Friday, April 29, 2011

மனம் மகிழுங்கள் - 46 : அறியாத மனசு - மகிழ்வே பரிசு!

மனம் மகிழுங்கள்!
46 - அறியாத மனசு - மகிழ்வே பரிசு!

- நூருத்தீன்
'மனம் மகிழ வேண்டும் என்று கடந்த நாற்பத்து சொச்சம் வாரங்களாய் என்னென்னவோ படித்து விட்டோம்; உரையாடிக் கொண்டோம். இறுதியில் மனம் என்றால் என்ன; எப்படியிருக்கும் என்ற கேள்வி அப்படியே இருக்கிறது. அதற்கு ரத்தம், சதை, தோல் உண்டா; அதன் உணர்வுகளுக்கு நிறம் உண்டா என்றெல்லாம் யோசித்தால், இல்லை என்று சொல்வதா; தெரியாது என்பதா?


·         நாம் மனதால் நினைப்பதை எப்படிக் கவர்ந்து இழுக்கிறோம்?

·         நாம் பயப்படுவது எப்படி நம்மை வந்தடைகிறது?

·         மனம், ஆழ்மனம் என்பதையெல்லாம் எங்கு காண்பது?

·         என் மனம் உற்சாகமாயிருக்கிறது; எனது உடல் ஆரோக்கியமாய் இருக்கிறது என்று நம்பும்போது நம்மிடம் ஏற்படும் மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன? அதனுடைய பலனை எப்படி விவரிப்பது?

·         நம்முடைய சிந்தனைகள் எப்படி நம்முடைய வாழக்கையை அமைக்க உதவுகின்றன; அல்லது மாற்றி அமைக்கின்றன?

·         CTScan-ஆல் செய்ய இல்லாவிட்டால் போகட்டும். நமது சிந்தனைகளை ஐஃபோனாவது படம்பிடித்துக் காண்பிக்குமா?

இப்படி விடாமல் சுற்றிவளைத்து எப்படிக் கேள்வி கேட்டாலும் தர்க்க ரீதியாய்ப் பார்க்கப் போனால் அதற்கு விளக்கங்கள் குறைவு; அல்லது இல்லை.

ஒரு விஷயத்தை உணர்வதும் அது எப்படிச் செயல்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்வதும் இரு வேறு விஷயங்கள். மனமும் அதன் உணர்வுகளும் எப்படிச் செயல்படுகின்றன என்பது நமக்குத் தெரியாது! அறிவியல் அதைத் தெளிவுபடுத்தவில்லை. சொல்லப்போனால் அறிவியல் எதையுமே தெளிவுபடுத்தாது. அதன் வேலையெல்லாம் ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடித்துச் சொல்லவேண்டும்; அவ்வளவுதான்!

உள்ளுணர்வு என்கிறார்கள்; மனதிற்குக் காந்தசக்தி உண்டு, ஈர்ப்பு விசை இருக்கிறது என்கிறார்கள்.. இதையெல்லாம் ஏதோ ஒருவிதமாய்ப் பொத்தாம் பொதுவாய் உணர்ந்து கொள்கிறோம்; மண்டையையும் ஆட்டிக் கொள்கிறோமே தவிர அவற்றையெல்லாம் எப்படிப் புரிந்து கொள்வது?

Monday, April 25, 2011

தினம் இரவினில் நாம் தூங்கிடும் நேரம்...



தூக்கம்
யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உறங்கச் செல்லும் போது ஓதும் துஆ.
1734. ‘நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் ‘யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டு விட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்’ என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்” என்று என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது ‘நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்’ என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்”.
http://www.islamkalvi.com/portal/?p=2534

The Prophet also said: ‘When you are about to sleep recite aayat-ul-kursiyy till the end of the verse for there will remain over you a protection from Allaah and no devil will draw near to you until morning.’
பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,

Friday, April 22, 2011

இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்)

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹு)உங்கள் அனைவரும் மீது 
அல்லாஹுவுடைய சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ! 

