக அனுப்பப்பட்டவர் என உறுதியாக நம்புதல்.
* நபிக்கு பின் இன்னுமொருவர் தன்னை நபி என வாதிடுவதையோ போதிப்பதையோ கண்டால் பலமாக எதிர்த்தல்.
* நபியுடைய தூதுத்துவத்தை மனித சமூகத்திற்கு எத்திவைத்தல்.
* நபியுடைய வழிமுறைக்கு மாற்றமாக தோன்றும் அத்தனை பிரிவுகளையும் விட்டு ஒதுங்குதல்.
* நபியை முழுமையாக ஒவ்வொரு வினாடியும் பின்பற்றுவதே நபிக்கு செலுத்தும் மரியாதையும் கௌரவமுமாகும்.

Jazakkallahu Hairan நன்றிhttp://islam-bdmhaja.blogspot.com/
பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள்.

தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.
S.E.A. முஹம்மது அலி ஜின்னா
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி

புன்னகையில் பலவிதம்! சிரிப்பில் சிலவிதம்!

முதியவர்கள் முன்பு காட்டும் புன்னகை
மரியாதை குறிக்கிறது

குழந்தைகளிடம்  காட்டு சிரிப்பு
குற்றமற்றதை குறிக்கிறது
...
நண்பர்
களிடம் புன்னகை
பராமரிப்பு குறிக்கிறது
 

தாய்லாந்து விலைமகள் இதழில் வாணிபப் புன்னகை

மொபைல் தொடர்புடன் வரும் புன்னகை உண்மையின்    வெளிப்பாடு.  


புன்னகை மனதிற்கு எத்தகைய இதமளிக்கிறது என்பதைப் பெரும்பாலும் நாம் அனைவரும் இயற்கையாகவே உணர்ந்திருப்போம்


மகிழ்வு அதிகமாகி வாய்விட்டு  சிரிப்பதும் ஒரு சிறப்புதான் .

புன்னகை



தேக மரத்தின்
வதனக் கிளையில்
மொட்டு உதட்டின்
புன்னகை

அடடா
பூமியில் பிறக்கும்
தேவதை நீயோ
பூக்களும் செய்யும்
அர்ச்சனை

கன்னியர் கண்ணில்
கவிதைக் கீற்றாய்
மின்னலடிக்கும்
புன்னகை

அவளின்
உள்ளக் கள்வன்
பெயரைச் சொல்ல
புன்னகை பூக்கும்
புன்னகை









விலைமகள் இதழில்
வாணிபப் புன்னகை
வேதனைக் காம்பினில்
சுழலும்

அவளின்
நிலைதனைக் கூறும்
தகவல் பலகை
உயிரை அறுக்கும்
அவலம்

வாழ்க்கை ஊஞ்சலில்
ஆடிடும் இளமை
பூத்துக் குலுங்கும்
புன்னகை

இரவில்
தூங்கிய பூமியை
எழுப்பும் சூரியன்
விடியலாய் விரிக்கும்
புன்னகை

வாங்கிய கடனைக்
கொடுத்தவன் வந்தால்
வட்டிக்கு உதிரும்
புன்னகை

பொழுதும்
வறுமைக் கலைஞன்
உதட்டில் கூட
வறண்டு உடையும்
புன்னகை

உழைக்கும் மக்கள்
உதட்டில் புதைந்து
உயிரை இழக்கும்
புன்னகை

அதனைப்
பிழைக்க வைக்கக்
குரல்கள் நீட்டும்
புரட்சிக் கருத்தின்
புன்னகை

மெய்யோ பொய்யோ
புன்னகை சிந்து
பொய்கள் விலகும்
தோற்று


புவியில்
அய்யோ துயரம்
போர்கள் போதும்
புன்னகை ரத்தம்
ஏற்று

Source : http://anbudanbuhari.blogspot.com

Monday, September 19, 2011

'கப்பலுக்குப் போன மச்சான்!' - துபாய்க்கு பயணம்போயி வருஷம் ஆறாச்சு

பெண்:
கப்பலுக்குப் போன மச்சான் கண்ணெறஞ்ச ஆச மச்சான்
கப்பலுக்குப் போன மச்சான் கண்ணெறஞ்ச ஆச மச்சான்
எப்பத்தான் வருவீங்க எதிர்பார்க்கிறேன் - நான்
இரவும் பகலும் தொழுது தொழுது கேட்கிறேன்