நிச்சயமாக எவர்கள் (ஓரிறை )நம்பிக்கை கொண்டு ,நற்செயல்கள் செய்து தொழுகையைக் கடைப்பிடித்து ,ஜகாத்தையும் கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய( நற் ) கூலி அவர்களுடைய ரப்பிடத்தில் இருக்கிறது -இன்னும் அவர்களுக்கு எவ்வித பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும்மாட்டார்கள் .அல்பகரா :277

''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911


அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கின்றார்கள் : (நபி (ஸல்) அவர்களை நோக்கி) ஒரு மனிதர் "முஹம்மதே! எங்களின் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள், மேலும் ஷைத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம். அல்லாஹ்வின் மீது ஆணை! எனக்கு அல்லாஹ் வழங்கிய தகுதியை விட என்னை உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்" (அஹ்மது : ஹதீஸ் எண்: 12141)

"நிச்சயமாக நான் உங்களைப் போன்ற மனிதனே! திண்ணமாக உங்கள் இறைவன் ஒரே இறைவன் என எனக்கு (இறைவனிடமிருந்து) வெளிப்பாடு வருகின்றது, யார் தன் இறைவனின் சந்திப்பை ஆதரவு வைக்கிறாரோ அவர் அறச்செயல்களைச் செய்து தன் இறைவனை வணங்குவதில் எவரையும் இணையாக்காமல் இருக்கட்டும் என்று (நபியே!) நீர் கூறும்!" (திருக்குர்ஆன் 18: 110)

வார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள்.

Thursday, April 21, 2011

மனம் மகிழுங்கள் - 45 : ரிலாக்ஸ் ப்ளீஸ்!

மனம் மகிழுங்கள்!
45 - ரிலாக்ஸ் ப்ளீஸ்!
- நூருத்தீன்
'தொண்டையில் நிற்கிறது வரமோட்டேன் என்கிறது’; ‘இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன், எங்கேன்னு ஞாபகம் வரலை’ என்று மூளையைக் கசக்கிக் கொள்வோம் தெரியுமா? அப்படிச் சிரமப்படும்போதோ, ஒரு பிரச்சினையை, சிக்கலை, வேலையை, முடித்தே தீரவேண்டும் என்று பதறும்போதோ அது நடைபெறாமல் மேலும் சிக்கலாகி, எரிச்சல் அதிகமாகி, கோபம், ஆத்திரம், மகிழ்வு இழத்தல்.. இத்தியாதி.....!

சிக்கலான நேரங்களில் அந்தப் பிரச்சினையை ஒத்திவைத்து, அதன் போக்கிற்கு விட்டுவிட்டு நாம் ரிலாக்ஸ்டாக இருந்தால் போதும்; எங்கிருந்தோ திடீரென ஒரு பொறி பறந்து வந்து ஒரு விடை தரும்; நம் பிரச்சினைக்குத் தீர்வு தென்படும். குளியலறை, கழிவறை, படுக்கையறை போன்ற இடங்களில் நாம் இயல்பாய் நம் இறுக்கம் தளர்த்தியுள்ள தருணங்களில் அவை நடைபெறும் என்று உளவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கழிவறையில் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்போது புது ஐடியாக்கள் சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. அப்பொழுது மறவாமல் செல்ஃபோனையும் வெளியே விட்டுவிட்டுச் செல்ல வேண்டும்.

அறிவியல் ரீதியாய் இதற்கு விளக்கம் சொல்கிறார்கள். நாம் ‘அப்பாடா’ என்று ரிலாக்ஸ்டாக இருக்கும்போது நம் மூளையின் சந்தம் நிதானமான வகையில் செயல்படுகிறதாம். அந்நேரம் நம் திறமையும் சிந்தனா சக்தியும் அதிகரித்து, அவை உற்சாகமாய்ச் செயல்பட, பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண முடிகிறது; புதிதாய் ஏதேனும் திட்டம் உருவாகிறது.

அதற்காகக் கணிதத் தேர்வு சிக்கலாக இருக்கிறது, சட்டென்று விடை யோசிக்க முடியவில்லை எனச் சொல்லி இடையில் கிளம்பிச் சென்று சிறிது தூங்கிவிட்டு, குளித்துவிட்டு வருகிறேன் என்றால் சரிவராது. நன்றாகப் படித்துவிட்டுத் தேர்வுக்குச் செல்வது ஒன்றே வழி.

Wednesday, April 20, 2011

உனக்குள் ஒரு சுரங்கம்: "கணவன்-மனைவி” - S.A. மன்சூர் அலியுடன் ஒரு நேர்காணல்




திருமணம் எனது வழிமுறை ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல என்பது நபிமொழி (அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரி)
 
நீ நல்லொழுக்கமுள்ளவளை மணம் புரிவதன் மூலம் வெற்றியடைந்துகொள்! என நபி(ஸல்) அவர்கள் அறிவுரை பகன்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)
    பெண்களை அவர்களின் அழகுக்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் அழகு அவர்களை அழித்துவிடலாம்; அவர்களின் செல்வத்திற்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் செல்வம் அவர்களை தவறச் செய்திடலாம்; நல்லொழுக்கத்திற்காக அவர்களை மணமுடியுங்கள்; நல்லொழுக்கமுள்ள அழகற்ற கருநிறத்து அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள பெண்ணைவிட) மேலானவள் என நபி(ஸல்) அவர்கள் விளக்கினார்கள். (அறிவிப்பு: இப்னு அம்ர்(ரழி) நூல்: இப்னு ஹிப்பான், அஹ்மத்)
''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது செல்வத்திற்காக 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக 3. அவளது அழகிற்காக 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! ( என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ 5090, முஸ்லிம் 2661

Friday, April 15, 2011

மனம் மகிழுங்கள் - 44 : குழந்தை மனம்

44 - குழந்தை மனம்!
- நூருத்தீன்
யற்கையின் மாசுமறுவற்ற மற்றொரு வடிவம் குழந்தை. குழந்தைகளின் பேச்சும் சிரிப்பும் லூட்டியும் தூய்மை. கள்ளம், கபடம் கலக்காதவை. அவர்களுக்கு முன்தீர்மானங்கள் இருப்பதில்லை. இடம், பொருள் பார்த்துப் பேசவேண்டும், கூடாது என்பதெல்லாம் எதுவும் அவர்களுக்கு இல்லை. அதனாலேயே அவர்களின் பேச்சோ சிரிப்போ நமக்குப் பொத்துக்கொண்டு வரும் சிரிப்பையோ சங்கடத்தையோ ஏற்படுத்திவிடும்.

தன் ஐந்து வயது மகளைக் குளிப்பாட்டும்போது தாய் பெருமையோடு கூறினாள், "இங்கே பாரு! உன் தலைமுடி எவ்ளோ நீளமா வளருது".

அதற்கு மகள் முகத்தைச் சிணுங்கலாக வைத்துக்கொண்டு, "நீதான் என் தலைல நெறய்ய தண்ணி ஊத்துற".

அவர்களது உலகம் வேறு. அவர்களின் குறிக்கோள் மிகவும் எளிதானது. மகிழ்வாய் இருக்க வேண்டும். பசித்தால், விழுந்தால், வலித்தால், ஓர் அழுகை. சமாதானம் செய்து கவனித்துக்கொள்ள பெற்றோராச்சு. பிரச்சினை தீர்ந்ததா? அடுத்ததாகத் தூக்கம், விளையாட்டு, சிரிப்பு. பெரியவர்கள் நாம்தான் குழந்தைகளுக்கு algorithm, trigonometry என்று அவர்களுடைய எளிய பாலகத்திலேயே திணித்து, கற்றுத்தந்து, அவர்களது குழந்தைத் தன்மையை விரட்டிவிட்டுத்தான் மறுவேலை என்று அடம் பிடிக்கிறோம். ஓரமாய் அமர்ந்து நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தால், பலன் ஏராளம். சொப்புப் பாத்திரத்தில் உணவு, பானம் எல்லாமும்கூட கிடைக்கலாம். வயிறு நிறையாது; ஆனால் மனம் இலேசாகும்.