ஆண்:
கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
இன்ஷா அல்லாஹ் விரைவில் வருவேன் - உன்
இஷ்டம்போல நெனச்சதெல்லாம் தருவேன்

பெண்:
அக்கரைக்குப் போனதுமே அக்கறையும் போயிடுச்சோ
அன்று சொன்ன வார்த்தைகளின் அர்த்தங்களும் மாறிடுச்சோ
சர்க்கரைமேல் கோபப்பட்டு கட்டெறும்பும் ஓடிடுச்சோ
சங்கதி தெரியலையே மன்னன் மனம் வாடிடுச்சோ
(கப்பலுக்குப் போன...)

ஆண்:
அன்னமே அடிக்கரும்பே ஆவல் என்னை மீறுதடி (2)
எண்ணெய்க் கிணறுபோலே எண்ணமாய் ஊறுதடி
உன்னை அங்கு விட்டுவந்து உள்மனசு வாடுதடி
உள்ளபடி சொன்னாக்கா உயிர் அங்கே வாழுதடி (2)
(கண்ணுக்குள்ளே வாழ்பவளே...)

பெண்:
துபாய்க்கு பயணம்போயி வருஷம் ஆறாச்சு
துள்ளிவரும் காவிரிபோல் கண்ணு ரெண்டும் ஆறாச்சு
ஏக்கத்திலே நானிங்கே தூங்கி ரொம்ப நாளாச்சு
தாயகம் வந்திடுங்க தக்கதுணை நானாச்சு

ஆண்:
பாலைநிலமெல்லாமே சோலைவனமாகுதடி
பாயிறது நீராக மச்சானின் வேர்வையடி
பாடுபட்டு சேர்க்குறது பைங்கிளியே ஏதுக்கடி
பாவை உனக்கல்லாமே பாரிலே யாருக்கடி
(கண்ணுக்குள்ளே வாழ்பவளே...)

பெண்:
துல்ஹஜ்ஜு மாசத்திலே கடிதம் ஒன்னு போட்டீங்க
நலமா சுகமான்னு பாசம்வச்சி கேட்டீங்க
இங்கெனக்கு என்ன குறை மாடிமனை பஞ்சமில்ல
இருக்குறேன் நாயகனே இன்னும் நான் சாகவில்ல


ஆண்:
ஈச்சமரத் தோப்புக்குள்ளே எழுந்தாச்சு கட்டிடமே
ஈரைந்து மாசத்திலே தீர்ந்துவிடும் ஒப்பந்தமே
ஆச்சுது ஒருவாறு அன்புநகைப் பெட்டகமே
ஆக்கப்பொறுத்தவளே ஆறப்பொறு ரத்தினமே (2)

கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
இன்ஷா அல்லாஹ் விரைவில் வருவேன் - உன்
இஷ்டம்போல நெனச்சதெல்லாம் தருவேன்
நான் தருவேன் நான் தருவேன் நான் தருவேன்
நான் தருவேன் நான் தருவேன்....

பாடியவர்கள்: காயல் ஏ.ஆர்.ஷேக் முஹம்மது & எல்.ஆர்.அஞ்சலி.
பாடலாசிரியர்: கவிஞர் நாகூர் சலீம்.

Saturday, September 17, 2011

மின்னல் இடையால் ...காணாமல் போய் விட்டாள்!!



மின்னல் இடை கொடியிடை என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற இடையை நினைத்துப் பார்க்கும் போது

நடையா இது நடையா – ஒரு
நாடகமன்றோ நடக்குது
இடையா? இது இடையா? – அது
இல்லாததுபோல் இருக்குது.
என்ற கண்ணதாசனின் பாடல் நினைவுக்கு வரும் .
‘மெல்லிடை’
நூலிடை’
“இடையே இல்லை”- என்னும் இடை.
பளு தாங்காமல் ஒடிந்து விடும் இடை
கொடி இடை
எடையை தூக்கினால் ஒடிந்து விடும் இடை... இவையல்லாம் மறைந்து விட்டது! 