Wednesday, April 13, 2011

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - மயிலாடுதுறையில் நேரடி கேள்வி பதில் P.J

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மயிலாடுதுறையில்
முஸ்லிமல்லாத மக்களுக்கான இஸ்லாம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி பதிலளிப்பவர் P Jainul Abdeen


Tuesday, April 12, 2011

இறைவனிடம் கை ஏந்துங்கள்... Dua

இறைவனிடம் கை ஏந்துங்கள்

அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை

பொறுமையுடன் கேட்டு பாருங்கள்

அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை''
''இல்லை என்ற சொல்லும் மனம் இல்லாதவன்

ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன்

இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்

எண்ணங்களை இதயங்களை பார்க்கின்றவன்

இறைவனிடம் கை ஏந்துங்கள்.........''

''தேடும் நேயர் நெஞ்சினில் குடியிருப்பவன்

தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்

வாடும் இதயம் வளர்வதற்கு வழிவகுப்பவன்

வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்

அலை முழங்கும் கடல் அமைத்து அழுகு பார்ப்பவன்

அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்

தலை வணங்கி கேட்பவருக்கு தந்து மகிழ்பவன்

தரணி யெங்கும் நிறைந்து இருக்கும் மகா வல்லவன்''

'ஆசையுடன் கேட்பவருக்கு அள்ளித்தருபவன்

அள்ளல் துன்பம் துயரங்களை கிள்ளி எறிபவன்

பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்

பாவங்களை பார்வையினால் மாய்கின்றவன்

அள்ளல்படும் மாந்தர்களே அயராதீர்கள்

அல்லாவின் பேற் அருளை நம்பி நில்லுங்கள்

அவனிடத்தில் குறை அனைத்து சொல்லிக் காட்டுங்கள்

அன்புனோர்க்கு தருக என்று அழுது கேளுங்கள்...

இறைவனிடம் கையெந்துங்கள்

அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.......''

'இறைவனிடம் கை ஏந்துங்கள்

அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை

பொறுமையுடன் கேட்டு பாருங்கள்

அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை''

இறைவனிடம் கை ஏந்துங்கள்.... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத நாகூர் E M ஹனீஃபா அவர்கள் பாடிய பாடல்
பாடல் இயற்றியவர் : கிளியனூர் கவிஜர் சலாம் அவர்கள்.

Saturday, April 9, 2011

மனம் மகிழுங்கள் - 43 : இயைந்து வாழ்!

மனம் மகிழுங்கள்!
43 - இயைந்து வாழ்!
- நூருத்தீன்
ம் வாழ்க்கையின் நிகழ்வுகளுக்கும் இயற்கையின் விதிகளுக்கும் தொடர்பிருக்கிறது; இயற்கை நமக்குப் பாடம் கற்றுத்தருகிறது என்பதைக் கடந்த வாரம் பார்த்தோம். கிரகங்கள், நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன், பூமி, மலை, கடல், மணல், சுண்டல், தூசு ஆகியனபோல் இந்த அகண்டப் பெரும் பிரபஞ்சத்தில் நாமும் ஓர் அங்கம். இயற்கை இவற்றிற்கெல்லாம் விதி நிர்ணயித்துள்ளதைப் போன்று நமக்கும் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் முந்தைய அத்தியாயங்களில் அறிந்து கொண்டோம். அவை யாவை எனக் கொஞ்சமாய்த் தெரிந்து கொள்வோம்.

“எம்மாம் பெரிய தேக்கு மரம்!” என்று ஒரு மரத்தைப் பார்த்து வியந்து போகிறீர்கள். அது அம்மாம் பெரிசாக வளர்ந்து நிற்கப் பலகாலம் ஆகியிருக்கும்; இல்லையா? ஒரே இரவில் யாரும் அதைக் கொண்டு வந்து நட்டு வைத்துவிடவில்லையே. பளபளக்கும் வைரங்களைப் பார்த்துவிட்டு வாங்குவதற்கு வழியில்லாமல் முகவாய்க் கட்டையைச் சொறிந்து கொண்டே புருவம் உயர்த்தி ஆச்சரியப்படுகிறோம். அது ஒன்றும் வாரஇதழ்போல் ஒரே வாரத்தில் உருவாவதில்லை அல்லவா? எதுவொன்றும் தம் அழகையும் தரத்தையும் மேன்மையையும் அடைந்து அற்புதமாய்ப் பரிணமிக்க, குறிப்பிட்ட காலத்தைச் செலவிட்டிருக்கின்றது.

கோடை ஸ்பெஷல்: இது பெற்றோர்களுக்கு!

கோடை நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. படு சீரியஸாக தேர்வுகளை எழுதி முடித்து விட்டு மாணவர்களும் மாணவிகளும் - எதிர் வரும் கோடை விடுமுறையை "ஜாலியாக" எப்படிக் கழிக்கலாம் என வெகு ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் அவர்கள்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய சவால்.சில பெற்றோர் - "ஏன் தான் இந்தக் கோடை வருகிற்தோ" என்று அலுத்துக் கொள்ளும் அளவுக்கு அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

எனவே பெற்றோர்களாகிய உங்களுக்கு சில ஆலோசனைகள்:

அவர்களுடன் கொஞ்ச நேரம்

பள்ளிக்கூட நாட்களில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கென ஒதுக்குகின்ற நேரம் மிக மிகக் குறைவு. இந்தக் கோடையிலாவது கொஞ்சம் அதிகம் நேரம் செலவிடுங்களேன். அது Quality time ஆக அமைந்து விடட்டும். மனம் விட்டுப் பேசுங்கள். "அவர்களுடைய உலகத்தைப்" புரிந்து கொள்ளுங்க்ள். அவர்களுக்குப் "போர்" அடிக்கும் அளவுக்கு நீ.....ண்ட உங்கள் சொற்பொழிவைத் துவங்கி விட வேண்டாம். அவர்களைப் பேச விட்டுக் கேளுங்கள். அவர்கள் மனம் திறப்பார்கள். அவர்களைப் புரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு!

தொழுகை

Thursday, April 7, 2011

முதியோர் இல்லம்



அழுது புலம்பும்
பிரசவத்தில்;
அரை மயக்கத்திலும் உன்
அழும் குரலுக்கு
ஆனந்தமாய் நான் அன்று!

பாலுக்கு ஏங்கி
உன் சிவந்த
இதழ்கள் இரண்டும்
பிதிங்கியதைக் கண்டு;
மனம் பதுங்கியக்
காலம் அன்று!

பள்ளிக்கு
முரண்டுப் பிடிக்கும்
உன் பாதம்
இரண்டையும் பக்குவமாய்
திருப்பியக் காலம் அன்று!

நீ மெத்தப் படிக்க
ஒத்த வீட்டையும்
விற்றுத் தீர்த்து;
உன் படிப்பிற்குத்
தீணியானது அன்று!

Saturday, April 2, 2011

"அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்"



இன்னும், அவரிடம் அவருடைய இறைவன்; "(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்" என்று சொன்னபோது அவர், "அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்" என்று கூறினார். (குர்ஆன் -2:131 சூரத் அல் -பக்ராஹ்)
When his Lord said to him, "Submit", he said "I have submitted [in Islam] to the Lord of the worlds."
 
இன்னும் கூறுவீராக "எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவன் சீக்கிரத்தில் உங்களுக்குத் தன் அத்தாட்சிகளைக் காண்பிப்பான்; அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" மேலும் உம்முடைய இறைவன் நீங்கள் செய்வதை விட்டும் பராமுகமாக இல்லை.-குர்ஆன் 27:93 சூரத்  அன் -நம்ள்Surat An-Naml (The Ant) -سورة النمل

And say, "[All] praise is [due] to Allah . He will show you His signs, and you will recognize them. And your Lord is not unaware of what you do."