அம்மி அரைப்பது ,கும்மி கொட்டுவது, அம்மி-உரல்-குடக்கல்,  உடலை வில்லாய் வளைத்து  குனிந்து வீடு  பெருக்குவது ஏதுமில்லை .இனிவரும் தலைமுறைகள் அம்மி, அடிப்பம்பு, உலக்கை, குடக்கல் போன்றவற்றை மியூசியத்தில் மட்டும்தான் பார்க்க முடியும் ... திருமணத்திற்கு அம்மிமிதிப்பது போய் கிரைண்டர்தான் மிதிக்க முடியும் ....  புத்தகப்  பளு கொடுத்து கூன் விழ வாய்ப்பினை ஏற்படுத்தி விட்டோம்  ஆனால் அளவுக்கு மேல் பள்ளிக்கூடம் செல்லும்  பிள்ளைகளுக்கு புத்தகப்  பளு கொடுத்து கூன் விழ வாய்ப்பினை ஏற்படுத்தி விட்டோம் 
தமிழ் நாட்டில் வடநாட்டு இனிப்பு (எங்கு பார்தாலும் சேட்டு ஸ்வீட் ஸ்டால்) உணவை விருப்ப உணவாக்கி இடை என்பது இல்லை அது வயிறாக மாறிவிட்டது .சாப்பிட்டு உடல் பருமனால் அலங்கோலமாய்க் காட்சி அளிக்கும் நிலை .

Friday, September 16, 2011

உங்கள் கல்வி தொடர உதவி நாட அகரம் பௌன்டேசன் -'helping the under-privileged' - Agaram Foundation

உதவி செய்ய தயாராக இருக்கும் நடிகர் சூர்யா. நமது வாழ்த்துகள் அகரம் பௌன்டேசனுக்கும் நடிகர் சூர்யாஅவர்களுக்கும் .
வாழ்க .வளர்க உங்கள் தொண்டு .

தொலைபேசி எண் +919841891000
உதவி நாட www.agaram.in
உங்கள் கல்வி தொடர உதவி நாட அகரம் பௌன்டேசன்  
தேவையென்றால் தயங்காமல் அனுகுங்கள்.   www.agaram.in
அகரம் பவுண்டேஷன் நிர்வாகியின் தொலைபேசி எண்   9841091000.

 
We are an organization working towards helping the under-privileged in attaining their right to knowledge and quality education.

"Education promotes civilization and enables an individual to conquer challenges. I am reminded of Vladimir Lenin here when he came to power he said the first thing he would reform is education second is education and third is education. We are still at the grassroots its high time we realize that education is no more a want but a basic necessity in life apart from food, shelter and clothing. It is an answer to overcome eco imbalance of not only an individual, but of the family and ultimately the society Help extended to an individual in any other form only benefits that individual but when you impart education you are providing hope to the whole family which in turn benefits the society."

~MR.SURIA (ACTOR)

Surya and Jyothika at Agaram Foundation Launch, Surya and ...

இலவசங்களை விற்றால் கைது! அரசு எச்சரிக்கை

சென்னை: அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி மக்களுக்கு இலவசப்பொருட்களை வழங்கினார். இந்நிலையில் முதற்கட்டமாக 25 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டது. இந்த 3 பொருட்களையும் மக்கள் எளிதாக கொண்டு செல்லும் வகையில் பேக்கிங் செய்து கொடுக்கப்பட்டது. அரசின் சார்பில் வழங்கப்பட உள்ள இலவச பொருட்களை எந்தவித முறைகேடுக்கும் இடமின்றி நெறிமுறைகள் வகுத்து மக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர். அரசு இலவசமாக வழங்கும் மிக்சி, கிரைண்டர், மின் விசிறியை விலைக்கு விற்பது சட்டப்படி குற்றம் என்று அரசு அறிவித்துள்ளது. ஏழைகள் முன்னேற வழங்கப்படும் இந்த பொருட்களை யாரும் விலைக்கு விற்க கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது. இதேபோல் கடைக்காரர்களும் தமிழக அரசின் இலவச பொருட்களை மக்களிடம் இருந்து வாங்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அரசின் நோக்கத்துக்கு மாறாக யார் நடந்து கொண்டாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரி ஒருவர் கூறினார். இலவச பொருட்களின் மீது தமிழக அரசு குறியீட்டுடன் வாசகம் எழுதப்பட்டிருக்கும். இதை கடையில் யார் விற்றாலும் கண்டிப்பாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். எனவே பொதுமக்கள் தங்களின் முழு பயன்பாட்டுக்கு இவற்றை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Source : http://www.inneram.com/

Thursday, September 15, 2011

Cambodian boy suckles milk from cow பையன் மாட்டின் மடியிலிருந்து பால் அருந்தும் மகிழ்வு