Friday, April 1, 2011

மனம் மகிழுங்கள் - 42 : இயற்கை மனம்

மனம் மகிழுங்கள்!
42 - இயற்கை மனம்
- நூருத்தீன்
இந்தப் புவியும் அண்டமும் அதற்கும் அப்பால் இருக்கின்ற அண்டங்களும் நிர்ணயிக்கப்பட்ட விதியின்படி, ஓர் ஒழுங்குமுறைப்படி ஒவ்வொரு நொடியும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை முன்னரே ஒரு முறை பேசிக் கொண்டோம். உதாரணமாய், புவி ஈர்ப்பு விதி! அது நம் எல்லோருக்கும் தெரியும். கடையிலிருந்து வாங்கி வந்த மளிகைப் பையை மேசையின்மீது வைக்காமல் பொத்தென்று போட்டால் அது மிதக்கவோ, மேல் நோக்கிச் செல்லாமலோ நம் காலில் நச்சென்று விழுந்து, அடுத்த நொடி “ஆ!"
பருவகாலம், வெயில், மழை, இலை, தழை, அதை மேயும் ஆடு, கம்பத்தைப் பார்த்ததுமே பின்னங்கால்களுள் ஒன்றைத் தூக்கும் நாய் என்று அனைத்திலும் ஒரு விதி உள்ளது. இயற்கையான இந்த 'இயற்கை விதி'களை இயற்கையாகவே நாம் உணர்ந்து வைத்திருக்கிறோம்.
நெருப்பில் விரல் நீட்டினால் சுடும் என்பது விவரம் அறியாத வயதுவரை தானே? அதன் பிறகு?
சுவரில் இருக்கும் மின்விசைத் துளையில் சுண்டுவிரலைச் செருகினால் என்னாகும், இரும்பு காந்தத்தை நெருங்கினால் என்னாகும், தெருவோரக் கடையில் தேநீர் அருந்திக்கொண்டு நிற்கும் வாலிபனை, தாவணிப் பெண்ணொருவள் ஓரப்பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தால் நிகழ்வுறப்போகும் ரசாயண மாற்றம் என்ன என்பதெல்லாம் நமக்குத் தெரிந்திருக்கிறது.
கண்களால் காண இயலாவிட்டாலும் இதிலுள்ள விதிகளை நம்பும் நாம் வெற்றி தோல்விகளுக்கு நம்முடைய செயல்களுடன் உள்ள தொடர்பைமட்டும் எளிதில் நம்ப மறுக்கிறோம். மரத்தடி கிளி, வானில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் கிரகம், ஏதோ அவசரத்தில் நம் எதிரே ஓடிய பூனை என்று ஏதாவது ஒரு காரணம் தேவைப்படுகிறது.
இறைவன் நிர்ணயித்த விதியின்படி உங்களது செயல்களுக்கு ஏற்ப முடிவுகள் அமைகின்றன; செயல்கள் உங்களது மன எண்ணங்களுக்கு ஏற்ப நிகழ்வுறுகின்றன.
பணததை எடுத்துத் தொழிலில் போட்டு இரா, பகல் என்று திட்டமிட்டு உழைத்தால் லாபம். ஊரார் பணத்தை எடுத்து நம் பையில் போட்டுக்கொண்டால் தர்ம அடியோ, திஹார் ஜெயிலோ நிச்சயம். எடுத்த பணத்திலுள்ள பூஜ்யங்களின் எண்ணிக்கை அதை நிர்ணயிக்கும்.
மனதையும் அதன் எண்ணங்களையும் சக்தியையும் அவரவரும் அவரவர் மொழியில் வியாக்கியானம் செய்கிறார்கள். ப்ளாட்டோ (Plato) எனும் கிரேக்க தத்துவஞானி, “உண்மைநிலை என்பதை நம் மனமே உருவாக்குகிறது. நாம் நமது மனதை மாற்றிக் கொள்வதன் மூலம் உண்மை நிலையை மாற்றிவிடலாம்' என்கிறார். மார்கஸ் அரிலியஸ் (Marcus Aurelius) என்ற கிரேக்க சக்ரவர்த்தியோ, “ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது அவனது எண்ணங்கள் அதை உணர்ந்து கொள்வதைப் பொறுத்து" என்று எழுதி வைத்துவிட்டார்.
விஞ்ஞானிகளுக்குத் தத்துவத்திற்கெல்லாம் நேரமில்லை அல்லவா? அதனால் அவர்கள் தங்கள் மொழியில் விவரிக்கிறார்கள். உங்கள் வீடு, கார், பல் குத்தும் குச்சி, கன்னத்தில் மிச்சமிருக்கும் உங்கள் மனைவியின் லிப்ஸ்டிக் இவையெல்லாம் என்ன? உடைத்துக் கொண்டே போனால் அணுவும் அணுத்துகளும்! கண்ணுக்குப் புலப்படா அணுவும் அதன் அதிர்வுகளுமே நாம் காணும் பற்பல பிம்பங்கள். அணுவின் தொகுப்பு அவை அதிரும் சக்திகளுக்கேற்பவே திடப்பொருள்கள் அமைகின்றன.
புரிவதைப்போல் இருக்கிறது என்று நாம் தலையாட்டினால் தொடர்கிறார்கள். அதனால் உங்களுக்குள் எண்ணம் என்று ஒன்று ஏற்படும்போது மூளையிலிருந்து ஒரு சக்தி உருவாகிறது. அந்த சக்திக்கு அதிர்வு உண்டு. ஒவ்வொரு வினைக்கும் அதற்கேற்ப எதிர்வினை உண்டு என்றுதானே விஞ்ஞானம் கூறுகிறது. அதனால் உங்கள் மனதில் ஏற்படும் சக்தியின் அதிர்வுக்கு ஏற்ப எதிர்வினை ஏற்படுகிறது என்று நம்மை எங்கேயோ அழைத்துச் சென்றுவிடுகிறார்கள்.
“ஆத்தா வெய்யும்; சந்தைக்கு போவனும்; ஆள விடு" என்று ஓடிவர வேண்டியிருக்கிறது.
இங்கு அடிப்படையாய் நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்னவெனில் –
நம் வாழ்க்கையின் நிகழ்வுகளுக்கும் இயற்கையின் விதிகளுக்கும் தொடர்பிருக்கிறது என்பதே. எனவே இயற்கையின் விதிகளில் நம் மன மகிழ்விற்குத தேவையான பாடங்கள் அமைந்துள்ளன. அவற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். செயற்கை முறை எல்லாம் இல்லாமல் இயற்கையான ஆரோக்கியமான பாடங்கள் அவை என்கிறார்கள். என்னென்ன என்று அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்ப்போம்.
ந்தப் புவியும் அண்டமும் அதற்கும் அப்பால் இருக்கின்ற அண்டங்களும் நிர்ணயிக்கப்பட்ட விதியின்படி, ஓர் ஒழுங்குமுறைப்படி ஒவ்வொரு நொடியும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை முன்னரே ஒரு முறை பேசிக் கொண்டோம். உதாரணமாய், புவி ஈர்ப்பு விதி! அது நம் எல்லோருக்கும் தெரியும். கடையிலிருந்து வாங்கி வந்த மளிகைப் பையை மேசையின்மீது வைக்காமல் பொத்தென்று போட்டால் அது மிதக்கவோ, மேல் நோக்கிச் செல்லாமலோ நம் காலில் நச்சென்று விழுந்து, அடுத்த நொடி “ஆ!"
பருவகாலம், வெயில், மழை, இலை, தழை, அதை மேயும் ஆடு, கம்பத்தைப் பார்த்ததுமே பின்னங்கால்களுள் ஒன்றைத் தூக்கும் நாய் என்று அனைத்திலும் ஒரு விதி உள்ளது. இயற்கையான இந்த 'இயற்கை விதி'களை இயற்கையாகவே நாம் உணர்ந்து வைத்திருக்கிறோம்.

நெருப்பில் விரல் நீட்டினால் சுடும் என்பது விவரம் அறியாத வயதுவரை தானே? அதன் பிறகு?

சுவரில் இருக்கும் மின்விசைத் துளையில் சுண்டுவிரலைச் செருகினால் என்னாகும், இரும்பு காந்தத்தை நெருங்கினால் என்னாகும், தெருவோரக் கடையில் தேநீர் அருந்திக்கொண்டு நிற்கும் வாலிபனை, தாவணிப் பெண்ணொருவள் ஓரப்பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தால் நிகழ்வுறப்போகும் ரசாயண மாற்றம் என்ன என்பதெல்லாம் நமக்குத் தெரிந்திருக்கிறது.