கம்போடிய  நாட்டு 18 மாத பையன் மாட்டின் மடியிலிருந்து பால் அருந்தும்  மகிழ்வு 

ஒரு மாதத்திற்கும் மேலாக தினமும் ஒரு மாட்டின் மடியிலிருந்து நேரடியாக பால் அருந்தும் 18 மாத கம்போடியம் பையன் நன்றாக சுகாதார உள்ளான். பெற்றோர் வேலை தேடி தாய்லாந்து சென்ற போது தாயிடம் இருந்து மார்பக-பால் நிறுத்தியதால், பையன் உடல் நிலை மோசமானது, மாட்டின் மடியிலிருந்து நேரடியாக பால் நேரடியாக பால் அருந்தும்  பழக்கம் வந்துவிட்டது பையன் நன்றாக சுகாதார உள்ளான் என்றும் குழந்தையின் தாத்தா  தெரிவித்தார் 

தலைப்பு இல்லை என்ற தலைப்பில் பேசிய அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல்  அனைவரையும்  வியக்கவைக்கும் .
அவரது ஆங்கிலப் பேச்சாற்றல் ஆங்கிலேரையே வியக்கவைக்கும் அளவுக்கு இருந்தது.
சென்னை லயோலா கல்லூரியில் நான்  படித்துக் கொண்டிருந்த  போது நடந்த நிகழ்வு.

அன்றைய காலக்கட்டங்களில் கல்லூரிகளில் அரசியல் பேச அனுமதிக்கப்படுவதில்லை.

சென்னை கிருஸ்துவக் கல்லூரி மாணவர்கள் அறிஞர் அண்ணா அவர்களை மேடையில் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள்.
எங்களுக்கும் அழைப்பு வந்திருந்தது, நாங்களும் சென்றோம்.
“எந்த தலைப்பில் பேச வேண்டும்? என்று அறிஞர் அண்ணா அவர்கள் வினவ,
அதற்கு மாணவர்கள், “தலைப்பு எதுவும் இல்லை. உங்கள் விருப்பமான தலைப்பில் நீங்கள் பேசலாம் என்றார்கள்.
மேடை ஏறிய அண்ணா அவர்கள்  தலைப்பு இல்லை என்பதால் "தலைப்பு இல்லை"  என்பதையே    தலைப்பாக வைத்து பேசுகிறேன்" என்று கூறி ஒரு அருமையான உரையை  நிகழ்த்தினார்கள்.
மாணவர்கள்களின் மகிழ்வும், கைதட்டலும் அரங்கு முழுதும்
எதிரொலித்தது.

Wednesday, September 14, 2011

காதலும் கொஞ்சம் கவிதைகளும்


(கனடா கீதவாணி வானொலி வழியே)

காற்றுச் சிறகேறி
காதுகளின் உயிர் தீண்டி
வேற்றுமொழி தேசத்தில்
ஊற்றுத் தமிழ் கூட்டி
ஒய்யாரமாய் உலாவரும்
உயர் கீத வாணியே
உயர்வாய் நீ நாளுமே


வணக்கம்

கீதவாணியும் தமிழ்நாடு கலாச்சார சங்கமும் இணைந்து வழங்கும் இந்த தமிழக நேரத்தில் என் கவிதைகளோடு உங்களைச் சந்திப்பதில் நான் பெருமிதமடைகிறேன்.

கனடாவில் தமிழனை உயர்த்தவும் தமிழ்ப் பண்பாட்டைக் காக்கவும் பல வழிகளில் தொண்டாற்றும் தமிழ்நாடு கலாச்சாரச் சங்கம் என்றென்றும் வாழ்க

இனி காதலும் கொஞ்சம் கவிதைகளும் என்ற தலைப்பில் உங்கள் உள்ள வனங்களில் மெல்லப் பூக்க வருகிறேன் உங்கள் செவி மொட்டுக்களை என்பால் கொஞ்சம் மலரச் செய்யுங்கள்

முதலில் காதலைப் பற்றிய ஒரு சிறு விளக்கமாய் ஒரு வரியில் எனக்குள் உருவான ஒரு கவிதை

காதல் எனப்படுவது யாதெனில்

இதயங்களின்
புனிதமான பகுதியிலிருந்து
நெகிழ்வான பொழுதுகளில்
இயல்பாகக் கழன்றுவிழும்
மிக மெல்லிய உயிர் இழைகளால்
சாட்சியங்களோ
சட்டதிட்டங்களோ இல்லாமல்
சுவாரசியமாய்ப் பின்னப்படும்
ஓர் உறுதியான உணர்வுவலை

Tuesday, September 13, 2011

தங்கமான தங்கம் கிளியனூர் இஸ்மத் தங்கத்தைப் பற்றி

தாறுமாறாக தாவுகிறது தங்கம்



தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாகவே ஏறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பலருடைய மனதில் இது இறங்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்துக் கொண்டுதானிருக்கிறது. தங்கத்தைப் பற்றிய சில கட்டுரைகளை அவ்வபோது பதிவிட்டுள்ளேன்.

கடந்த வருடம் அக்டோபரில் தங்கம் விலை ஏறுமா இறங்குமா? என்ற தலைப்பில் தங்கத்தின் ஏற்றத்தைப் பற்றியும், தேவை உள்ளவர்கள், சேமிப்பவர்கள், யோசிக்காமல் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று நிபுணர்களின் ஆலோசனையும் குறிப்பிட்டிருந்தேன். அதன்படி யாராவது வாங்கி வைத்திருந்தால் இன்று அவர்களுக்கு 30% லாபத்தை தங்கம் தந்திருக்கும்.
இந்த ஒரு வாரக்காலத்தில் தங்கத்தின் போக்கு வரலாறு காணத அளவில் தாறுமாறாக விலை ஏறிக் கொண்டிருக்கிறது. இப்படி தாறுமாறாக விலை ஏறுவதின் காரணம் என்ன? என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம்.

எஸ் அண்டு பி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம் அமெரிக்காவின் கடன் தகுதிக்கான ஏஏஏ குறியீட்டை ஏஏ+ ஆக குறைத்தது. அமெரிக்காவின் கடன் பெறும் தகுதி குறைந்ததால் அதன் தாக்கம் தங்கத்தின் மீது பாய்ந்துள்ளது.

டாலரை நம்பிக்கொண்டிருந்த நாடுகள், தங்களை காப்பாற்றிக் கொள்ள தங்கத்தை நம்புகிறார்கள். இதில் சீனா தங்கம் சேமிப்பில் கடந்த சில ஆண்டுகளாக அதிதீவிரம் காட்டிவருகிறது, தற்போது சீனாவிடம் தங்கத்தின் கையிருப்பு 1051.10 டன்னாக இருக்கிறது.

எத்தனை இடருகள் அமெரிக்காவிற்கு வந்தாலும் அதைப் பற்றி அது கவலைப்பட போவதில்லை; காரணம் உலகில் அதிகமாக தங்கம் வைத்திருக்கும் நாடு அமெரிக்கா என பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பதே காரணம். இறுதி ஆயுதமாக அமெரிக்கா நாட்டை காப்பாற்ற தங்கத்தில் கை வைக்கலாம் அமெரிக்காவிடம் உள்ள தங்கத்தின் இருப்பு 8133.5 டன்.

Monday, September 12, 2011

திருக்குறள் இசைத்தமிழ் - இசைக் குறுவட்டுகள்- இலவமாகப் பதிவிறக்கம்

இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களைப் பயன்படுத்தி இசைக் கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 திருக்குறள் இசைத்தமிழ்க் குறுவட்டினை இலவமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைப்பினைச் சொடுக்கவும்.

குறுவட்டு - 1

1. அகரம் முதல எழுத்தெல்லாம்
Source : http://ta.cict.in/thirukkural330-tamil-maiyam

"அற்புதம் என்றாலும் ஆண்டவன் என்றாலும் "

"அற்புதம் என்றாலும் ஆண்டவன் என்றாலும் "
என்ற இந்த அர்த்தமுள்ள பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் எனது ஆசிரியத் தந்தை நீடூர் வக்கில் S.E.A. முஹம்மது சயீத் அவர்கள்.
- தேரிழந்தூர் தாஜுதீன்
பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,
அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.
S.E.A. முஹம்மது அலி ஜின்னா நீடூர். Jazakkallahu Hairan நன்றி

Saturday, September 10, 2011

தேவையான படங்கள், ஆவணகள், கையடக்க ஆவண வடிவமைப்புகள் பதிவிறக்கவும் மற்றும் பார்க்கவும்